புதன், 28 ஜூன், 2023

ஏழாம் வகுப்பு தமிழ் இயல் 8

          



 ஏழாம் வகுப்பு

தமிழ்

செய்யுள் பகுதி (இயல் 8)

புதுமை விளக்கு


 

 


      பாடலின் பொருள்

பூமியை அகல்விளக்காகவும், ஒலிக்கின்ற கடலை நெய்யாகவும், வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால். சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டிப் பாடலால் மாலை சூட்டினேன்.

ஆசிரியர் குறிப்பு

பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.



பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும். ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.

ஆசிரியர் குறிப்பு

பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.



 


அறம் என்னும் கதிர்




 பாடலின் பொருள்

இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும். அதில் ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும். வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும். உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும். அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும். இளம் வயதிலேயே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.


 ஆசிரியர் குறிப்பு :

முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது.


 மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்


 


திங்கள், 19 ஜூன், 2023

காவல் துறையில் கைரேகை சார்பு-ஆய்வாளர் ( FINGER PRINT SI)





காவல் துறையில் கைரேகை சார்பு-ஆய்வாளர் ( FINGER PRINT SI) பதவிக்கு TV விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கல்வி தகுதி அறிவியலில் இளங்கலை பட்டம் B. Sc ( Chemistry, Physics,) 

வயது 20 முதல் 30 வரை

வேலை மாவட்ட தலைநகரங்களில் SP ஆபிஸில் FINGER PRINT SI ஆக பணியமர்த்தப்படுவர்.


L&O SI க்கு உரிய அடிப்படை சம்பளம், மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

இஸ்லாமியருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இஸ்லாமிய ஆண், மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு பொருத்தமான வேலை. யூனிபார்ம் கிடையாது. 01.06.2023 முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.06.2023. இந்த வாய்ப்பினை தகுதி உள்ளவர்கள் தவற விட வேண்டாம். விண்ணப்பிக்க இணைய தள முகவரி Google ல் சென்று TNUSRB என டைப் செய்து இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கவும். 


Finger Print SI .

 1500 மீ ஓட்டம், கயிறு ஏறுதல் இதெல்லாம் இந்த தேர்வில் கிடையாது.  ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச உயரம் 163 செ. மீ., பெண் விண்ணப்பதாரர்களுக்கு 154 செ. மீ.  விண்ணப்ப கட்டணம் ரூ. 500 மட்டுமே...



Notification TNUSRB WEBSITE க்ளிக் செய்யுங்கள்

ஞாயிறு, 18 ஜூன், 2023

விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

 


விவேகானந்தர் எழுதிய கவிதைகள் – தமிழில்

Vivekanandar Kavithaigal

விவேகானந்தர் எழுதிய கவிதைகள்

Poems composed by Swami Vivekananda

Vivekanandar Kavithaigal – A Translation

சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதைகள் (Swami Vivekananda’s poems) எழுச்சிமிக்கவை; இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது சீரிய பேச்சாற்றல் மூலம் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரையெல்லாம் விழிபெற வைத்த விவேகானந்தர் கவிதைகள் முலமாகவும் எழுச்சித் தீயைப் பரப்பினார். அத்தகைய சோதி மிகுந்த சுடர்க்கவிதைகளில் சிலவற்றைத் தமிழ்செய்து பார்க்கும் முயற்சியே இந்தப் பதிவு.

A translation of Swami Vivekananda’s poems into Tamil. Written in poetical form of Tamil.

Vivekanandar Kavithaigal

1. இடர் வரும்போது மேலோர் வலிமை கொள்வர்

மொழிபெயர்ப்பு:

அடிபட்ட பாம்பு படம் எடுத்து சீறும்;
தூண்டப்பட்ட நெருப்பு வானுயரப் பற்றி எரியும்;
நெஞ்சில் அடிபட்ட சிங்கத்தின் கர்ச்சனையோ
பாலைவனம் முழுவதும் எதிரொலிக்கும்;

மின்னலால் தாக்கப்பட்ட மேகம்
தன் வலிமையெல்லாம் திரட்டி இடிமுழக்கம் செய்யும்;
அதேபோல், (சோதனைகளாலும் இடர்களாலும்)
நெஞ்சின் ஆழத்தில் துயருற்ற ஆன்மா கிளர்ந்தெழும்போது
மகான்களும் ஞானிகளும் தங்கள் பெருவலிமை காட்டி
எதிர்த்துநின்று வெற்றி பெறுவார்கள்.

English Original:

The wounded snake its hood unfurls,
The flame stirred up doth blaze,
The desert air resounds the calls
Of heart-struck lion’s rage.

The cloud puts forth it deluge strength
When lightning cleaves its breast,
When the soul is stirred to its in most depth
Great ones unfold their best.

தமிழ்க்கவியாக்கம்:

படமெடுத்துச் சீறும்அடி பட்ட நாகம்,
     பாயுமொளி வீசிடுமுட் கிளர்ந்த செந்தீ,
இடம்அதிரக் கர்ச்சித்துக் குரல்மு ழக்கும்
     இதயத்தில் புண்பட்டுச் சினந்த சிங்கம்,
தடைதகர்க்கும் வலிகாட்டி எதிர்க்கும் மேகம்
     தன்னெஞ்சை வன்மின்னல் பிளக்கும் போதே,
அடர்துயர்வந்(து) ஆழ்மனத்தை அழுத்தும் போதங்(கு)
     ஆன்மபலத் தாலொளிர்வர் ஆன்றோர் தாமே.

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)

தொடர்புடைய திருக்குறள்:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் 
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]
பொருள்:
தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுடச்சுட அது மாசு நீங்கி ஒளிவிடும். அதுபோல் துன்பமானது சுடச்சுட அதைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை ஒளிவீசித் திகழும்.


2. இலக்கை நோக்கி நேரே செல்வாய்!

மொழிபெயர்ப்பு:

கண்கள் மங்கிப் போனாலும், இதயம் மெலிந்து வாடினாலும்,
நட்பானது தோல்வியுற்றாலும், காதலும் வஞ்சித்தாலும்,
நூறு பேரிடர்களை விதியானது நம்மை நோக்கிச் செலுத்தினாலும்,
நாம் செல்லும் வழியெங்கும் காரிருள் சூழ்ந்தாலும்,

நம்மை வதைத்து அழிக்கும் நோக்குடன்
ஒட்டுமொத்த இயற்கையும் சேர்ந்து
ஒரு சினம் கொண்ட கொடும்பார்வை வீசினாலும்,
என் ஆன்மாவே! நீ தெய்வீகமானவன் என்று உணராய்!
(இந்தத் தெளிவு நிறைந்த இதயத்துடன்)
நீ இடப்பக்கமோ வலப்பக்கமோ நோக்காமல்,
நேரே உன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இரு!

English Original:

Let eyes grow dim and heart grow faint,
And friendship fail and love betray,
Let Fate its hundred horrors send,
And clotted darkness block the way.

All nature wear one angry frown,
To crush you out – still know, my soul,
You are Divine. March on and on,
Nor right nor left but to the goal.

தமிழ்க்கவியாக்கம்:

கண்மங்கிப் போனாலும், இதயம் வாடக்
   கருதியதோர் நட்பொடுகா தலும்பொய்த் தாலும்,
மண்மேலே விதிநூறு திகில்தந் தாலும்,
   வல்லிருள்வந் துன்வழியை மறைத்திட் டாலும்,
மண்தோன்றும் இயற்கையெலாம் சினந்து நின்னை
   வாட்டிவதைத் தாலும்அறி வாயென் நெஞ்சே!
எண்ணருந்தெய் வீகன்நீ! இலக்கை நோக்கி
   வலதிடது பார்க்காமல் செல்வாய் நேரே!

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)


3. அவனே நான்

மொழிபெயர்ப்பு:

நான் – தேவனும் அல்ல, மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல,
உடலும் அல்ல, மனமும் அல்ல, ஆண் அல்ல, பெண்ணும் அல்ல,
எனது குணங்களைப் பற்றிக் கூறவரும் போது
வேதங்கள் சாத்திரங்கள் உள்ளிட்ட எல்லா ஞான நூல்களும்
என்னைப் பற்றி அறிந்துசொல்ல முடியாமல்
அதிசயத்தில் வியந்து வாயடைத்து நின்று துதிக்கும்;
(ஏனெனில், அத்தகைய குணம் கடந்த இறைவன் என்னுள் உறைவதால்)
நானும் ‘அவன்’ ஆகிறேன். (அதனால், அவன் வேறு, நான் வேறு என்றில்லாமல் ஒன்றானோம்.
எனவே, அவனது இயல்புகள் எனக்கும் வாய்த்தன.)

