TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
இயல் 6 மனித உறுப்பு மண்டலங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருட்கள் _______
அ) ஆக்சிஜன்
ஆ) சத்துப் பொருட்கள்
இ) ஹார்மோன்கள்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
Question 2.
மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு ______
அ) இரைப்பை ஆ) மண்ணீ ரல்
இ) இதயம் ஈ) நுரையீரல்கள்
விடை: ஈ) நுரையீரல்கள்
Question 3.
நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது. அ) தசைச் சுருக்கம்
ஆ) சுவாசம்
இ) செரிமானம்
ஈ) கழிவுநீக்கம்
விடை:
இ) செரிமானம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
ஒரு குழுவான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குவது _____ மண்டலம் ஆகும்.
விடை:
உறுப்பு
Question 2.
மனித மூளையை பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _____ ஆகும்.
விடை:
மண்டையோடு
Question 3.
மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______ என்று பெயர்.
விடை:
கழிவு நீக்கம்
Question 4.
மனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு _____ ஆகும்.
விடை:
தோல்
Question 5.
நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருட்களுக்கு ______ என்று பெயர்.
விடை:
ஹார்மோன்கள்
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
இரத்தம் எலும்புகளில் உருவாகின்றது.
விடை:
தவறு – இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றது.
Question 2.
இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
விடை:
தவறு – இரத்த ஓட்ட மண்டலம் மனித உடலிலுள்ள கழிவுகளை கடத்துகிறது.
Question 3.
உணவுக் குழலுக்கு இன்னொரு பெயர் உணவுப்பாதை.
விடை:
தவறு – உணவுக் குழாயின் இன்னொரு பெயர் உணவுப் பாதை.
Question 4.
இரத்த ஓட்ட மண்டலத்திலுள்ள மிகச்சிறிய நுண்குழலுக்கு இரத்தக் குழாய்கள் என்று பெயர்.
விடை:
சரி
Question 5.
மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகள் சேர்ந்ததே நரம்பு மண்டலம் ஆகும்.
விடை:
சரி.
V. கீழுள்ளவற்றை முறைப்படுத்தி எழுதுக.
Question 1.
இரைப்பை → பெருங்குடல் → உணவுக்குழல் → தொண்டை → வாய் → சிறுகுடல் → மலக்குடல் → மலவாய்
விடை:
வாய் → தொண்டை → உணவுக்குழல் → இரைப்பை → சிறுகுடல் → பெருங்குடல் → மலக்குடல் → மலவாய்
Question 2.
சிறுநீர்ப் புறவழி → சிறுநீர்நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீரகம்
விடை:
சிறுநீரகம் → சிறுநீர் நாளம் → சிறுநீர்ப்பை → சிறுநீர்ப் புறவழி