திங்கள், 6 ஜூன், 2022

இலக்கணம் - பொது

 இலக்கணம் - பொது


இருதிணை


ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.


ஐம்பால்


பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும்.


உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது. அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.


உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்


வீரன், அண்ணன், மருதன் ஆண்பால் மகள், அரசி, தலைவி பெண்பால் மக்கள், பெண்கள், ஆடவர் - பலர்பால்


அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்


அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.


எ.கா. யானை,புறா, மலை


அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.


எ.கா. பசுக்கள், மலைகள்


மூவிடம்:


தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.





வழு வழாநிலை - வழுவமைதி


இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.


இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.


இரு திணையும் ஐம்பாலும் மூவிடமும் காலமும் வினாவும் விடையும் பலவகை மரபுகளும் ஆகிய ஏழும் தொடர்களில் இலக்கணப் பிழைகளுடன் வந்தால் அவையும் வழு எனப்படும். அவ்வாறு இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பின் அவை வழாநிலை எனப்படும்.








வழுவமைதி


இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.


1. திணை வழுவமைதி


"என் அம்மை வந்தாள்" என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.


2. பால் வழுவமைதி


"வாடா இராசா, வாடா கண்ணா" என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.


3. இட வழுவமைதி


மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,"இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்" என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.


4. கால வழுவமைதி


குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.


இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.


5. மரபு வழுவமைதி


"கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும்" - பாரதியார்.


குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.




மேலும் அறிய...Click Here








ஞாயிறு, 5 ஜூன், 2022

10th new syllabus tamil question answer

 



        TNPSC CHANNEL   

     பத்தாம் வகுப்பு

  தமிழ்

          (இயல் 1 மற்றும் 2) 20 Questions TEST


Question 1.

‘அன்னை மொழியே’ கவிதை இடம் பெறும் நூல்

அ) நூறாசிரியம்

ஆ) கனிச்சாறு

இ) எண்சுவை எண்பது

ஈ) பாவியக்கொத்து

Answer:

ஆ) கனிச்சாறு


Question 2.

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே”- என்று பாடியவர்

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) க.சச்சிதானந்தன்

இ) வாணிதாசன்

ஈ) கண்ண தாசன்

Answer:

அ) பெருஞ்சித்திரனார்


Question 3.

‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?

அ) இளங்குமரனார்

ஆ) பெருந்தேவனார்

இ) திரு.வி.க

ஈ) ம.பொ .சி

Answer:

இ) திரு.வி.க



Question 4.

 ‘மொழி ஞாயிறு’ என்றழைக்கப்பட்டவர் யார்? 

அ) க.அப்பாத்துரை

ஆ) தேவநேயப் பாவாணர்

இ) இளங்குமரனார்

ஈ) ஜி.யு.போப்

Answer:

ஆ) தேவநேயப் பாவாணர்


Question 5.

‘வளிமிகின் வலி இல்லை ‘ என்று பாடியவர் யார்? நூல் எது?

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்

ஆ) ஆத்திச்சூடி, ஔவையார்

இ) கலித்தொகை, நல்லந்துவனார்

ஈ) புறநானூறு, இளநாகனார்

Answer:

அ) புறநானூறு, ஐயூர் முடவனார்



Question 6.

முதல் தமிழ்க்கணினி உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 1983

ஆ) 1938

இ) 1893

ஈ) 1980

Answer:

அ) 1983

Question 7.

முதல் தமிழ்க் கணினிக்குச் சூட்டப்பட்ட பெயர்

அ) திருவள்ளுவர்

ஆ) தொல்காப்பியர்

இ) அகத்தியர்

ஈ) கம்ப ர்

Answer:

அ) திருவள்ளுவர்

Question 8.

குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) இரண்டு

Answer:

ஆ) நான்கு

Question 9.

உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?

அ) திருமூலர்

ஆ) அகத்தியர்

இ) வள்ளுவர்

ஈ) தொல்காப்பியர்

Answer:

ஈ) தொல்காப்பியர்

Question 10.

உலகக் காற்று நாள்

அ) ஜூன் 15

ஆ) ஜூலை 15

இ) ஜனவரி 15

ஈ) டிசம்பர் 10

Answer:

அ) ஜூன் 15



Question 11.

“களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்று பாடியவர்

அ) காக்கைப் பாடினியார்

ஆ) வெண்ணிக்குயத்தியார்

இ) வெள்ளிவீதியார்

ஈ) நப்பசலையார்

Answer:

ஆ) வெண்ணிக்குயத்தியார்



Question 12.

‘சிந்துக்குத் தந்தை’ என்று பாராட்டப்பட்டவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்



Question 13.

கேலிச் சித்திரம், கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்.

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

ஈ) கவிமணி

Answer:

அ) பாரதியார்




Question 14. 

முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?

அ) 101

ஆ) 102

இ) 103

ஈ) 104

Answer:

இ) 103


Question 15.

‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்

அ) மலர்கள்

ஆ) மான்கள்

இ) விண்மீன்கள்

ஈ) கண்க ள்

Answer:

அ) மலர்கள்

Question 16.

ப. சிங்காரம் பணியாற்றிய இதழ்

அ) தினகரன்

ஆ) தினமணி

இ) தினத்தந்தி

ஈ) தினபூமி

Answer:

இ) தினத்தந்தி


Question 17.

