திங்கள், 7 மார்ச், 2022

தண்ணீர்

 தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

Answer:


தண்ணீர் – கந்தர்வன்

முன்னுரை :
“நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்’ முதலிய வரிசையில் “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :

தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அவ்ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப்பகை, புயல் வந்தால் 3 நாட்கள் வெள்ளக்காடாய் இருக்கும் நான்காவது நாள் தண்ணீரற்ற நிலமாய் மாறி விடும். பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.


பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து இரயில் பெட்டிக்குள் ஏறினர்.


இந்திராவின் கனவு :
அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள், சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா என்று சலித்துக் கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை.

இன்ஜினின் ஊதல் ஒலி வந்தது அம்மா, சொட்டுத் தண்ணியில்லை என்று முனகியதே ஞாபகம் வந்தது. இன்னும் பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்த இந்திராவின் தந்தையிடம் இந்திரா வரவில்லை இரயில் போயிருச்சு என்று சொல்லப்பட்டது.
எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.


தாயின் துயரம் :
“எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோ” என அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள்.

தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! தந்தை கேட்டார். பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த. இந்திரா சொன்னாள் பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய.

கதை உணர்த்தும் கருப்பொருள் :
இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21-ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’ எழுதியுள்ளார்.


“சிற்றூரின் தேவைகள் இன்றளவும்
நிறைவு செய்யப்படுவதில்லை.”

முடிவுரை :
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையை கட்டமைப்போம்
மழைநீர் சேகரிப்போம்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...