காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் திருந்துற நோக்கல் வருக என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே*
இல்லொழுக்கம், (பா எண்: 17)
_அதிவீரராம பாண்டியர்
பாடலின் பொருள்
விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.
மேலும் அறிய... TNPSC CHANNEL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக