சனி, 22 ஜூன், 2024

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION



PDF download link

👇👇👇👇👇👇👇👇👇👇

✅✅✅Click here✅✅


-----------------------------------------------------------------------



ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்





வெள்ளி, 17 மே, 2024

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் நூல் ஆசிரியர்கள 2024

 

சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள் நூல் ஆசிரியர்கள 2024



PDF download link

👇👇👇👇👇👇👇👇👇

✅✅✅👉Click here👈✅✅✅✅


-----------------------------------------------------------------------



ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்





வியாழன், 16 மே, 2024

பொது தமிழ் வினா விடை 2024 பகுதி 2

 

               TNPSC CHANNEL

                பொதுத்தமிழ்

                                         ( TNPSC) கட்டாய ினா விடை

Question 501.

நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று கூறியவர்

அ) வீ.முனிசாமி

ஆ) திருவள்ளுவர்

இ) திரு.வி.க

ஈ) கவிமணி

Answer:  ஆ) திருவள்ளுவர்

 

Question 502.

நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை?

அ) 41          ஆ) 42       இ) 43           ஈ) 44

Answer : ஆ) 42

 

Question 503.

'எழுதினான்' என்பது?

அ) பெயர்ப் பகுபதம்

ஆ) வினைப்பகுபதம்

இ) பெயர்ப் பகாப்பதம்

ஈ) வினைப் பகாப்பதம்

Answer:

ஆ) வினைப்பகுபதம்

Question 504.

பெயர்ப் பகுபதம்_______வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) ஏழு

Answer : இ) ஆறு

 

Question 505.

காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு.

அ) பகுதி

ஆ) விகுதி

இ) இடைநிலை

ஈ) சந்தி

Answer: இ) இடைநிலை

 

Question 506.

ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை?

அ) ஒன்று

ஆ) இரண்டு

இ) மூன்று

ஈ) நான்கு

Answer:

ஆ) இரண்டு

Question 507.

பசு என்னும் பொருள் தரும் சொல்?

அ) ஆ

ஆ)

இ) வீ

ஈ) கோ

Answer: அ) ஆ

 

Question 508.

கொடு என்னும் பொருள் தரும் சொல்?

அ) ஆ

ஆ)

இ) வீ

ஈ)

Answer: ஈ)

 

Question 509.

இறைச்சி என்னும் பொருள் தரும் சொல்?

) கா

ஆ)

இ) ஊ

ஈ)

Answer :

இ) ஊ

Question 510.

அம்பு என்னும் பொருள் தரும் சொல்?

) கா

ஆ)

இ) ஊ

ஈ)

Answer : ஈ)

 

Question 511.

நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர்?

அ) பவணந்தி முனிவர்

ஆ) ஆறுமுக நாவலர்

இ) தொல்காப்பியர்

ஈ) அகத்தியர்

Answer: அ) பவணந்தி முனிவர்

 

Question 512.

பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை?

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer :

அ) 6

Question 513.

பகாப் பதத்தின் வகை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) ஐந்து

Answer: ஆ) நான்கு

 

Question 514.

'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது.

அ) வனம் + இல்லை

ஆ) வனப்பு + இல்லை

இ) வனப்பு + யில்லை

ஈ) வனப் + பில்லை

Answer : ஆ) வனப்பு + இல்லை

 

Question 515.

'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது.

அ) வார்ப் எனில்

ஆ) வார்ப்பினில்

இ) வார்ப்பெனில்

ஈ) வார்பு எனில்

Answer:

இ) வார்ப்பெனில்

Question 516.

ஒரு வேண்டு கோள் என்னும் கவிதையை எழுதியவர்?

அ) தேனரசன்

ஆ) காளமேகப் புலவர்

இ) சுரதா

ஈ) முடியரசன்

Answer: அ) தேனரசன்

 

Question 517.

ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்.

அ) யானை

ஆ) குதிரை

இ) மான்

ஈ) மாடு

Answer: ஆ) குதிரை

 

Question 518.

'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) வண் + கீரை

ஆ) வண்ணம் + கீரை

இ) வளம் + கீரை

ஈ) வண்மை + கீரை

Answer:

ஈ) வண்மை + கீரை

Question 519.

கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்?

அ) கட்டியிடித்தல்

ஆ) கட்டியடித்தல்

இ) கட்டி அடித்தல்

ஈ) கட்டு அடித்தல்

Answer : ஆ) கட்டியடித்தல்

 

Question 520.

காளமேகப்புலவரின் இயற்பெயர்?

அ) வரதன்

ஆ) சுப்புரத்தினம்

இ) எத்திராசுலு

ஈ) சுப்ரமணியம்

Answer : அ) வரதன்

 

Question 521.

மாரி என்பதன் பொருள்?

அ) மழை        ஆ) உணவு

இ) இளமகள்     ஈ) திண்ணை

Answer:

அ) மழை

 

Question 522.

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்?

அ) காரியாசான்

ஆ) முன்றுறை அரையனார்

இ) விளம்பிநாகனார்

ஈ) பாரி

Answer : ஆ) முன்றுறை அரையனார்

 

Question 523.

பழமொழி நானூறு________நூல்களுள் ஒன்று.?

அ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ) பதினெண்மேல்கணக்கு

இ) சிற்றிலக்கியம்

ஈ) காப்பியம்

Answer: அ) பதினெண்கீழ்க்கணக்கு

 

Question 524.

திருநெல்வேலி_______மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர

ஆ) சோழ

இ) பாண்டிய

ஈ) பல்லவ

Answer :

இ) பாண்டிய

Question 525.

இளங்கோவடிகள்______மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார். அ) இமய

ஆ) கொல்லி

இ) பொதிகை

ஈ) விந்திய

Answer: இ) பொதிகை

 

Question 526.

திருநெல்வேலி________ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அ) காவிரி

ஆ) வைகை

இ) தென்பெண்ணை

ஈ) தாமிரபரணி

Answer: ஈ) தாமிரபரணி

 

Question 527.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர்.

அ) பாளையங்கோட்டை

ஆ) பேட்டை

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer:

அ) பாளையங்கோட்டை

Question 528.

வணிகம் நடைபெறும் பகுதியைப் ____________ என வழங்குதல் பண்டைய மரபு.

அ) பாளையங்கோட்டை

ஆ) பேட்டை

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer: ஆ) பேட்டை

 

Question 529

பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர்.

அ) பாளையங்கோட்டை

ஆ) திருநெல்வேலி

இ) சேரன்மாதேவி

ஈ) செங்கோட்டை

Answer : ஆ) திருநெல்வேலி

 

Question 530.

இலக்கியங்களில் திரிகூடமலை என்று குறிக்கப்படும் மலை?