English Original:

Nor angel I, nor man, nor brute,
Nor body, mind, nor he nor she,
The books do stop in wonder mute
To tell my nature; I am He.

தமிழ்க்கவியாக்கம்:

தேவனும்நான் அல்லேன்மா னிடனும் அல்லேன்
   சிற்றறிவே கொண்டவிலங் கினமும் அல்லேன்
ஆவியுறைந் திடுமுடலும் மனமும் அல்லேன்
   ஆண்பெண்பால் அலியிவற்றுள் எதுவும் அல்லேன்
தாவரிய ஞானத்து மறைநூல் எல்லாம்
   தனித்தனிநின் றென்னியல்பைச் சாற்றும் போது
நாவடைத்துத் தாமிளைத்துத் துதித்து நின்றே
   ‘நானவனே’ எனத்தெளிந்து போற்று மன்றே!

தாவரிய = கேடில்லா/குற்றமற்ற

‘நான் அவனே’ = ஸோஹமஸ்மி / ஸோ அஹம் அஸ்மி = அவனே நான் (ஈஸா உபநிஷத்)

தொடர்புடைய பாட்டு :

‘அல்லை ஈது அல்லை ஈது’ என மறைகளும் அன்மைச்
சொல்லி னால்துதித்து இளைக்கும்இச் சுந்தரன்.
– பரஞ்சோதி முனிவர் ( திருவிளையாடல் புராணம்)

வேதம் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறது. எல்லாவற்றையும் அக்கு வேராக ஆணிவேராக அறிவிக்கிறது. ஆனால் ஆண்டவனை நேரே சுட்டாமல், “நீ இப்பொருளும் அல்ல, இப் பொருளும் அல்ல” என்று சொல்லித் துதித்து இளைத்துப் போகிறது.


4. காலம் தோன்றும் முன்பும் நான் இருந்தேன்

மொழிபெயர்ப்பு:

கதிரவனும், சந்திரனும், பூமியும் தோன்றும் காலத்திற்கு முன்னே,
விண்மீன்களும் வால்நட்சத்திரங்களும் தோன்றும் முன்னே,
காலமானது பிறந்திடும் முன்னே,
நான் இருந்தேன்;
இப்போதும் இருக்கிறேன்;
இனியும் என்றென்றும் நான் நிலையாக இருப்பேன்!

English Original:

Before the sun, the moon, the earth,
Before the stars or comets free,
Before e’en time has had its birth,
I was, I am, and I will be.

தமிழ்க்கவியாக்கம்:

கதிரவனும் குளிர்மதியும் தோன்று முன்னே
     கடல்சூழ்ந்த பேருலகம் தோன்று முன்னே
நிதமொளிர்விண் மீன்கூட்டம் தோன்று முன்னே
     நீள்வால்நட் சத்திரங்கள் தோன்று முன்னே
கதியினையும் விதியினையும் நிர்ண யிக்கும்
     காலமெனும் பெருஞ்சுழல்தான் தோன்று முன்னே
முதன்முதலில் நானிருந்தேன் இன்றும் உள்ளேன்
     முடிவின்றி என்றென்றும் இருப்பேன் நானே! 

தமிழாக்கத்திற்கு விளக்கம்

சொற்பொருள்:
நிதமொளிர்விண் மீன்கூட்டம் = நிதம் + ஒளிர் + விண்மீன் + கூட்டம்

(பாவகை : எண்சீர் ஆசிரிய விருத்தம்)


5. தளைகளிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்!

English Original:

Strike off thy fetters! Bonds that bind thee down,
Of shining gold, or darker, baser ore;
Love, hate–good, bad–and all the dual throng,
Know, slave is slave, caressed or whipped, not free;
For fetters, though of gold, are not less strong to bind;
Then off with them, Sannyasin bold! Say–
“Om Tat Sat, Om!”

