ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் அலகு 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் அலகு 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

7th new syllabus in science

              TNPSC CHANNEL

                    ஏழாம் வகுப்பு அறிவியல்

                 முதல் பருவம்

அலகு 4 அணு அமைப்பு

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

பருப்பொருளின் அடிப்படை அலகு ______________ ஆகும்.

அ) தனிமம்             ஆ) அணு

இ) மூலக்கூறு        ஈ) எலக்ட்ரான்

விடை: ஆ) அணு

Question 2.

அணுக்கருவைச் சுற்றி வரும் அடிப்படை அணுத்துகள் ____________ ஆகும்.

அ) அணு

ஆ) நியூட்ரான்

இ) எலக்ட்ரான்

ஈ) புரோட்டான்

விடை: இ) எலக்ட்ரான்

Question 3.

_____________ நேர் மின்சுமையுடையது.

அ) புரோட்டான்

ஆ) எலக்ட்ரான்

இ) மூலக்கூறு

ஈ) நியூட்ரான்

விடை:

அ) புரோட்டான்

Question 4.

ஓர் அணுவின் அணு எண் என்பது அதிலுள்ள ____________ ஆகும்.

அ) நியூட்ரான்களின் எண்ணிக்கை

ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை

இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை

ஈ) அணுக்களின் எண்ணிக்கை

விடை: ஆ) புரோட்டான்களின் எண்ணிக்கை

Question 5.

நியூக்ளியான்கள் என்பது _____________ குறிக்கும்.

அ) புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

ஆ) நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களைக்

இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்

ஈ) நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களைக்

விடை:

இ) புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள் ______________

விடை:

அணுக்கூறுகள்

Question 2.

அணுவின் உட்கருவில் __________ மற்றும் _________ இருக்கும்.

விடை:

புரோட்டான்கள், நியூட்ரான்கள்

Question 3.

அணுவின் உட்கருவை _____________ சுற்றி வரும்

விடை:

எலக்ட்ரான்கள்

Question 4.

கார்பனின் இணைதிறன் 4 மற்றும் ஹைட்ரஜனின் இணைத்திறன் 1 ஆக உள்ளது எனில், மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு _____________

விடை:

CH4

Question 5.

மெக்னீசியம் அணுவின் வெளிவட்டப் பாதையானது இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கிறது எனில் மெக்னீசியம் அணுவின் இணைதிறன் _____________

விடை:

இரண்டு


IV. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

Question 1.

ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு மூலக்கூறு ஆகும்.

விடை:

தவறு. ஒரு தனிமத்தின் அடிப்படை அலகு அணு ஆகும்.

Question 2.

எலெக்ட்ரான்கள் நேர்மின்சுமை கொண்டவை

விடை:

தவறு. எலெக்ட்ரான்கள் எதிர்மின்சுமை கொண்டவை

Question 3.

ஓர் அணு மின்சுமையற்ற நடுநிலைத் தன்மையை கொண்டது.

விடை: சரி

Question 4.

அணுவின் உட்கருவைச் சுற்றி புரோட்டான்கள் காணப்படுகின்றன.

விடை:

தவறு. அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.






V. ஒப்புமை தருக.

Question 1.

சூரியன் : உட்கரு :: கோள்கள் : _____________

விடை:

எலக்ட்ரான்கள்

Question 2.

அணு எண் : ____________ :: நிறை எண் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை.

விடை:

புரோட்டான்கள் (அ) எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

Question 3.

K : பொட்டாசியம் :: C : _________

விடை:

கார்பன்



VI. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க.

Question 1.

கூற்று : ஓர் அணு மின்சுமையற்றது, நடுநிலையானது

காரணம் : அணுக்கள் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களையும் எலக்ட்ரான்களையும் கொண்டவை.

விடை:

 கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

Question 2.

கூற்று : ஓர் அணுவின் நிறை என்பது அதன் உட்கருவின் நிறையாகும்.

காரணம் : உட்கரு மையத்தில் அமைந்துள்ளது.

விடை:

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

சரியான விளக்கம் : அணுவின் நிறை என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்.

Question 3.

கூற்று : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.

காரணம் : புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.


அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

விடை:

ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி

சரியான விளக்கம் : புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.






TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...