அ) பொதிகை மலை

ஆ) குற்றால மலை

இ) பொருநை

ஈ) பேட்டை

Answer :

ஆ) குற்றால மலை

Question 531.

'ஓடை + எல்லாம்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்?

அ) ஓடை எல்லாம்

ஆ) ஓடையெல்லாம்

இ) ஒட்டையெல்லாம்

ஈ) ஓடெல்லாம்

Answer: ஆ) ஓடையெல்லாம்

 

Question 532.

மலை அருவி என்னும் நூலை தொகுத்தவர்?

அ) காரியாசான்

ஆ) கி.வா.ஜெகந்நாதன்

இ) விளம்பிநாகனார்

ஈ) பாரி

Answer : ஆ) கி.வா.ஜெகந்நாதன்

 

Question 533.

நாட்டுப்புறப்பாடல்களை___________என்றும் வழங்குவர்.

அ) வாய்மொழி இலக்கியம்

ஆ) பதினெண்மேல்கணக்கு

இ) சிற்றிலக்கியம்

ஈ) காப்பியம்

Answer:

அ) வாய்மொழி இலக்கியம்

Question 534.

சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவர்?

அ) திருமால்

ஆ) பொய்கை ஆழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) பேயாழ்வார்

Answer : அ) திருமால்

 

Question 535.

அந்தாதி என்பது_______வகைகளுள் ஒன்று.

அ) காப்பிய

ஆ) புதின

இ) சிற்றிலக்கிய

ஈ) பேரிலக்கிய

Answer: இ) சிற்றிலக்கிய

 

Question 536.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடலைத் தொகுத்தவர்.

அ) நாதமுனி

ஆ) பொய்கை ஆழ்வார்

இ) பூதத்தாழ்வார்

ஈ) பேயாழ்வார்

Answer:

அ) நாதமுனி

Question 537.

'இன்சொல்' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது.

அ) இனிய + சொல்

ஆ) இன்மை + சொல்

இ) இனிமை + சொல்

ஈ) இன் + சொல்

Answer: இ) இனிமை + சொல்

 

Question 538.

முனைப்பாடியாரின் காலம்

அ) கி.பி.5

ஆ) கி.பி.13

) கி.பி.10

ஈ) கி.பி.12

Answer: ஆ) கி.பி.13

 

Question 539

அறநெறிச் சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது.

அ) 225

ஆ) 223

) 252

) 525

Answer :

அ) 225

Question 540.

இளம் வயதிலேயே விதைக்க வேண்டியது?

அ) இனியசொல்

ஆ) ஈகை

இ) வன்சொல்

ஈ) உண்மைபேசுதல்

Answer : ஆ) ஈகை

 

Question 541.

உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) முடியரசன்

ஈ) கண்ணதாசன்

Answer: ஆ) பாரதிதாசன்

 

Question 542.

ஒப்புரவு நெறியை அறிமுகம் செய்வது?

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) புறநானூறு

ஈ) பழமொழி

Answer :

அ) திருக்குறள்

Question 543.

செல்வத்துப் பயனே ஈதல் - என்று கூறும் நூல்?

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) அகநானூறு

ஈ) பதிற்றுப்பத்து

Answer: ஆ) புறநானூறு

 

Question 544.

தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது?

அ) ஊருணி

ஆ) பயன்மரம்

இ) மருந்து மரம்

ஈ) ஒப்புரவு

Answer : அ) ஊருணி

 

Question 545.

ஊருணி, பயன்மரம் பற்றிக் குறிப்பிடும் நூல்?

அ) திருக்குறள்

ஆ) புறநானூறு

இ) அகநானூறு

ஈ) பதிற்றுப்பத்து

Answer: அ) திருக்குறள்

 

Question 546.

வாழ்க்கையின் கருவி?

அ) ஒப்புரவு

ஆ) பொருள்

இ) வறுமை

ஈ) மருந்து

Answer: ஆ) பொருள்

 

Question 547.

ஊருணியை அகழ்ந்தவன்?

அ) திருவள்ளுவர்

ஆ) அப்பரடிகள்

இ) மனிதன்

ஈ) வள்ளல்

Answer: இ) மனிதன்

 

Question 548.

செல்வத்துப் பயன்_______வாழ்க்கை.

அ) ஒப்புரவு

ஆ) பொருள்

இ) வறுமை

ஈ) மருந்து

Answer:

அ) ஒப்புரவு

Question 549

ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : அ) உவமை அணி

 

Question 550.

"வையகம் தகழியாக வார்கடல் நெய்யாக எனத் தொடங்கும் பாடலில் இடம்பெறும் அணி?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : ஆ) உருவக அணி

 

Question 551.

____________ ஒரு நாட்டின் அரணன்று?

அ) காடு            ஆ) வயல்

இ) மலை            ஈ) தெளிந்த நீர்

Answer:

ஆ) வயல்

 

Question 552.

ஒரு செயலைச் செய்யும் போது மற்றொரு செயலைச் செய்வதற்கு வள்ளுவர் கூறிய உவமை?

அ) யானை

ஆ) புலி

இ) மான்

ஈ) கொக்கு

Answer : அ) யானை

 

Question 553.

பிறப்பொக்கும்_______உயிர்க்கும்.

அ) எல்லா

ஆ) அனைத்து

இ) மக்கள்

ஈ) இயல்பு

Answer: அ) எல்லா

 

Question 554.

'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

அ) தன் + னாடு

ஆ) தன்மை +நாடு

இ) தன் + நாடு

ஈ) தன்மை + நாடு

Answer :

இ) தன் + நாடு

Question 555.

முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer: ஈ) கண்ணதாசன்

 

Question 556.

இயேசு காவியத்தை இயற்றியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கண்ணதாசன்

Answer: ஈ) கண்ணதாசன்

 

Question 557.

________ உடையோரே நற்பேறு பெற்றவர் ஆவர்.

அ) சாந்தம்

ஆ) அமைதி

இ) இரக்கம்

ஈ) அன்பு

Answer:

இ) இரக்கம்

Question 558.

'தானொரு' என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தா + ஒரு

ஆ) தான் + னொரு

இ) தான் + ஒரு

ஈ) தானே + ஒரு

Answer: இ) தான் + ஒரு

 

Question 559

'தன்னை அறிதல்' கவிதை இடம்பெறும் நூல்?

அ) மழை பற்றிய பகிர்தல்கள்

ஆ) வீடு முழுக்க வானம்

இ) மகளுக்குச் சொன்ன கதை

ஈ) எதுவுமில்லை

Answer : இ) மகளுக்குச் சொன்ன கதை

 

Question 560.

'காயிதேமில்லத்' என்னும் அரபுச்சொல்லுக்குச்_______என்பது பொருள்.