தமிழ்க்கவியாக்கம்:

ஒளிவிளங்கும் பொன்விலங்கால் கட்டுண் டாலும்
   உருவிழிந்த கருவிலங்கால் கட்டுண்டாலும்
உளமொளிர்அன் பின்நலத்தால் கட்டுண்டாலும்
   உறுவெறுப்பால் தீவினையால் கட்டுண் டாலும்
தளையெதுவும் வலிதேகாண்! புண்பட் டாலும்
   தழுவுறினும் அடிமைவெறும் அடிமை யன்றோ!
தளையனைத்தும் களைந்தெறிந்து, துறவி வீர!
   ‘ஓம்தத்சத் ஓம்’என்றே ஓது வாயே! 

6. இருள் விலகட்டும்!

English Original:

Let darkness go; the will-o’-the-wisp that leads
With blinking light to pile more gloom on gloom.
This thirst for life, for ever quench; it drags
From birth to death, and death to birth, the soul.
He conquers all who conquers self. Know this
And never yield, Sannyasin bold! Say–
“Om Tat Sat, Om!”

தமிழ்க்கவியாக்கம்:

மருள்தருபொய் யொளிகாட்டி மன மயக்கி
   வழிதடுமா றச்செய்யும் கொள்ளிப் பேய்போல்
இருள்மேலே இருள்குவித்தே ஒளி மறைக்கும்
   இன்னுயிர்மேல் என்றென்றும் தணியாத் தாகம்,
ஒருபிறப்பு பிறகிறப்பாம் சுழற்சி தன்னுள்
   உனையாழ்த்தப் பார்க்குமதற் கிடங்கொ டேல்நீ!
தரணியுன(து) உனைவென்றால், துறவி வீர!
   ‘ஓம்தத்சத் ஓம்’என்றே ஓது வாயே!

7. அமைதி – 1

English Original:

Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,
The shade in dazzling light.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.

தமிழ்க்கவியாக்கம்:

சத்தியங்காண்! வலிமையில்மே விடும் அமைதி
   சத்தியுமல் லாச்சத்தி தான் அமைதி,
சுத்தவிருள் தனிலுறையும் ஒளி அமைதி,
   சுடரொளியுள் தெரிகின்ற நிழல் அமைதி,
சித்தசுகம் பேசாத களிப்(பு) அமைதி,
   சிறிதுமுணர்ந் தறியாப்பே ருழல்(வு) அமைதி,
இத்தரைவா ழாவமர வாழ்(வு) அமைதி,
   இரங்காநித் தியமரணம் அமைதி யாமே!

8. அமைதி – 2

English Original:

It is not joy nor sorrow,
But that which is between,
It is not noght nor morrow,
But that which joins them in.

It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion —
It is the calm of heart.

தமிழ்க்கவியாக்கம்:

இன்பமுந்துன் பமுமல்லா உணர்(வு) அமைதி
    இவ்விரண்டுக் கிடைநின்ற நிலை அமைதி
இன்றிரவும் நாளையலாப் பொழு(து)  அமைதி
    இரண்டையுமீங் கிணைக்கின்ற கணம் அமைதி
இன்னிசையி னிடைவருநல் ஓய்(வு) அமைதி
    கலைப்படைப்பி னிடைநிறுத்த மாம் அமைதி
சொன்னமொழி யிடைமவுன வெளி யமைதி
    தொடருறுமீ ருணர்ச்சியிடை சாந்தம் அஃதே!

9. அமைதி – 3

English Original:

It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

தமிழ்க்கவியாக்கம்:

தாரணியில் கண்டறியா அழ(கு) அமைதி 
     சார்வின்றித் தனித்திலங்கும் அன்(பு) அமைதி
யாருமிசைத் தறியாத பாட்(டு) அமைதி
     என்றுமறிந் துணராத அறி(வு) அமைதி
ஈருயிர்வாழ் வுக்கிடையில் இறப்(பு) அமைதி
     இருபுயல்வீச் சிடையோசை ஒழி(வு) அமைதி
பேருலகை ஆக்கிடும்வெற் றிடம் அமைதி
     பிறகழிவில் சேருமிடம் அமைதி யாமே.

