TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
8 தேசியம்: காந்திய காலகட்டம்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ) மோதிலால் நேரு
ஆ) சைஃபுதீன் கிச்லு
இ) முகம்மது அலி
ஈ) ராஜ் குமார் சுக்லா
விடை: ஆ) சைஃபுதீன் கிச்லு
Question 2.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ) பம்பாய் ஆ) மதராஸ்
இ) கல்கத்தா ஈ) நாக்பூர்
விடை: இ) கல்கத்தா
Question 3.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ) 1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ) 1946 ஜூன் 16
ஈ) 1947 ஜனவரி 15
விடை:
அ) 1930 ஜனவரி 26
Question 4.
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ) 1858
ஆ) 1911
இ) 1865
ஈ) 1936
விடை:
இ) 1865
Question 5.
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ) கோவில் நுழைவு நாள்
ஆ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
இ) நேரடி நடவடிக்கை நாள்
ஈ) சுதந்திரப் பெருநாள்
விடை:
அ) கோவில் நுழைவு நாள்
Question 6.
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ) 1858ஆம் ஆண்டு சட்டம்
ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909
இ) இந்திய அரசுச் சட்டம், 1919
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935
விடை:
ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935