பொது தமிழ் இலக்கியம் வினா விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது தமிழ் இலக்கியம் வினா விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 4)

 TNPSC CHANNEL


குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட வினா விடை

து தமிழ்   (இலக்கியம்)







151.சேரமன்னன் சேரலாதனைப் பாடி அவனை மணந்தவர் யார்? நச்செள்ளையார்


152. நச்செள்ளையாரின் மற்றொரு பெயர் என்ன?

காக்கைப் பாடினியார் 


153.பத்துப்பாட்டு நூல்களில் மிகப்பெரிய நூல் எது?

மதுரைக்காஞ்சி


 154.பத்துப்பாட்டு நூல்களில் மிகச்சிறிய நூல் எது? 

முல்லைப்பாட்டு


155.நெடுஞ்சாற்றுப்படை எனப்படும் பத்துப்பாட்டு நூல் எது?

முல்லைப்பாட்டு


156.காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பைக் கூறும் 

நூல் எது?

பட்டினப்பாலை


157. திருப்புகழ் பாடியவர் யார்? 

அருணகிரிநாதர்


158.கடையேழு வள்ளல்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

சிறுபாணாற்றுப்படை


159. திருப்பாவையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

முப்பது


160.கரிகால் சோழனின் மகள் யார்? 

ஆதிமந்தியார்


161. இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண் புலவர் யார்? 

காக்கைப் பாடினியார் 


162.காக்கைப் பாடினியார் இயற்றிய இலக்கண நூல் எது?

காக்கைப் பாடினியம்


163.திருக்குறள் தவிர ஏனைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

எந்தக் காலத்தியவை? 

சங்கம் மருவிய காலத்தவை


164.திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?

வாசுகி


165.அறத்துப்பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது? 

            38


166 பொருட்பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது? 

70


167. இன்பத்துப் பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது?

25



168.திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 

133


169. திருப்பாவை பொதுவாக எந்த மாதத்தில் பாடப்படுகின்றது? 

மார்கழி மாதம்


170.ஒளவையார் எழுதிய நீதிநூல்கள் எவை? 

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி


171.காப்பிய காலம் எனப்படுவது யாருடைய ஆட்சிக்காலம்?

சோழர்கள்


172.ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுபவை எவை?

 நாககுமார காவியம், யசோதர காவியம், உதயண குமார காவியம்,சூளாமணி, நீலகேசி


173,கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

ஆறு


174 திருத்தொண்டர் புராணத்தின் வேறு பெயர் என்ன?

பெரிய புராணம்



175.பெரிய புராணத்தின் கதைத்தலைவர் யார்? 

சுந்தரர்


176. திருவருட்பா பாடியவர் யார்?

வள்ளலார்


177 இந்திர விழா பற்றிய செய்தி வருவது எந்த நூலில்? 

சிலப்பதிகாரம், மணிமேகலை


178,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவைகள் எத்தனை காதைகள் கொண்டவை?

தலா 30 காதைகள்


179. இந்திர விழா எத்தனை நாட்களுக்கு நடக்கும்? 

28 நாட்கள்


180. கண்ணகியின் தந்தை பெயர் என்ன?

மாநாயகன் 


181.கண்ணகியின் கணவன் பெயர் என்ன?

கோவலன்


182 கண்ணகியின் தோழியின் பெயர் என்ன? 

தேவந்தி




183 தமிழில் முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்


184.சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் என்ன? 

நாடகக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.


185.சிலப்பதிகாரத்தில் வரும் மூன்று நகரங்கள் எவை?

புகார், மதுரை, வஞ்சி 


186.தமிழில் தோன்றிய முதல் பெளத்த காப்பியம் எது?

மணிமேகலை


187 சைவ சமய இலக்கியங்கள் எத்தனை திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன? 

12


188 திருவாசகத்தின் முதல் பகுதி எது?

சிவபுராணம்


189 திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?

நம்பியாண்டார் நம்பி


 190 முதல் ஏழு திருமுறைகள் எனவ?.

 தேவாரம்




191. எட்டாவது திருமுறை எவை?

 திருவாசகம், திருக்கோவையார்


192. ஒன்பதாம் திருமுறை எவை? 

காரைக்கால் அம்மையார் உட்பட ஒன்பது பேர் பாடியவை.

 திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.


193.பத்தாம் திருமுறை எது?

திருமந்திரம்


194.சிற்றிலக்கிய காலம் எனப்படுவது யாருடைய ஆட்சி?

 நாயக்கர் காலத்தில்


195.பனிரெண்டாம் திருமுறை எது? 

பெரிய புராணம்


196. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

 நாதமுனிகள்


197.பெரியாழ்வார் பாடிய நூல் எது ?

திருப்பல்லாண்டு


198.பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளின் பெயர் என்ன? 

ஆண்டாள்


199. நம்மாழ்வாரின் சீடர் பெயர் என்ன?

 மதுரகவியாழ்வார் 


200.பராபரக்கண்ணியைப் பாடியவர் யார்?

தாயுமானவர்



பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


மேலும் அறிய





  


வெள்ளி, 8 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3)

 TNPSC CHANNEL

ரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)





101. முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம் 


102.திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?

தமிழ்மறை, பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி, உத்தர வேதம்


103. ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் நூல் எது? 

 மகாபாரதம்


104. திராவிட வேதம், தமிழ் வேதம் என்றழைக்கப்படும் நூல்

எது?

நாலாயிர திவ்விய பிரபந்தம்


105.வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?

நாலடியார்


106. இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுபவை எவை? " சிலப்பதிகாரம், மணிமேகலை


107.ராமகாதை எனப்படும் நூல் எது?

கம்ப ராமாயணம்


108.கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?

கம்பர்


109.உவமைக்கவிஞர் எனப்படுபவர் யார்?

சுரதா


110.தேசியக்கவி, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு

புலவன் எனப்படுபவர் யார்?

பாரதியார்


 111.புரட்சிக்கவிஞர். பாவேந்தர், புதுவைக்குயில் எனப்படுபவர்

யார்?

பாரதிதாசன்


112.வைக்கம் வீரர். பகுத்தறிவுப் பகலவன் எனப்படுபவர் யார்?

பெரியார்


113.தெய்வப்புலவர், செந்நாப் போதார். மானானுபங்கி

எனப்படுபவர் யார்? 

திருவள்ளுவர்


114.சிலம்புச் செல்வர் எனப்படுபவர் யார்?

 ம.பொ.சிவஞானம்


115. நாவலர் எனப்படுபவர் யார்?

 சோமசுந்தர பாரதியார்


116. கிறிஸ்தவக் கம்பன் எனப்படுபவர் யார்? 

ஹெச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை


117.வள்ளலார் எனப்படுபவர் யார்?

ராமலிங்க அடிகள்


118.முத்தமிழ்க் காவலர் எனப்படுபவர் யார்? 

கி.ஆ.பெ.விசுவநாதம்


119. சொல்லின் செல்வர் எனப்படுபவர் யார்?

 ரா.பி.சேதுப்பிள்ளை


120. தமிழ்த் தென்றல் எனப்படுபவர் யார்?

 திரு.வி.க


121.படிக்காத மேதை எனப்படுபவர் யார்?

காமராஜர்


122. தமிழ் நாடகப் பேராசிரியர் எனப்படுபவர் யார்?

 சங்கரதாஸ் சுவாமிகள்


123.ஆசிய ஜோதி எனப்படுபவர் யார்? 

 நேரு


124.கவி யோகி எனப்படுபவர் யார்?

 சுத்தானந்த பாரதியார்


125.அப்பர் எனப்படுபவர் யார்?

திருநாவுக்கரசர்


126. ஆளுடைய பிள்ளை எனப்படுபவர் யார்?

திருஞானசம்பந்தர்


127. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?

 பம்மல் சம்பந்த முதலியார்


128.மொழிஞாயிறு எனப்படுபவர் யார்? 

தேவநேயப் பாவாணர்


129 தனித்தமிழ் இயக்கத் தந்தை எனப்படுபவர் யார்?

 மறைமலை அடிகள்


130.ரசிகமணி எனப்படுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதன்


131.நாமக்கல் கவிஞர் எனப்படுபவர் யார்? 

ராமலிங்கம் பிள்ளை


132.பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?

 சூரிய நாராயண சாஸ்திரி


133.அகிலனின் இயற்பெயர் என்ன?

அகிலாண்டம்


134.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

முத்தையா


135. நம்மாழ்வாரின் இயற்பெயர் என்ன? 

மாறன்


136.ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?

ஜெகதீசன்


137.கவிஞர் வாலியின் இயற்பெயர் என்ன?

ரங்கராஜன்


138.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

 கனகசுப்பு ரத்தினம்


139.புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

விருத்தாசலம்


140.கல்கியின் இயற்பெயர் என்ன?

ரா.கிருஷ்ணமூர்த்தி


141.சுஜாதாவின் இயற்பெயர் என்ன?

ரங்கராஜன்


142.வீரமா முனிவரின் இயற்பெயர் என்ன?

ஜோசப் பெஸ்கி 


143.ஆண்டாளின் இயற்பெயர் என்ன?

கோதை


144.மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?

வேதாசலம்


145.தமிழ் நூல்களின் பழமையானது எது?

தொல்காப்பியம்


146.முதல் சங்கம் இருந்த இடம் எது?

தென் மதுரை


147 இடைச்சங்கம் இருந்த இடம் எது ?

கபாடபுரம்


148.கடைச்சங்கம் இருந்த இடம் எது ?

மதுரை


149.சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

பதிற்றுப்பத்து


150. சங்க இலக்கியங்களில் எத்தனை பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன?