10. மீண்டும் விழித்தெழுவாய்!

English Original:

Once more awake!
For sleep it was, not death, to bring thee life
Anew, and rest to lotus-eyes for visions
Daring yet. The world in need awaits, O Truth!
No death for thee!

தமிழ்க்கவியாக்கம்:

வாண்மலர்த் தாமரைக்கண் – மிகு
     வாட்டம் அகன்றுபுத் துயிர்வளர
நீண்மருள்  நிலைகலைந்தே – வினை
     நெடுந்தொலை நோக்குடன் துணிந்தியற்ற 
வேண்டியிவ் வுலகமெல்லாம், – உயர்
     மெய்ம்மையே! காத்திருந் தேங்கிநிற்க
மீண்டும்நீ விழித்தெழுவாய் – இது
     வெறுந்துயில் தானுனக் கிறப்பிலையே!

வெள்ளி, 16 ஜூன், 2023

How Many Groups in TNPSC?




TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர்  தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன் முழுவிவரங்கள் பின்வருமாறு? How Many Groups in TNPSC?

குரூப் – 1, குரூப் – 2, குரூப் – 3, குரூப் – 4, குரூப் – 5, குரூப் – 6, குரூப் – 7, குரூப் – 8

குரூப் – 1 சேவைகள் (Group-I) 

  1. துணை கலெக்டர் (Deputy Collector) 
  2. துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை – I) (Deputy Superintendent of Police) 
  3. மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை (District Registrar, Registration Department) 
  4. ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) 
  5. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) 
  6. தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளில் பிரதேச அலுவலர் (Div. Officer in Fire and Rescue Services) 
  7. உதவி ஆணையர் (சி.டி.) (Asst Commissioner) 
  8. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies)
குரூப் – 1A சேவைகள் (Group-I A) 
  1. உதவி காடுகளின் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

குரூப் – 1B சேவைகள் (Group-I B) 
  1. உதவி ஆணையர் H.R & C.E (Assistant Commissioner, H.R. & C.E)

குரூப் – 1C சேவைகள் (Group-I C)

  1. மாவட்ட கல்வி அலுவலர் DEO (District Educational Officer)

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு -2 

குரூப் – 2 சேவைகள் (நேர்முகத்தேர்வு பதவிகள்) (Group-II) 

  1. துணை வணிக வரி அதிகாரி 
  2. நகராட்சி ஆணையர், தரம் -2 
  3. இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக இல்லாதவர்) 
  4. இளைய வேலைவாய்ப்பு அதிகாரி (வித்தியாசமாக திறமையானவர்) 
  5. துணை பதிவாளர், தரம் -2 
  6. தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
  7. உதவி பிரிவு அதிகாரி (சட்டம் மற்றும் நிதி தவிர துறை) 
  8. உதவி பிரிவு அதிகாரி (சட்டத்துறை) 
  9. உதவி பிரிவு அதிகாரி (நிதித்துறை) 
  10. தமிழ்நாடு பொது சேவையில் உதவி பிரிவு அதிகாரி ஆணைக்குழு 
  11. உதவி பிரிவு அதிகாரி-கம்-புரோகிராமர் 
  12. உதவி பிரிவு அதிகாரி, தமிழ்நாடு சட்டமன்றம் செயலக சேவை 
  13. நன்னடத்தை அலுவலர், சமூக பாதுகாப்பு 
  14. நன்னடத்தை அலுவலர், சிறைத் துறை 
  15. தொழில்துறை கூட்டுறவு அதிகாரி, கைத்தொழில் ஆணையர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் 
  16. பெண்கள் நல அலுவலர், சமூக பாதுகாப்பு 
  17. சர்வே இயக்குநர் மற்றும் தீர்வுகளுக்கான Reg.Co-op Society இல் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் 
  18. வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, உதகமண்டலம் தொழில்துறை கூட்டுறவு தொழில்துறை மேற்பார்வையாளர் கமிஷனர் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர் துறை 
  19. திட்ட உதவியாளர் ஆதி-திராவிதர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 
  20. தணிக்கை பிரிவில் உள்ள தணிக்கை ஆய்வாளர் இந்து மத மற்றும் அறக்கட்டளை நிர்வாகத் துறை 
  21. உள்ளூர் நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர் மற்றும் உள் தணிக்கைத் துறை
  22. மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தர் / தலைமை கணக்காளர் / ஜூனியர்தமிழ்நாடு வேளாண் சந்தைப்படுத்தல் கண்காணிப்பாளர் துணை சேவை 
  23. உதவி ஜெயிலர், சிறைத்துறை 
  24. வருவாய் துறையில் உதவியாளர் டவுன் பஞ்சாயத்துத் துறையில் 
  25. நிர்வாக அதிகாரி, தரம் -2 டி.வி.ஐ.சியில் 
  26. சிறப்பு உதவியாளர் 
  27. கைத்தறி ஆய்வாளர் பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவில் 
  28. சிறப்பு கிளை உதவியாளர். 
  29. பால் உற்பத்தியில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர் மற்றும் பால் மேம்பாடு 
  30. தொழிலாளர் உதவி ஆய்வாளர் 
  31. தணிக்கை உதவியாளர் நெடுஞ்சாலைத் துறையில் கணக்கு கிளையில்.