அ) சுற்றுலா வழிகாட்டி

ஆ) சமுதாய வழிகாட்டி

இ) சிந்தனையாளர்

ஈ) சட்டவல்லுநர்

Answer : ஆ) சமுதாய வழிகாட்டி

Question 561.

விடுதலைப்போராட்டத்தின் போது காயிதேமில்லத்________இயக்கத்தில் கலந்து கொண்டார்.

அ) வெள்ளையனே வெளியேறு

ஆ) உப்புக்காய்ச்சும்

இ) சுதேசி

ஈ) ஒத்துழையாமை

Answer: ஈ) ஒத்துழையாமை

 

Question 562.

காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்?

அ) சட்டமன்றம்

ஆ) நாடாளுமன்றம்

இ) ஊராட்சி மன்றம்

ஈ) நகர்மன்றம்

Answer : ஆ) நாடாளுமன்றம்

 

Question 563.

'எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து

எழுதக்கிடைப்பது.

அ) எதிர் + ரொலித்தது    ஆ) எதில் + ஒலித்தது

இ) எதிர் + ஒலித்தது.       ஈ) எதி + ரொலித்தது

Answer:

இ) எதிர் + ஒலித்தது

Question 564.

முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

சொல்.

அ) முதுமொழி

ஆ) முதுமைமொழி

இ) முதியமொழி

ஈ) முதல்மொழி

Answer : அ) முதுமொழி

 

Question 565.

'கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும்

தலைவர்.

அ) காந்தியடிகள்

ஆ) நேரு

இ) பெரியார்

ஈ) காயிதேமில்லத்

Answer: ஈ) காயிதேமில்லத்

 

Question 566.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு?

அ) 1962            ஆ) 1972

இ) 1982             ஈ) 1992

Answer:

அ) 1962

Question 567.

காயிதேமில்லத்தின் இயற்பெயர்?

அ) முகமது அலி

ஆ) முகமது ஜின்னா

இ) முகமது இசுமாயில்

ஈ) முகமது மைதீன்

Answer: இ) முகமது இசுமாயில்

 

Question 568.

காயிதேமில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய

இடம்?

அ) திருச்சி

ஆ) தஞ்சை

இ) கோவை

ஈ) மதுரை

Answer:அ) திருச்சி

 

Question 569.

பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகிவருவது?

அ) பொருளாகுபெயர்

ஆ) சினையாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) இடவாகுபெயர்

Answer : அ) பொருளாகுபெயர்

Question 570.

இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது.

அ) முதலாகுபெயர்

ஆ) சினையாகுபெயர்

இ) தொழிலாகுபெயர்

ஈ) பண்பாகுபெயர்

Answer : ஆ) சினையாகுபெயர்

 

Question 571.

மழை சடசடவெனப் பெய்தது. - இத்தொடரில் அமைந்துள்ளது

அ) அடுக்குத்தொடர்

ஆ) இரட்டைக்கிளவி

இ) தொழிலாகு பெயர்

ஈ) பண்பாகுபெயர்

Answer: ஆ) இரட்டைக்கிளவி

 

Question 572.

அடுக்குத்தொடரில் ஒரே சொல்__________முறை வரை அடுக்கி

வரும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer: இ) நான்கு

Question 573.

போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது என்பது _______குச்சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) காலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer: அ) இடவாகுபெயர்

 

Question 574.

திசம்பர் சூடினாள் என்பது_______ குச்சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) ககாலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer: ஆ) காலவாகுபெயர்

 

Question 575.

பொங்கல் உண்டான் என்பது _________குச் சான்றாகும்.

அ) இடவாகுபெயர்

ஆ) காலவாகுபெயர்

இ) பண்பாகுபெயர்

ஈ) தொழிலாகுபெயர்

Answer:

ஈ) தொழிலாகுபெயர்

Question 576.

ஏற்றத் தாழ்வற்ற ............ அமைய வேண்டும்.

அ) சமூகம்

ஆ) நாடு

இ) வீடு

ஈ) தெரு

Answer: அ) சமூகம்

 

Question 577.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நிலயென்று

ஆ) நிலவென்று

இ) நிலவன்று

ஈ) நிலவுஎன்று

Answer: ஆ) நிலவென்று

 

Question 578.

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள்

ஆ) தமிழெங்கள்

இ) தமிழுங்கள்

ஈ) தமிழ் எங்கள்

Answer:

ஆ) தமிழெங்கள்

Question 579

'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) அமுது + தென்று

ஆ) அமுது + என்று

இ) அமுது + ஒன்று

ஈ) அமு + தென்று

Answer: ஆ) அமுது + என்று

 

Question 580.

'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) செம்மை + பயிர்

ஆ) செம் + பயிர்

இ) செமை + பயிர்

ஈ) செம்பு + பயிர்

Answer: அ) செம்மை + பயிர்

 

Question 581.

'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) சீர் + இளமை

ஆ) சீர்மை + இளமை

இ) சீரி + இளமை

ஈ) சீற் + இளமை

Answer:

ஆ) சீர்மை + இளமை

Question 582.

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) சிலம்பதிகாரம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) சிலம்புதிகாரம்

ஈ) சில பதிகாரம்

Answer: ஆ) சிலப்பதிகாரம்

 

Question 583.

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கணினிதமிழ்

ஆ) கணினித்தமிழ்

இ) கணிணிதமிழ்

ஈ) கனினிதமிழ்

Answer: ஆ) கணினித்தமிழ்

 

Question 584.

"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று

பாடியவர்.

அ) கண்ண தாசன்       ஆ) பாரதியார்

இ) பாரதிதாசன்           ஈ) வாணிதாசன்

Answer:

ஆ) பாரதியார்

Question 585.

'மா' என்னும் சொல்லின் பொருள்

அ) மாடம்

ஆ) வானம்

இ) விலங்கு

ஈ) அம்மா

Answer: இ) விலங்கு

 

Question 586.

கழுத்தில் சூடுவது

அ) தார்

ஆ) கணையாழி

இ) தண்டை

ஈ) மேகலை

Answer: அ) தார்

 

Question 587.

கதிரவனின் மற்றொரு பெயர்.

அ) புதன்

ஆ) ஞாயிறு

இ) சந்திரன்

ஈ) செவ்வாய்

Answer:

ஆ) ஞாயிறு

Question 588.

வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வெண் + குடை

ஆ) வெண்மை + குடை

இ) வெம் + குடை

ஈ) வெம்மை + குடை

Answer: ஆ) வெண்மை + குடை

 

Question 589

'பொற்கோட்டு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

கிடைப்பது.

