இராசராச சோழன் உலா
தஞ்சை பெரிய கோவில்
Full Video கிளிக் செய்யுங்கள்
உலா:
- உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
- தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
- இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
- இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
- உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
- ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).
ஒட்டக்கூத்தர்:
- இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
- இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
- இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
- இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
- இவரின் இயற் பெயர் = கூத்தர்
- ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.
சொற்பொருள்:
சூளிகை – நிலாமுற்றம் | சாளரம் – பலகணி |
தெற்றி – திண்ணை | பாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள் |
பிணங்கி – நெருங்கி | மறுகு – தெரு |
கோடி – வளைந்து | சதகோடி – நூறுகோடி |
மகோததி – கடல் | உதியர் – சேரர் |
சரதம் – வாய்மை | பவித்ரம் – தூய்மை |
மூவெழுகால் – 21 தலைமுறை | அவனி – நாடு |
பெருமாள் – அரசர் | கூடல் – காவிரிப்பூம்பட்டினம் |
இலக்கணக்குறிப்பு:
வாயிலும் மாளிகையும் – எண்ணும்மை | எம்மருங்கும் – முற்றும்மை |
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மை | செய்குன்று – வினைத்தொகை |
ஆடரங்கு – வினைத்தொகை | சுற்றிய பாங்கர் – பெயரெச்சம் |
மயங்கி, வணங்கி – வினையெச்சம் | செற்ற சிலை – பெயரெச்சம் |
காணீர் – ஏவல் வினைமுற்று | விட்டவள் – பெயரெச்சம் |
மதயெறிது – இரண்டாம் வேற்றுமைத்தொகை | முத்து முரசம் – பண்புத்தொகை |
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழி | உயரண்டம் – வினைத்தொகை |