இன்னும் நம்பிக்கொண்டிருப்பது வேதனை! அதோ, பாய்மரமின்றிப் போய்ச்சேரத் தீவுகளின்றி மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை.. ஆனால், இதோ கேள் என் நெஞ்சே மாலுமிகளின் பாடலை!
*******
பாப்லோ நெரூடா
தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர். தன்னுடைய கவிதைகளுக்காக 1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
எத்துணைப் பெயர்கள்!
திங்கட்கிழமைகள் செவ்வாய்க்கிழமைகளுடனும் கொண்டுள்ளன.
ஆண்டு முழுவதுடன்
வாரமும் சிக்கிக்களைத்துப்போன உம் கத்தரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது.
பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது.
இரவில் நான் உறங்குகையில் என்னை என்னவென்று அழைக்கின்றனர் அல்லது என்னவென்று அழைப்பதில்லை?
தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?