TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
7 காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை:
ஆ) ஃபராசி இயக்கம்
Question 2.
‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷரியத்துல்லா
விடை:
இ) டுடு மியான்
Question 3.
நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?
அ) சாந்தலர்கள் ஆ) டிடு மீர்
இ) முண்டா ஈ) கோல்
விடை: அ) சாந்தலர்கள்
Question 4.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை: இ) பிபின் சந்திர பால்
Question 5.
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை: 1905 அக்டோபர் 16
Question 6.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை:
இ முண்டா கிளர்ச்சி
Question 7.
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திர பால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை:
ஈ) திலகர்
Question 8.
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை: அ) தீன பந்து மித்ரா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக .
Question 1.
மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை:
வஹாபி
Question 2.
சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………
விடை:
கோல் கிளர்ச்சி
Question 3.
……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.
விடை:
சோட்டா நாக்பூர் குத்தகை
Question 4.
சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….
விடை:
1908
Question 5.
W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..
விடை:
1885
*******