அ) பொன் + கோட்டு

ஆ) பொற் + கோட்டு

இ) பொண் + கோட்டு

ஈ) பொற்கோ +இட்டு

Answer: அ) பொன் + கோட்டு

 

Question 590.

கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

அ) கொங்கு அலர்

ஆ) கொங்அலர்

இ) கொங்கலர்

ஈ) கொங்குலர்

Answer: இ) கொங்கலர்

Question 591.

'சித்தம்' என்பதன் பொருள்.

அ) உள்ளம்

ஆ) மணம்

இ) குணம்

ஈ) வனம்

Answer: அ) உள்ளம்

 

Question 592.

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்______.

அ) அடுக்குகள்

ஆ) கூரை

இ) சாளரம்

ஈ) வாயில்

Answer: அ) அடுக்குகள்

 

Question 593.

நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நன் + மாடங்கள்

ஆ) நற் + மாடங்கள்

இ) நன்மை + மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

Answer:

இ) நன்மை + மாடங்கள்

Question 594.

நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

கிடைப்பது.

அ) நிலம் + இடையே

ஆ) நிலத்தின் + இடையே

இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே

Answer: ஆ) நிலத்தின் + இடையே

 

Question 595.

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) முத்துசுடர்

ஆ) முச்சுடர்

இ) முத்துடர்

ஈ) முத்துச்சுடர்

Answer: ஈ) முத்துச்சுடர்

 

Question 596.

நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நிலாஒளி         ஆ) நிலஒளி

இ) நிலாவொளி       ஈ) நிலவுஒளி

Answer:

இ) நிலாவொளி

 

Question 597.

'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) தட்பம் + வெப்பம்

ஆ) தட்ப + வெப்பம்

இ) தட் + வெப்பம்

ஈ) தட்பு + வெப்பம்

Answer: அ) தட்பம் + வெப்பம்

 

Question 598.

வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வேதி + யுரங்கள்

ஆ) வேதி + உரங்கள்

இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள்

Answer: ஆ) வேதி + உரங்கள்

 

Question 599

தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) தரையிறங்கும்

ஆ) தரை இறங்கும்

இ) தரையுறங்கும்

ஈ) தரைய்றங்கும்

Answer: அ) தரையிறங்கும்

Question 600.

வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

Answer: ஆ) வழித்தடம்

 

Question 601.

வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

Answer: ஆ) வழித்தடம்

 

Question 602.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி.

அ) துருவப்பகுதி

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு

Answer:

அ) துருவப்பகுதி

 

 

Question 603.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______.

அ) ஊக்கமின்மை

ஆ) அறிவுடைய மக்கள்

இ) வன்சொல்

ஈ) சிறிய செயல்

Answer: ஆ அறிவுடைய மக்கள்

 

Question 604.

ஒருவர்க்குச் சிறந்த அணி______.

அ) மாலை

ஆ) காதணி

இ) இன்சொல்

ஈ) வன்சொல்

Answer: இ) இன்சொல்

 

Question 605.

உடல் நோய்க்கு தேவை

அ) ஔடதம்       ஆ) இனிப்பு

இ) உணவு           ஈ) உடை

Answer.

அ) ஔடதம்

Question 606.

நண்பர்களுடன்_______விளையாடு.

அ) ஒருமித்து

ஆ) மாறுபட்டு

இ) தனித்து

ஈ) பகைத்து

Answer: அ) ஒருமித்து

 

Question 607.

'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) ஓய்வு அற

ஆ) ஒய் + அற

இ) ஒய் + வற

ஈ) ஓய்வு + வற

Answer: அ) ஒய்வு + அற

 

Question 608.

ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) ஏன்என்று

ஆ) ஏனென்று

இ) ஏன்னென்று

ஈ) ஏனன்று

Answer:

ஆ) ஏனென்று

Question 609

'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கண் + அறி

ஆ) கண்டு +அறி

இ) கண்ட + அறி

ஈ) கண் + டறி

Answer:

ஆ) கண்டு + அறி

 

Question 610.

ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

அ) ஒளடதமாம்

ஆ) ஒளடதம் ஆம்

இ) ஔடதாம்

ஈ) ஔடத ஆம்

Answer: அ) ஒளடதமாம்

 

Question 611.

அவன் எப்போதும் உண்மையையே_______.

அ) உரைக்கின்றான்

ஆ) உழைக்கின்றான்

இ) உறைக்கின்றான்

ஈ) உரைகின்றான்

Answer. அ) உரைக்கின்றான்

Question 612.

ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஆழமான + கடல்

ஆ) ஆழ் + கடல்

இ) ஆழ கடல்

ஈ) ஆழம் + கடல்

Answer: ஈ) ஆழம் + கடல்

 

Question 613.

விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) விண் + வளி

ஆ) விண் + வெளி

இ) விண் + ஒளி

ஈ) விண் + வொளி

Answer: ஆ) விண் + வெளி

 

Question 614.

நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) நீலம்வான்

ஆ) நீளம்வான்

இ) நீலவான்

ஈ) நீலவ்வான்

Answer:

இ) நீலவான்

Question 615.

இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) இல்லாது இயங்கும்

ஆ) இல்லாஇயங்கும்

இ) இல்லாதியங்கும்

ஈ) இல்லதியங்கும்

Answer: இ) இல்லாதியங்கும்

 

Question 616.

நுட்பமாகச் சிந்தித்து அறிவது

அ) நூலறிவு

ஆ) நுண்ணறிவு

இ) சிற்றறிவு

ஈ) பட்டறிவு

Answer: ஆ) நுண்ணறிவு

 

Question 617.

தானே இயங்கும் இயந்திரம்

அ) கணினி

ஆ) தானியங்கி

இ) அலைபேசி

ஈ) தொலைக்காட்சி

Answer: ஆ) தானியங்கி

Question 618.

'நின்றிருந்த என்னும்' சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நின் + றிருந்த

ஆ) நின்று + இருந்த

இ) நின்றி + இருந்த

ஈ) நின்றி + ருந்த

Answer: ஆ) நின்று + இருந்த

 

Question 619

'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அவ்வு + ருவம்

ஆ) அ + உருவம்

இ) அவ் + வுருவம்

ஈ) அ + வுருவம்

Answer: ஆ) அ + உருவம்

 

Question 620.

மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்

சொல்.

அ) மருத்துவம்துறை

ஆ) மருத்துவதுறை

இ) மருந்துதுறை

ஈ) மருத்துவத்துறை

Answer: ஈ) மருத்துவத்துறை

Question 621.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்.

அ) திருவாசகம்

ஆ) திருக்குறள்

இ) திரிகடுகம்

ஈ) திருப்பாவை

Answer: ஆ) திருக்குறள்

 

Question 622.

காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்.

