ஆறாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம் அலகு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் பருவம் அலகு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

6th new syllabus in science

                                 TNPSC CHANNEL

     ஆறாம் வகுப்பு அறிவியல்

         இரண்டாம் பருவம்

 அலகு 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 

Question 1.

பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம்.

அ) இட மாற்றம்

ஆ) நிற மாற்றம்

இ) நிலை மாற்றம்

ஈ) இயைபு மாற்றம்

விடை: இ) நிலை மாற்றம்

Question 2.

ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்.

அ) வேதியியல் மாற்றம்

ஆ) விரும்பத்தகாத மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) இயற்பியல் மாற்றம்

விடை: ஈ) இயற்பியல் மாற்றம்

Question 3.

பால் தயிராக மாறுவது ஒரு _____ ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) மீளா மாற்றம்

ஈ) விரும்பத்தகாத மாற்றம்

விடை:

இ) மீளா மாற்றம்

Question 4.

கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

அ) துருப்பிடித்தல்

ஆ) பருவநிலை மாற்றம்

இ) நில அதிர்வு

ஈ) வெள்ளப்பெருக்கு

விடை:

ஆ) பருவநிலை மாற்றம்

Question 5.

காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ஆகும்.

அ) மீள் மாற்றம்

ஆ) வேகமான மாற்றம்

இ) இயற்கையான மாற்றம்

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

விடை:

ஈ) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்



II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம். (மீள் / மீளா)

விடை: மீள்

Question 2.

முட்டையை வேகவைக்கும் போது _____ மாற்றம் நிகழ்கிறது. (மீள் / மீளா)

விடை:

மீளா

Question 3.

நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ______ மாற்றங்கள். (விரும்பத்தக்க / விரும்பத்தகாத)

விடை:

விரும்பத்தகாத

Question 4.

தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது _____ (இயற்கையான / மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்) ஆகும்.

விடை:

இயற்கையான

Question 5.

பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ____ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ____ மாற்றம். (மெதுவான / வேகமான)

விடை:

வேகமான, மெதுவான


III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது மெதுவான மாற்றம்.

விடை: சரி

Question 2.

தீக்குச்சி எரிவது ஒரு மீள் மாற்றம்.

விடை:

தவறு

சரியா விடை : தீக்குச்சி எரிவது மீளா மாற்றம்.


Question 3.

அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு மனிதனால் தவறு. ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: தவறு

சரியான விடை : அமாவாசை, பௌர்ணமியாக மாறும் நிகழ்வு இயற்கையான மாற்றம்.


Question 4.

உணவு செரித்தல் என்பது ஓர் இயற்பியல் மாற்றம்.

விடை: தவறு.

சரியான விடை : உணவு செரித்தல் என்பது ஓர் வேதியியல் மாற்றம்.


Question 5.

உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ஒரு. கரைபொருள் ஆகும்.

விடை : தவறு

சரியான விடை : உப்பை நீரில் கரைத்து உருவாக்கும் கரைசலில், நீர் ‘ஒரு கரைப்பான் ஆகும்.








IV. ஒப்புமை தருக.

Question 1.

பால் தயிராதல்: மீளா மாற்றம் :: மேகம் உருவாதல் :- _____ மாற்றம்.

விடை: மீள்

Question 2.

ஒளிச்சேர்க்கை : _____ மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

விடை: இயற்கையான

Question 3.

குளுக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் : ____ மாற்றம்

விடை: மீளா

Question 4.

உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : _____ மாற்றம்.

விடை: விரும்பத்தகாத

Question 5.

தீக்குச்சி எரிதல்: ____ மாற்றம் :: பூமி சுற்றுதல் : மெதுவான மாற்றம்.

விடை:

வேகமான





V. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கூறுக.

Question 1.

குழந்தை வளருதல், கண் சிமிட்டுதல், துருப்பிடித்தல், விதை முளைத்தல்.

விடை: கண் சிமிட்டுதல் (வேகமான மாற்றம்)

Question 2.

மின் விளக்கு ஒளிர்தல், மெழுகுவர்த்தி எரிதல், காபி குவளை உடைதல், பால் தயிராதல்.

விடை:

பால் தயிராதல் (வேதியியல் மாற்றம்)

Question 3.

முட்டை அழுகுதல், நீராவி குளிர்தல், முடிவெட்டுதல், காய் கனியாதல்.

விடை:

முடி வெட்டுதல் (மனிதனால் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்)

Question 4.

பலூன் ஊதுதல், பலூன் வெடித்தல், சுவற்றின் வண்ணம் மங்குதல், மண்ணெண்ணெய் எரிதல்.

விடை:

மண்ணெண்ணெய் எரிதல் (வேதியியல் மாற்றம்)




       PDF DOWNLOAD

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...