குரூப் – 2A சேவைகள் (நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகள்) (Group-II A) 

  1. கருவூல மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 
  2. ஜூனியர் கூட்டுறவு கணக்காய்வாளர் செயலகத்தில் 
  3. உதவியாளர் (சட்டம் மற்றும் நிதி தவிர) 
  4. இளைய தொழில்நுட்ப உதவியாளர், சிவில் சப்ளைஸ் துறை 
  5. தனிப்பட்ட எழுத்தர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) 
  6. தனிப்பட்ட எழுத்தர் (சட்டத்துறை) 
  7. தனிப்பட்ட எழுத்தர் (நிதித்துறை) 
  8. தமிழ்நாடு பொது சேவையில் தனிப்பட்ட எழுத்தர் ஆணைக்குழு 
  9. தனிப்பட்ட எழுத்தர், தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையம் 
  10. தமிழக சட்டசபையில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் செயலக சேவை 
  11. உதவியாளர் பல்வேறு துறைகள் 
  12. செயலகத் துறையில் உதவி (நிதித்துறை) 
  13. தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் உதவியாளர் 
  14. தமிழக சட்டசபையில் கீழ் பிரிவு எழுத்தர், செயலகம் 
  15. திட்டமிடல் இளைய உதவியாளர் 
  16. வரவேற்பாளர் (சிறு சேமிப்புத் துறை) 
  17. சட்டத்துறையில் உதவியாளர் 
  18. தமிழ்நாடு சட்டமன்ற சட்டசபை சேவையில் உதவியாளர்

ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 3

குரூப் – 3 சேவைகள் (Group-III)

  1. தீயணைப்பு நிலைய அதிகாரி

குரூப் – 3A சேவைகள் (Group-III A) 

  1. கூட்டுறவு சங்கங்களின் ஜூனியர் இன்ஸ்பெக்டர் 
  2. தொழில்துறை கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர் 
  3. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பயிற்சி பிரிவு) துறையில் கடை வைத்திருப்பவர் கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர்-கீப்பர், கிரேடு -2

குரூப் – 4 சேவைகள் (Group-IV) 

  1. ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத) 
  2. பில் கலெக்டர் 
  3. தட்டச்சு செய்பவர் 
  4. ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கிரேடு -3 
  5. கள ஆய்வாளர் 6. வரைவாளர்

குரூப் – 5A சேவைகள் (Group-V A)

  1. செயலகத்தில் உதவியாளர் (இடமாற்றம் மூலம் ஆட்சேர்ப்பு) (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர)

குரூப் – 6 சேவைகள் (Group-VI)

  1. வன பயிற்சியாளர்

குரூப் – 7A சேவைகள் (Group-VII A) 

  1. நிர்வாக அதிகாரி, தரம் -1

குரூப் – 7B சேவைகள் (Group-VII B) 

  1. நிர்வாக அதிகாரி, தரம் – 3

குரூப் – 8 சேவைகள் (Group-VIII) 

  1. நிர்வாக அதிகாரி, தரம் – 4

        TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

        TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...