அ) காவிரிக்கரை

ஆ) வைகைக்கரை

இ) கங்கைக்கரை

ஈ) யமுனைக்கரை

Answer: அ) காவிரிக்கரை

 

Question 623.

கலைக்கூடமாகக் காட்சி தருவது.

அ) சிற்பக்கூடம்

ஆ) ஓவியக்கூடம்

இ) பள்ளிக்கூடம்

ஈ) சிறைக்கூடம்

Answer:

அ) சிற்பக்கூடம்

Question 624.

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நூல் + ஆடை

ஆ) நூலா + டை

இ) நூல் + லாடை

ஈ) நூலா + ஆட

Answer: அ) நூல் + ஆடை

 

Question 625.

எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) எதிரலிக்க

ஆ) எதிர்ஒலிக்க

இ) எதிரொலிக்க

ஈ) எதிர்ரொலிக்க

Answer: இ) எதிரொலிக்க

 

Question 626.

இராதகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்.

அ) கவிமணி

ஆ) சுரதா

இ) வாணிதாசன்

ஈ) தாரா பாரதி

Answer:

ஈ) தாரா பாரதி

Question 627.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்ற கவிஞர்.

அ) கவிமணி      ஆ) சுரதா இ) வாணிதாசன்     ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 628.

விரல் நுனி வெளிச்சங்கள் என்ற கவிதையை எழுதிய கவிஞர்.

அ) கவிமணி ஆ) சுரதா  இ) வாணிதாசன் ஈ) தாரா பாரதி

Answer: ஈ) தாரா பாரதி

 

Question 629

அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக விளங்குவது.

அ) பாரத நாடு ஆ) குமரிமுனை இ) இமயமலை ஈ) தாரா பாரதி

Answer: அ) பாரத நாடு

 

Question 630.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்.

அ) கோவை

ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்

ஈ) சிதம்பரம்

Answer:

ஆ) மதுரை

 

Question 631.

மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மாச + அற

ஆ) மாசு + அற

இ) மாச + உற

ஈ) மாசு + உற

Answer: ஆ) மாசு + அற

 

Question 632.

குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்

கிடைக்கும் சொல்

அ) குற்றமில்லாதவர்

ஆ) குற்றம் இல்லாதவர்

இ) குற்றமல்லாதவர்

ஈ) குற்றம் அல்லாதவர்

Answer: அ) குற்றமில்லாதவர்

 

Question 633.

சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) சிறப்பு உடையார்

ஆ) சிறப்புடையார்

இ) சிறப்படையார் -

ஈ) சிறப்பிடையார்

Answer: ஆ) சிறப்புடையார்

Question 634.

"ஆத்திச்சூடி" நூலின் ஆசிரியர்.

அ) பூங்குன்றனார்

ஆ) ஒளவையார்

இ) கண்ணகனார்

ஈ) பிசிராந்தையார்

Answer: ஆ) ஔவையார்

 

Question 635.

"மன்னன்" சொல்லுக்கு தமிழில் வழங்கும் வேறு பெயர்?

அ) கோ

ஆ) அறிஞன்

இ) சான்றோன்

ஈ) பெரியன்

Answer: அ) கோ

 

Question 636.

ஔவையார் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி?

அ) ஆத்திச்சூடி

ஆ) புதிய ஆத்திச்சூடி

இ) கொன்ற வேந்தன்

ஈ) நல்வழி

Answer:

ஆ) புதிய ஆத்திச்சூடி

Question 637.

மூதுரையில் எத்தனை ாடல்கள் உள்ளன.

அ) 31

ஆ) 32

இ) 33

ஈ) 34

Answer: ) 31

 

Question 638.

துன்பத்தை வெல்ல________வேண்டும்.

அ) பணம்

ஆ) சினம்

இ) கல்வி

ஈ) படை

Answer: இ) கல்வி

 

Question 639

"நெறி" என்னும் சொல் தரும் பொருள்.

அ) வழி

ஆ) பாடு

இ) சேவை

ஈ) உறுதி

Answer:

அ) வழி

Question 640.

மானமில்லா__________யுடன் சேரக் கூடாது.

அ) மனிதன்

ஆ) வீரன்

இ) கோழை

ஈ) நண்பன்

Answer: இ) கோழை

 

Question 641.

காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்' என மனதாரப் பாராட்டியவர்.

அ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆ) தந்தை பெரியார்

இ) கண்ணதாசன்

ஈ) வாணிதான்

Answer: ஆ) தந்தை பெரியார்

 

Question 642.

காமராசர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்.

அ) சென்னை

ஆ) கோவை

இ) விருதுநகர்

ஈ) மதுரை

Answer:

ஈ) மதுரை

Question 643.

காமராசரின் சிறப்புப் பெயர்?

அ) தமிழ்த்தென்றல்

ஆ) நாவலர்

இ) கறுப்புக் காந்தி

ஈ) தென்னாட்டு பெர்னாட்ஷா

Answer:

இ) கறுப்புக் காந்தி

 

Question 644.

காமராசர் உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ள இடம்.

அ) திருச்சி

ஆ) மதுரை

இ) கோவை

ஈ) சென்னை

Answer: ஈ) சென்னை

 

Question 645.

காமராசருக்கு நடுவர் அரசு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு.

) 1974      ஆ) 1975

இ) 1976       ஈ) 1977

Answer:

இ) 1976

 

 

Question 646.

காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் எறக்குறைய_____தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

அ) 5000

ஆ) 6000

இ) 7000

ஈ) 8000

Answer: ஆ) 6000

 

Question 647.

மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள்

ஆ) வந்தான்

இ) கண்ணில்

ஈ) தம்பி

Answer: ) கண்ணில்

 

Question  648.

தவறான சொல்லை வட்டமிடுக.

அ) கண்டான்

ஆ) வென்ரான்

இ) நண்டு

ஈ) வண்டு

Answer: ஆ) வென்ரான்

 

Question 649.

தமிழ் எழுத்துகளில்________எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

அ) வல்லினம்

ஆ) மெல்லினம்

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) ஆய்த

 

Question 650.

'ஐ' என்னும் எழுத்துக்கு________என்பது இன எழுத்தாகும்.

அ) இ

ஆ) ஈ

இ) உ

) ஊ

Answer: அ) இ

 

Question 651.

எந்த எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.

அ)           ஆ)

இ)           ஈ)

Answer:

ஈ)

 

Question 652.

இன எழுத்து இல்லாத தமிழ் எழுத்து.

அ)

ஆ)

இ)

ஈ)

Answer: ஈ)

 

Question 653.

நெடிலைத் தொடர்ந்து அதற்கு இனமான குறில் எழுத்து இடம் பெறுவது.

