நீதி வெண்பா
சதாவதானம்
'சதம்' என்றால் நூறு என்று பொருள். ஒருவரது புலமையையும் நினைவாற்றலையும் நுண்அறிவையும் சோதிப்பதற்காக ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலே சதாவதானம்.
நூல் வெளி
'சதாவதானம்' என்னும் கலையில் சிறந்து விளங்கிய செய்குதம்பிப் பாவலர் (1874 - 1950), கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்; பதினைந்து வயதிலேயே செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர்; சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்; 1907 மார்ச் 10ஆம் நாளில் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றார். இவர் நினைவைப் போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும் பள்ளியும் உள்ளன. இவரது அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக