தொகாநிலைத் தொடர்கள்
ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
எ.கா காற்று வீசியது குயில் கூவியது
தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும் .அவை
1. எழுவாய் தொடர்
2. விளித்தொடர் 3. வினைமுற்றுத் தொடர்
4. பெயரெச்சத் தொடர்
5. வினையெச்சத்தொடர்
6. வேற்றுமைத் தொடர் 7. இடைச்சொல் தொடர்
8. உரிச்சொல் தொடர்
9. அடுக்குத்தொடர்
1. எழுவாய்த்தொடர்
எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
இனியன் கவிஞர் – பெயர்
காவிரி பாய்ந்தது - வினை
பேருந்து வருமா? - வினா
2. விளித்தொடர்
விளியுடன் வினைதொடர்வது
விளித்தொடர் ஆகும்.
நண்பா எழுது! " நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.
3. வினைமுற்றுத்தொடர்
வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
பாடினாள் கண்ணகி "பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
4. பெயரெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
கேட்ட பாடல் "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.
5. வினையெச்சத்தொடர்
முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.
பாடி மகிழ்ந்தனர் "பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் " வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
6. வேற்றுமைத்தொடர்
வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.
7. இடைச்சொல் தொடர்
இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
மற்றொன்று - மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
8. உரிச்சொல் தொடர்
உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
சாலச் சிறந்தது "சால" என்பது
உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.
9. அடுக்குத் தொடர்
ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.
வருக! வருக! வருக! ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.
எ.கா.
கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி
DOWNLOAD PDF LINK
மேலும் அறிய... TNPSC CHANNEL