‘கப்பித்தான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

அ) தலைமை மாலுமி




Question 18.

‘தொங்கான்’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) தலைமை மாலுமி

ஆ) கப்பல்

இ) புயல்

ஈ) பயணி

Answer:

ஆ) கப்பல்



Question 19.

தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

ஈ) ஆறு



Question 20.

வேற்றுமையுருபு அல்லாதது

அ) ஐ, ஒடு

ஆ) கு, இன்

இ) ஆகிய, ஆன

ஈ) அது, கண்

Answer:

இ) ஆகிய, ஆன







ANSWER KEY PDF DOWNLOAD Click Here



         *******


10th new syllabus in tamil

                             TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்


இயல் 1 All topic pdf download

க்ளிக் செய்யுங்கள்



இயல் 2.1 கேட்கிறதா ஏன்குரல்

👇👇👇

 pdf download






இயல் 2.2 காற்றை வா!

👇👇👇

 pdf download











இயல்2.3 முல்லைப்பாட்டு

👇👇👇

 pdf download







இயல் 2.4 புயலிலே ஒரு தோணி

👇👇👇

 pdf download




இயல் 2.5 தொகைநிலைத்

தொடர்கள்👇👇👇

 pdf download












மேலும் அறிய... TNPSC CHANNEL




10th new syllabus in tamil

                            TNPSC CHANNEL   

  பத்தாம் வகுப்பு

  தமிழ்



இயல் 1.1 அன்னை மொழியை

👇👇👇




இயல் 1.2 தமிழ்சொல் வளம்

👇👇👇










இயல் 1.3 இரட்டுற மொழிதல்,  

இயல் 1.4       உரைநடையின் அணிநலன்கள்

👇👇👇




இயல் 1.5 எழுத்து சொல்

👇👇👇



இயல் 2 All topic pdf download Link

க்ளிக் செய்யுங்கள்





மேலும் அறிய... TNPSC CHANNEL





வெள்ளி, 3 ஜூன், 2022

பரிபாடல்

 பரிபாடல்


பாடலின் பொருள்:


எதுவுமேயில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு (பரமாணு) பேரொலியுடன் தோன்றியது. உருவம் இல்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊ ஊழி அது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. பிறகு நெருப்புப் பந்துபோலப் புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது. பின்னர்ப் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. 





புதன், 1 ஜூன், 2022

பெருமாள் திருமொழி

 பெருமாள் திருமொழி



வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்  பால் மாளாத காதல் நோயாளன் போல்  மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

பாசுர எண்: 691


_குலசேகராழ்வார்



 பாடலின் பொருள்:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.



 சொல்லும் பொருளும்:


சுடினும் சுட்டாலும், மாளாத-தீராத, மாயம் - விளையாட்டு



வித்துவக்கோடு என்னும் ஊர், கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது. குலசேகர ஆழ்வார் அங்குள்ள இறைவனான உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்துப் பாடுகிறார்.




நூல் வெளி


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. இதில் 105 பாடல்கள் உள்ளன. இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.




மேலும் அறிய க்ளிக் செய்யுங்கள்







 

தொகாநிலைத் தொடர்கள்

தொகாநிலைத் தொடர்கள் 



ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.


எ.கா காற்று வீசியது குயில் கூவியது


தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும் .அவை


1. எழுவாய் தொடர்


2. விளித்தொடர் 3. வினைமுற்றுத் தொடர்


4. பெயரெச்சத் தொடர்


5. வினையெச்சத்தொடர்


6. வேற்றுமைத் தொடர் 7. இடைச்சொல் தொடர்


8. உரிச்சொல் தொடர்


9. அடுக்குத்தொடர்



1. எழுவாய்த்தொடர்


எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.


இனியன் கவிஞர் – பெயர் 

காவிரி பாய்ந்தது - வினை 

பேருந்து வருமா? - வினா




2. விளித்தொடர்


விளியுடன்  வினைதொடர்வது

விளித்தொடர் ஆகும்.


நண்பா எழுது! " நண்பா" என்னும் விளிப்பெயர் "எழுது" என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.





3. வினைமுற்றுத்தொடர்


வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.


பாடினாள் கண்ணகி "பாடினாள்" என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.




4. பெயரெச்சத்தொடர்


முற்றுப் பெறாத வினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.


கேட்ட பாடல் "கேட்ட" என்னும் எச்சவினை "பாடல்" என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.





5. வினையெச்சத்தொடர்


முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.


பாடி மகிழ்ந்தனர் "பாடி" என்னும் எச்சவினை "மகிழ்ந்தனர்" என்னும் " வினையைக் கொண்டு முடிந்துள்ளது.



6. வேற்றுமைத்தொடர்


வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.


கட்டுரையைப் படித்தாள்.


இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.







7. இடைச்சொல் தொடர்


இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.


மற்றொன்று - மற்று + ஒன்று. "மற்று" என்னும் இடைச்சொல்லை அடுத்து "ஒன்று" என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.






8. உரிச்சொல் தொடர்


உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சாலச் சிறந்தது "சால" என்பது


உரிச்சொல். அதனைத்தொடர்ந்து "சிறந்தது" என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.





9. அடுக்குத் தொடர்


ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.


வருக! வருக! வருக! ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.




ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.


எ.கா.


கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி



DOWNLOAD PDF LINK

 ✅ க்ளிக் செய்யுங்கள்




மேலும் அறிய... TNPSC CHANNEL




























TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...