TNPSC CHANNEL
ஏழாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 5 தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
அ) பிரையோபில்லம்
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) பாக்டீரியா
விடை:
அ) பிரையோபில்லம்
Question 2.
ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை
அ) ஸ்போர்கள்
ஆ) துண்டாதல்
இ) மகரந்தச் சேர்க்கை
ஈ) மொட்டு விடுதல்
விடை:
ஈ) மொட்டு விடுதல்
Question 3.
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) மலர்
விடை:
ஈ) மலர்
Question 4.
மகரந்தச் சேர்க்கையாளர்கள் என்பவை
அ) காற்று
ஆ) நீர்
இ) பூச்சிகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்
Question 5.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
அ) வெற்றிலை
ஆ) மிளகு
இ) இவை இரண்டும்
ஈ) இவை இரண்டும் அன்று
விடை:
இ) இவை இரண்டும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு ………………
விடை:
மகரந்தத்தாள்
Question 2.
…………….. என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்
விடை:
சூற்பை
Question 3.
கருவுறுதலுக்குப் பின் சூல் …………….. ஆக மாறுகிறது.
விடை:
விதை
Question 4.
சுவாச வேர்கள் ……………….. தாவரத்தில் காணப்படுகின்றன.
விடை:
அவிசினியா
Question 5.
வெங்காயம் மற்றும் பூண்டு ……………. வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
விடை:
தரைகீழ்த்தண்டு குமிழம்
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக
Question 1.
முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது.
விடை:
சரி
Question 2.
அல்லி இதழ், சூலக முடியை அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர்
விடை:
தவறு – மகரந்தத்தூள் சூலக முடியை அடைவது மகரந்தச் சேர்க்கை
Question 3.
கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்
விடை:
சரி
Question 4.
இஞ்சி என்பது தரைகீழ் வேராகும்
விடை:
தவறு – இஞ்சி – தரைகீழ் தண்டு
Question 5.
சோற்றுக்கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
விடை:
சரி