TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 5 விலங்குலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உயிருள்ள பொருள்கள் அல்லது
உயிரினங்களைப் பற்றி படிப்பது
அ. உளவியல் ஆ. உயிரியல்
இ. விலங்கியல் ஈ. தாவரவியல்
விடை : ஆ. உயிரியல்
2. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின்
பண்புகளாகக் கருதப்படுகின்றன?
i. சுவாசம் ii. இனப்பெருக்கம்
iii. தகவமைப்பு iv. கழிவு நீக்கம்
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
அ. i, ii மற்றும் iv மட்டும்
ஆ. i, ii மட்டும்
இ. ii மற்றும் iv மட்டும்
ஈ. i, iv, ii மற்றும் iii
விடை : ஈ. i, iv, ii மற்றும் iii
3. பல்லிகள் எதன்மூலம் சுவாசிக்கின்றன?
அ. தோல்
ஆ. செவுள்கள்
இ. நுரையீரல்கள்
ஈ. சுவாச நுண்குழல்
விடை : இ. நுரையீரல்கள்
4. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது
அ. உணவு மற்றும் நீர்
ஆ. நீர் மட்டும்
இ. காற்று, உணவு மற்றும் நீர்
ஈ. உணவு மட்டும்
விடை : இ. காற்று, உணவு மற்றும் நீர்
5. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச
உறுப்பைப் பெற்றுள்ளது?
அ. மண்புழு
ஆ. குள்ளநரி
இ. மீன்
ஈ. தவளை
விடை : இ. மீன்
6. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை
மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.
அ. புலி, மான், புல், மண்
ஆ. பாறைகள், மண், தாவரங்கள், காற்று
இ. மண், ஆமை, நண்டு, பாறைகள்
ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
விடை : ஈ. நீர்வாழ்த்தாவரம், மீன், தவளை, பூச்சிகள்
7. கீழ்கண்டவற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?
அ. ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்
ஆ. மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்
இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
ஈ. காட்டு விலங்குகளுடன் கூடிய காடு
விடை : இ. மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
8. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி
செய்வது எது?
அ. கனமான மற்றும் வலிமையான எலும்புகள்
ஆ. மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்
இ. உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்
ஈ. தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்
விடை : இ. உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்
9. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது
அ. போலிக்கால்கள்
ஆ. கசையிழை
இ. பாதம்
ஈ. குறு இழை
விடை : ஈ. குறு இழை
10. கங்காரு எலி வசிப்பது
அ. நீர் வாழிடம்
ஆ. பாலைவன வாழிடம்
இ. புல்வெளி வாழிடம்
ஈ. மலைப்பிரதேச வாழிடம
விடை : ஆ. பாலைவன வாழிடம்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
வெப்பமண்டல மழைக் காடுகள். புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை …… என்று அழைக்கிறோம்.
விடை:
வாழிடம்
Question 2.
ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் …….. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
ஒரு செல் உயிரினம்
Question 3.
மீனின் சுவாச உறுப்பு ………… ஆகும்
விடை:
செவுள்கள்
Question 4.
கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ………
விடை:
நடக்கின்றன
Question 5.
ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ……… சேமிக்கின்றன.
விடை:
கொழுப்பு
III. சரியா அல்லது தவறா? தவறாக இருப்பின் சரி செய்து எழுதுக.
Question 1.
ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.
விடை:
சரி
Question 2.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.
விடை:
தவறு.
புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது.
Question 3.
ஒரு செல் உயிரியான அமீபா, பொய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கிறது.
விடை:
சரி
Question 4.
பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.
விடை:
தவறு
ஒரே சமயத்தில் இரண்டு கண்கள் மூலமும் இரு வெவ்வேறு பொருட்களை பறவைகளால் காண முடியும். இதற்கு இருவிழிப் பார்வை என்று பெயர்.
Question 5.
பாரமீசியம் ஒரு பலசெல் உயிரி.
விடை:
தவறு.
பார்மீசியம் ஒரு ஒருசெல் உயிரி .
IV. தகுந்த வார்த்தைகளைக் கொண்டு கீழ்க்கண்டவற்றை நிரப்புக.
Question 1.
நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ……. என்று அழைக்கலாம்.
விடை:
வாழிடம்
Question 2.
செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ……….மற்றும்……… என வகைப்படுத்தலாம்.
விடை:
ஒரு செல் மற்றும் பல செல் உயிரினம்
Question 3.
பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு
___________ க்கு உதவுகிறது.
விடை:
கட்டுப்படுத்த
Question 4.
அமீபா………. உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது,
விடை:
பொய்க்கால்கள்