அ) வல்லினம்

ஆ) அளபெடை

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) அளபெடை

 

Question 654.

'ஓஒதல்' என்பது?

அ) வல்லினம்

ஆ) அளபெடை

இ) இடையின

ஈ) ஆய்த

Answer: ஆ) அளபெடை

Question 655.

ஆசாரக் கோவையின் ஆசிரியர்?

அ) கணிதமேதாவியார்

இ) பெருவாயின் முள்ளியார்

ஆ) ஔவையார்

ஈ) பூங்குன்றனார்

Answer: இ) பெருவாயின் முள்ளியார்

 

Question 656.

ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

அ) 700

ஆ) 100

இ) 200

ஈ) 500

Answer: ஆ) 100

 

Question 657.

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்.

அ) கயத்தாறு

ஆ) கயத்தூர்

இ) வயலூர்

ஈ) கடலூர்

Answer:

ஆ) கயத்தூர்

Question 658.

ஆசாரக்கோவை எந்த நூலிகளில் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு

ஈ) பதினெண்மேற்கணக்கு

Answer: இ) பதினெண்கீழ்க்கணக்கு

 

Question 659

நட்டல் என்பதன் பொருள்______.

அ) நன்மை செய்தல்

ஆ) நட்புக்கொள்ளுதல்

இ) நறுமணம் வீசுதல்

ஈ) நன்றியறிதல்

Answer: ஆ) நட்புக்கொள்ளுதல்

 

Question 660.

நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை குறிப்பிடுபவை.

அ) 6

ஆ) 7

இ) 8

) 9

Answer: இ) 8

 

Question 661.

பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட்டி + சைத்து

ஆ) பாட்டி + இசைத்து

இ) பாட்டு + இசைத்து

ஈ) பாட்டு + சைத்து

Answer: இ) பாட்டு + இசைத்து

 

Question 662.

கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) கண் + உறங்கு

ஆ) கண்ணு +உறங்கு

இ) கண் + றங்கு

ஈ) கண்ணு + றங்கு

Answer: அ) கண் + உறங்கு

 

Question 663.

வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) வாழையிலை

ஆ) வாழை இலை

இ) வாழைலை

ஈ) வாழிலை

Answer: அ) வாழையிலை

Question 664.

கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) கைமர்த்தி

ஆ) கைஅமர்த்தி

இ) கையமர்த்தி

ஈ) கையைமர்த்தி

Answer: இ) கையமர்த்தி

 

Question 665.

உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்

அ) மறைந்த

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

Answer: அ) மறைந்த

 

Question 666.

"பார்" என்ற சொல்லின் பொருள்.

அ) கடை

ஆ) உலகம்

இ) கடவுள்

ஈ) கன்னன்

Answer: ஆ) உலகம்

 

Question 667.

"தாலாட்டு"__________ இலக்கியங்களுள் ஒன்று.

அ) சங்க

ஆ) நீதி

இ) வாய்மொழி

ஈ) நவீன

Answer: இ) வாய்மொழி

 

Question 668.

"தாலாட்டு"பிரிக்கும் முறை.

அ) தா + லாட்டு

ஆ) தாலா + அட்டு

இ) தா + இல் + ஆட்டு

ஈ) தால் + ஆட்டு

Answer:

ஈ) தால் + ஆட்டு

 

Question 669

"பண்" சொல் தரும் பொருள்

அ) இசை

ஆ) உணவு

இ) கோயில்

ஈ) புகழ்

Answer: அ) இசை

Question 670.

"தால்" என்னும் சொல் தரும் பொருள்.

அ) கால்

ஆ) பாதம்

இ) நாக்கு

) நெல்

Answer: இ) நாக்கு

 

Question 671.

விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்________கட்டுவர்.

அ) செடி

ஆ) கொடி

இ) தோரணம்

ஈ) அலங்கார வளைவு

Answer: இ) தோரணம்

 

Question 672.

பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) பொங்கலன்று

ஆ) பொங்கல் அன்று

இ) பொங்கலென்று

ஈ) பொங்க அன்று

Answer: அ) பொங்கலன்று

Question 673.

போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..

அ) போகி + பண்டிகை

ஆ) போ + பண்டிகை

இ) போகு + பண்டிகை

ஈ) போகிப் + பண்டிகை

Answer: அ) போகி + பண்டிகை

 

Question 674.

"லோரி" என்று கொண்டாடப்படும் திருவிழா.

அ) தீபாவளி

ஆ) பொங்கல்

இ) கிளித்தட்டு

ஈ) பம்பரம்

Answer: ஆ) பொங்கல்

 

Question 675.

"ஏறு தழுவுதல்" என்ற விளையாட்டின் மற்றொரு பெயர்.

அ) மாடு பிடித்தல்

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

Answer:

அ) மாடு பிடித்தல்

Question 676.

திருவள்ளுவராண்டு தொடங்குவது.

அ) ஆடி முதல் நாள்

ஆ) சித்திரை முதல் நாள்

இ) மார்கழி முதல் நாள்

ஈ) தை முதல் நாள்

Answer: ஈ) தை முதல் நாள்

 

Question 677.

மார்கழி மாதத்தின் இறுதி நாள்.

அ) உழவர் திருநாள்

ஆ) தமிழ்ப் புத்தாண்டு

இ) போகித் திருநாள்

ஈ) அவிட்டத் திருநாள்

Answer: இ) போகித் திருநாள்

 

Question 678.

விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

) நம் முகம் மாறினால்

) நம் வீடு மாறினால்

) நாம் நான்கு வரவேற்றால்

) நம் முகவரி மாறினால்

Answer:

) நம் முகம் மாறினால்

Question 679

நிலையான செல்வம்_______.

அ) தங்கம்

ஆ) பணம்

இ) ஊக்கம்

ஈ) ஏக்கம்

Answer: இ) ஊக்கம்

 

Question 680.

உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக்

கிடைக்கும் சொல்.

அ) உள்ளவது எல்லாம்

ஆ) உள்ளுவதெல்லாம்

இ) உள்ளுவத்தெல்லாம்

ஈ) உள்ளுவதுதெல்லாம்

Answer: ஆ) உள்ளுவதெல்லாம்

 

Question 681.

"அசைவிலா" பிரிக்கும் முறை.

அ) அசை + விலா

ஆ) அசைவு + இலா

இ) அசை + வில் +ஆ

ஈ) அசைவி + இலா

Answer: ஆ) அசைவு + இலா

Question 682.

முகர்ந்து பார்த்தால் வாடுவது.

அ) செம்பருத்தி மலர்

ஆ) ரோஜா மலர்

இ) அல்லி மலர்

ஈ) அனிச்ச மலர்

Answer: ஈ) அனிச்ச மலர்

 

Question 683.

