எட்டாம் வகுப்பு
தமிழ்
செய்யுள் பகுதி (இயல் 8)
ஒன்றே குலம்
மனிதர்களிடையே பிறப்பால் உயர்வுதாழ்வு பாராட்டுவது தவறானது. உலகமக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத்தொண்டாகும். இக்கருத்துகளை விளக்கும் திருமூலரின் பாடல்களை அறிவோம்.
மெய்ஞ்ஞான ஒளி
எப்படியும் வாழலாம் என்பது விலங்குகளின் இயல்பு. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனிதப் பண்பு. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிஞர்கள் பலர் எடுத்துக் கூறியுள்ளனர். ஐம்பொறிகளின் ஆசையை அடக்கி, அறிவின் வழியில் சென்றால் வாழ்வாங்கு வாழலாம். அவ்வாறு வாழ வேண்டிய முறைகளை விளக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களை அறிவோம்.
மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்