TNPSC CHANNEL
ரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட வினா விடை
பொது தமிழ் (இலக்கியம்)
101. முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
102.திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?
தமிழ்மறை, பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி, உத்தர வேதம்
103. ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?
மகாபாரதம்
104. திராவிட வேதம், தமிழ் வேதம் என்றழைக்கப்படும் நூல்
எது?
நாலாயிர திவ்விய பிரபந்தம்
105.வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?
நாலடியார்
106. இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுபவை எவை? " சிலப்பதிகாரம், மணிமேகலை
107.ராமகாதை எனப்படும் நூல் எது?
கம்ப ராமாயணம்
108.கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
கம்பர்
109.உவமைக்கவிஞர் எனப்படுபவர் யார்?
சுரதா
110.தேசியக்கவி, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு
புலவன் எனப்படுபவர் யார்?
பாரதியார்
111.புரட்சிக்கவிஞர். பாவேந்தர், புதுவைக்குயில் எனப்படுபவர்
யார்?
பாரதிதாசன்
112.வைக்கம் வீரர். பகுத்தறிவுப் பகலவன் எனப்படுபவர் யார்?
பெரியார்
113.தெய்வப்புலவர், செந்நாப் போதார். மானானுபங்கி
எனப்படுபவர் யார்?
திருவள்ளுவர்
114.சிலம்புச் செல்வர் எனப்படுபவர் யார்?
ம.பொ.சிவஞானம்
115. நாவலர் எனப்படுபவர் யார்?
சோமசுந்தர பாரதியார்
116. கிறிஸ்தவக் கம்பன் எனப்படுபவர் யார்?
ஹெச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை
117.வள்ளலார் எனப்படுபவர் யார்?
ராமலிங்க அடிகள்
118.முத்தமிழ்க் காவலர் எனப்படுபவர் யார்?
கி.ஆ.பெ.விசுவநாதம்
119. சொல்லின் செல்வர் எனப்படுபவர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
120. தமிழ்த் தென்றல் எனப்படுபவர் யார்?
திரு.வி.க
121.படிக்காத மேதை எனப்படுபவர் யார்?
காமராஜர்
122. தமிழ் நாடகப் பேராசிரியர் எனப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
123.ஆசிய ஜோதி எனப்படுபவர் யார்?
நேரு
124.கவி யோகி எனப்படுபவர் யார்?
சுத்தானந்த பாரதியார்
125.அப்பர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்
126. ஆளுடைய பிள்ளை எனப்படுபவர் யார்?
திருஞானசம்பந்தர்
127. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
128.மொழிஞாயிறு எனப்படுபவர் யார்?
தேவநேயப் பாவாணர்
129 தனித்தமிழ் இயக்கத் தந்தை எனப்படுபவர் யார்?
மறைமலை அடிகள்
130.ரசிகமணி எனப்படுபவர் யார்?
டி.கே.சிதம்பரநாதன்
131.நாமக்கல் கவிஞர் எனப்படுபவர் யார்?
ராமலிங்கம் பிள்ளை
132.பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?
சூரிய நாராயண சாஸ்திரி
133.அகிலனின் இயற்பெயர் என்ன?
அகிலாண்டம்
134.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
முத்தையா
135. நம்மாழ்வாரின் இயற்பெயர் என்ன?
மாறன்
136.ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?
ஜெகதீசன்
137.கவிஞர் வாலியின் இயற்பெயர் என்ன?
ரங்கராஜன்
138.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
கனகசுப்பு ரத்தினம்
139.புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?
விருத்தாசலம்
140.கல்கியின் இயற்பெயர் என்ன?
ரா.கிருஷ்ணமூர்த்தி
141.சுஜாதாவின் இயற்பெயர் என்ன?
ரங்கராஜன்
142.வீரமா முனிவரின் இயற்பெயர் என்ன?
ஜோசப் பெஸ்கி
143.ஆண்டாளின் இயற்பெயர் என்ன?
கோதை
144.மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?
வேதாசலம்
145.தமிழ் நூல்களின் பழமையானது எது?
தொல்காப்பியம்
146.முதல் சங்கம் இருந்த இடம் எது?
தென் மதுரை
147 இடைச்சங்கம் இருந்த இடம் எது ?
கபாடபுரம்
148.கடைச்சங்கம் இருந்த இடம் எது ?
மதுரை
149.சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?
பதிற்றுப்பத்து
150. சங்க இலக்கியங்களில் எத்தனை பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
31
பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்
பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்
பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக