எட்டாம் வகுப்பு
தமிழ்
செய்யுள் பகுதி (இயல் 3)
நோயும் மருந்தும்
மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன
நோய்கள். உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர் குறிப்பிட்டனர். அந்நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை இலக்கியங்கள் விளக்குகின்றன. அத்தகைய கருத்துகளை விளக்கும் நீலகேசிப் பாடல்களை அறிவோம்.
வருமுன் காப்போம்
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை. நல்ல உணவு, உடல்தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படை. இவற்றை விளக்கும் பாடல் ஒன்றை அறிவோம்.
மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்