"வயல்" சொல்லின் வேறு பெயர்_____.

அ) தோட்டம்

ஆ) காடு

இ) கழனி

ஈ) தோப்பு

Answer: இ) கழனி

 

Question 684.

வீரகாவியம் படைத்தவர்_________.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தமிழன்பன்

ஈ) முடியரசன்

Answer:

ஈ) முடியரசன்

Question 685.

"ஆழி"- சொல் தரும் பொருள்.

அ) குடுவை

ஆ) கப்பல்

இ) கடல்

ஈ) பறவை

Answer: இ) கடல்

 

Question 686.

"சமர்" - சொல் தரும் பொருள்.

அ) வலிமை

ஆ) துன்பம்

இ) கடமை

ஈ) போர்

Answer: ஈ) போர்

 

Question 687.

"தாழம்பூ" - எத்திணைக்கு உரியது?

அ) மருதம்

ஆ) குறிஞ்சி

இ) பாலை

ஈ) நெய்தல்

Answer:

ஈ) நெய்தல்

Question 688.

மீனவர்களுக்கு கடல் அலை_____________.

அ) தோழன்

ஆ) மெத்தை

இ) ஊஞ்சல்

ஈ) போர்வை

Answer: அ) தோழன்

 

Question 689

"கட்டுமரம்" - என்பது மீனவர்களுக்கு_____________.

அ) பள்ளிக்கூடம்

ஆ) கண்ணாடி

இ) தவம்

ஈ) வீடு

Answer: ஈ) வீடு

 

Question 690.

சுடர்” தரும் பொருள்_________.

அ) தீ

ஆ) ஒளி

இ) துன்பம்

ஈ) புகழ்

Answer:

ஆ) ஒளி

Question 691.

தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம்.

அ) சென்னை

ஆ) நாகப்பட்டினம்

இ) எண்ணூர்

ஈ) பூம்புகார்

Answer: ஈ) பூம்புகார்

 

Question 692.

அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை__________.

அ) மயில்தோகை

ஆ) தங்கம்

இ) குதிரைகள்

ஈ) கண்ணாடி

Answer: இ) குதிரைகள்

 

Question 693.

தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் ஒன்று.

அ) சர்க்கரை

ஆ) மருந்துகள்

இ) அரிசி

ஈ) பட்டு

Answer:

இ) அரிசி

Question 694.

'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என வணிகரைப் பாராட்டும் நூல்.

அ) திருக்குறள்

ஆ) அகநானூறு

இ) பட்டினப்பாலை

ஈ) குறுந்தொகை

Answer: இ) பட்டினப்பாலை

 

Question 695.

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது_________ அறிவுரை.

அ) பட்டுக்கோட்டையாரின்

ஆ) பாரதியாரின்

இ) ஔவையாரின்

ஈ) கபிலரின்

Answer: இ) ஔவையாரின்

 

Question 696.

தன் வாரிசுகளுக்கு அருளப்பர் கொடுத்த தொகை.

அ) பத்தாயிரம்

ஆ) இருபமாயிரம்

இ) ஐம்பதாயிரம்

ஈ) ஐந்தாயிரம்

Answer: இ) ஐம்பதாயிரம்.

Question 697.

வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) வணிகசாத்து

ஆ) வணிகம்சாத்து

இ) வணிகச்சாத்து

ஈ) வணிகத்துசாத்து

Answer: இ) வணிகச்சாத்து

 

Question 698.

பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

அ) பண்டமாற்று

ஆ) பண்டம்மாற்று

இ) பண்மாற்று

ஈ) பண்டுமாற்று

Answer: அ) பண்டமாற்று

 

Question 699

வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வண்ணம் + படங்கள்

ஆ) வண்ணப் + படங்கள்

இ) வண்ண + படங்கள்

ஈ) வண்ணமான + படங்கள்

Answer:

அ) வண்ணம்+ படங்கள்

Question 700.

விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) விரி + வடைந்த

ஆ) விரி + அடைந்த

இ) விரிவு + அடைந்த

ஈ) விரிவ் + அடைந்த

Answer: இ) விரிவு + அடைந்த

 

Question 701.

இலக்கண அடிப்படையில் சொற்கள் வகைப்படும்.

) ஒன்று    ஆ) இரண்டு

இ) மூன்று     ஈ) நான்கு

Answer: ஈ) நான்கு

 

Question 702.

பெயர்ச்சொல், வினைச்சொல்லின் தன்மையை மிகுதிப்படுத்த வரும் சொல்.

அ) இடைச்சொல்

ஆ) உரிச்சொல்

இ) திசைச் சொல்

ஈ) திரிசொல்

Answer: ஆ) உரிச்சொல்

 

 

Question 703.

செயலைக் குறிக்கும் சொல்.

அ) பெயர்ச்சொல்

ஆ) வினைச்சொல்

இ) இடைச்சொல்

ஈ) உரிச்சொல்

Answer: அ) வினைச்சொல்

 

Question 704.

கீழ்வருபவற்றுள் பெயர்ச்சொல் எது?

அ) எழுது      ஆ) சால

இ) மாற்று      ஈ) நன்மை

Answer: ஈ) நன்மை

 

Question 705.

என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று பாடியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) பெருஞ்சித்திரனார்

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்

 

Question 706.

பல மொழிகள் கற்ற புலவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer: அ) பாரதியார்

 

Question 707.

நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer: அ) தொல்காப்பியம்

 

Question 708.

தமிழ் - என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer:

அ) தொல்காப்பியம்

Question 709

தமிழ் நாடு- என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) தேவாரம்

Answer: ஆ) சிலப்பதிகாரம்

 

Question 710.

தமிழன்- என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்.

அ) தொல்காப்பியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) திருக்குறள்

ஈ) அப்பர் தேவாரம்

Answer: ) அப்பர் தேவாரம்

 

Question 711.

கமுகு(பாக்கு) தாவர இலைப்பெயர்.

அ) தாள்

ஆ) தழை

இ) புல்

ஈ)கூந்தல்

Answer:

ஈ) கூந்தல்

Question 712.

உழவர்' என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer: இ) நற்றிணை

 

Question 713.

'பாம்பு' என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer: ஈ) குறுந்தொகை

 

Question 714.

அரசுஎன்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்.

அ) கலித்தொகை

ஆ) திருக்குறள்

இ) நற்றிணை

ஈ) குறுந்தொகை

Answer:

ஆ) திருக்குறள்

Question 715.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு.

அ) இலங்கைத் தீவு

ஆ) இலட்சத் தீவு

இ) மணிபல்லவத் தீவு

ஈ) மாலத் தீவு

Answer: இ) மணிபல்லவத் தீவு

 

Question 716.