31




பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்



மேலும் அறிய




                


வியாழன், 7 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2)

 

TNPSC CHANNEL

  குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட 

வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)






51.மனோன்மணியம் எழுதியவர் யார்?

 சுந்தரம் பிள்ளை


52.இளைஞர் இலக்கியம் எழுதியவர் யார்?

பாரதிதாசன்


53. ராவண காவியம் எழுதியவர் யார்? 

புலவர் குழந்தை


54.குடும்ப விளக்கு எழுதியவர் யார்? 

பாரதிதாசன்


55.கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார்?

ஜெயங்கொண்டார்


56.அழகின் சிரிப்பு எழுதியவர் யார்?

பாரதிதாசன்


57.திருச்சிற்றம்பலக் கோவை எழுதியவர் யார்? 

மாணிக்கவாசகர்


58.பாண்டியன் பரிசு எழுதியவர் யார்?

பாரதிதாசன்


59.திருவந்தாதி எழுதியவர் யார்?

 நம்பியாண்டார் நம்பி


60.குறிஞ்சித் திட்டு எழுதியவர் யார்?

பாரதிதாசன்



61. பாஞ்சாலி சபதம் எழுதியவர் யார்?

பாரதியார்


62.மண் குடிசை எழுதியவர் யார்?

 மு.வரதராசனார்


63. குயில் பாட்டு எழுதியவர் யார்?

பாரதியார்


64.அகல் விளக்கு எழுதியவர் யார்?

மு.வரதராசனார் 




65.சீட்டுக்கவி எழுதியவர் யார்?

பாரதியார்


66.கள்ளோ காவியமோ எழுதியவர் யார்?

மு.வரதராசனார்


67. பெண்ணின் பெருமை எழுதியவர் யார்?

திரு.வி.க


68.ஊரும் பேரும் எழுதியவர் யார்?

 ரா.பி.சேதுப்பிள்ளை


69. குறட்டை ஒலி எழுதியவர் யார்?

 

மு.வரதராசனார்


70. தேம்பாவணி எழுதியவர் யார்?

வீரமா முனிவர்


71.பரமார்த்த குரு கதைகள் எழுதியவர் யார்?

வீரமா முனிவர்


72.சேரமான் காதலி எழுதியவர் யார்?

கண்ணதாசன்


73.ஆசிய ஜோதி எழுதியவர் யார்?

கவிமணி


74.மாங்கனி எழுதியவர் யார்?

கண்ணதாசன்




75.சித்திரப்பாவை எழுதியவர் யார்? 

அகிலன்


76.எழிலோவியம் எழுதியவர் யார்?

வாணிதாசன்


77.குறிஞ்சிமலர் எழுதியவர் யார்?

நா.பார்த்தசாரதி


78.வேங்கையின் மைந்தன் எழுதியவர் யார்?

அகிலன்


79.பாவை விளக்கு எழுதியவர் யார்?

அகிலன்


80.ஓர் இரவு எழுதியவர் யார்?

அறிஞர் அண்ணா


81.தேன் மழை எழுதியவர் யார்?

கவிஞர் சுரதா 


82.கண்ணீர்ப் பூக்கள் எழுதியவர் யார்?

மு.மேத்தா


83.வேலைக்காரி எழுதியவர் யார்?

அறிஞர் அண்ணா


84. கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் யார்?

கவிஞர் வைரமுத்து


85 அகல்யை எழுதியவர் யார்?

புதுமைப்பித்தன்


86 அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் யார்? 

கண்ணதாசன்


87. பொன்னியின் செல்வன் எழுதியவர் யார்?

கல்கி


88. தொல்காப்பியப் பூங்கா எழுதியவர் யார்?

 கருணாநிதி


89. சில நேரங்களில் சில மனிதர்கள் எழுதியவர் யார்? 

ஜெயகாந்தன்


90. பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் யார்? 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை


91.கடல் புறா எழுதியவர் யார்? 

சாண்டில்யன்


92.மணிபல்லவம் எழுதியவர் யார்?

நா.பார்த்தசாரதி


93.சிவகாமியின் சபதம் எழுதியவர் யார்?

கல்கி


94.சக்கரவர்த்தித் திருமகன் எழுதியவர் யார்?

ராஜாஜி


95.வியாசர் விருந்து எழுதியவர் யார்?

ராஜாஜி


96.ராஜாஜி ராமாயணத்தை என்ன பெயரில் எழுதினார்?

சக்கரவர்த்தித் திருமகன்


97.ராஜாஜி மகாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்? 

வியாசர் விருந்து


98.குறளோவியம் எழுதியவர் யார்?

கருணாநிதி


99.விருத்தப்பாவில் வல்லவர் என்றழைக்கப்பட்டவர் யார்? 

கம்பர்


100.மண நூல் என்றழைக்கப்பட்ட நூல் எது?

சீவக சிந்தாமணி

             



பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


மேலும் அறிய





TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...