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்_____.

அ) சித்திரை

ஆ) ஆதிரை

இ) காயசண்டிகை

ஈ) தீவதிலகை

Answer: ஆ) ஆதிரை

 

Question 717.

மணிமேகலையின் வேறு பெயர்.

அ) பசிப்பிணி போக்கிய பாவை

ஆ) சமணத் துறவி

இ) தீயும் தீண்டாத தெய்வம்

ஈ) வீர மங்கை

Answer: அ) பசிப்பிணி போக்கிய பாவை

Question 718.

கோவலன் மாதவியின் மகள் பெயர்.

அ) மணிமேகலை

ஆ) குண்டலகேசி

இ கோப்பெருந்தேவி

ஈ) ஆதிரை

Answer: அ) மணிமேகலை

 

Question 719

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்." என்று பாடியவர்.

அ) பாரதிதாசன்

ஆ) பாரதியார்

இ) திருவள்ளுவர்

ஈ) கம்பர்

Answer: ஆ) பாரதியார்

 

Question 720.

மணிமேகலை________நகரைச் சேர்ந்தவள்.

அ) பூம்புகார்

ஆ) கொற்கை

இ) முசிறி

ஈ) தொண்டி

Answer: அ) பூம்புகார்

 

Question 721.

இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

அ) பறவை            ஆ) மண்

இ) முக்காலி         ஈ) மரங்கொத்தி

Answer: ஆ) மண்

 

Question 722.

காரணப்பெயரை வட்டமிடுக.

அ) மரம்

ஆ) வளையல்

இ) சுவர்

ஈ) யானை

Answer: ஆ) வளையல்

 

Question 723.

இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.

அ) வயல்

ஆ) வாழை

இ) மீன்கொத்தி

ஈ) பறவை

Answer:

ஆ) வாழை

 

Question 724.

"ஐந்து" இது எவ்வகைப் பெயர்.

அ) பொருட் பெயர்

ஆ) காலப் பெயர்

இ) சினைப் பெயர்

ஈ) பண்புப் பெயர்

Answer:

(ஈ) பண்புப் பெயர்

 

Question 725.

"குளம்" இது எவ்வகைப் பெயர்?

அ) இடுகுறிப் பெயர்

ஆ) காரணப் பெயர்

இ) பொதுப் பெயர்

ஈ) சிறப்புப் பெயர்

Answer: (அ) இடுகுறிப் பெயர்

 

Question 726.

பெட்டி என்பது________ஆகும்.

அ) இடுகுறிப் பெயர்

ஆ) காரணப் பெயர்

இ சுட்டுப் பெயர்

ஈ) தொழிற் பெயர்

Answer: (அ) இடுகுறிப் பெயர்

Question 727.

எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) எளிது + தாகும்

ஆ) எளி + தாகும்

இ) எளிது + ஆகும்

ஈ) எளிதா + ஆகும்

Answer: இ) எளிது + ஆகும்

 

Question 728.

உள்ளத்தில்___________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

அ) மகிழ்ச்சி

ஆ) மன்னிப்பு

இ) துணிவு

ஈ) குற்றம்

Answer: ஈ) குற்றம்

 

Question 729

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்.

அ) ஜீவ ஜோதி

ஆ) ஆசிய ஜோதி

இ) நவ ஜோதி

ஈ) ஜீவன் ஜோதி

Answer:

ஆ) ஆசிய ஜோதி

Question 730.

நேர்மையான வாழ்வை வாழ்பவர்.

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

Answer: அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

 

Question 731.

இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது?

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer : இ) ஏகதேச உருவக அணி

 

Question 732.

ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி?

அ) திருக்குறள்

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Answer : ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Question 733.

சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை.

அ) திருக்குறள்

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) புறப்பொருள் வெண்பாமாலை

Answer : அ) திருக்குறள்

 

Question 734.

“முதல் மாந்தன் தமிழன், அவன் பேசிய மொழி தமிழ்” என்று கூறியவர்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) திருக்குறள்

Answer : இ) தேவநேயப் பாவாணர்

 

Question 735.

நீர் இன்றி அமையாது உலகு_ இவ்வடி இடம் பெற்ற நூல்?

அ) நற்றிணை

ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து

ஈ) திருக்குறள்

Answer :

ஈ) திருக்குறள்

Question 736.

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலகதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

 சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்

அ) நாலடியார்   ஆ) பட்டினப்பாலை

இ) பதிற்றுப்பத்து   ஈ) திருக்குறள்

Answer : ) நாலடியார்

 

Question 737.

"எத்தனை உயரம் இமயமலை - அதில்

இன்னொரு சிகரம் உனது தலை!

எத்தனை ஞானியர் பிறந்த தரை -நீ

இவர்களை விஞ்சிட என்ன தடை?"

அ) பாரதியார்      ஆ) பாரதிதாசன்

இ) தாராபாரதி       ஈ) திருக்குறள்

Answer : இ) தாராபாரதி

 

Question 738.

சீவகசிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர்?

அ) கம்பர்                  ஆ) இளங்கோவடிகள்

இ) சீத்தலைசாதன்னார்    ஈ) திருத்தக்கதேவர்

Answer :

ஈ) திருத்தக்கதேவர்

Question 739.

தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்.

அ) பாரதியார்                ஆ) பாரதிதாசன்

இ) தேவநேயப் பாவாணர்    ஈ) திருக்குறள்

Answer :

ஆ) பாரதிதாசன்

 

Question 740.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ-இப்பாடல்

அமைந்துள்ள நூல்.

அ) நற்றிணை

ஆ) குறுந்தொகை

இ) பதிற்றுப்பத்து

ஈ) திருக்குறள்

Answer :

ஆ) குறுந்தொகை





PDF download free link...👇👇👇

    ✅✅✅Click here✅✅✅

 

__________________________

  

 

 

 


 ஆறாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf ✅கிளிக் செய்யுங்கள்

FULL VIDEO LINK✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅ கிளிக் செய்யுங்கள்


ஏழாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Full Video Link ✅கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅கிளிக் செய்யுங்கள்



எட்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்

Download pdf✅ கிளிக் செய்யுங்கள்

Study Material PDF✅



ஒன்பதாம் வகுப்பு தமிழ்புத்தகம்

பத்தாம் வகுப்பு தமிழ்புத்தகம்


பதினோராம் வகுப்பு தமிழ்புத்தகம்


பனிரெண்டாம் வகுப்பு தமிழ்புத்தகம்


குறிப்பு : விற்பனைக்கு அல்ல
நோக்கம் : ஏழை எளிய நண்பர்களும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்.


தொகுப்பாளர் 
R. சரண்ராஜ்



 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...