TNPSC CHANNEL
பொதுத்தமிழ்
ஆசிரியர்கள் - சிறப்புப்பெயர்கள்
1.திருவள்ளுவர் – பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை:
• தேவர்
• நாயனார்
• தெய்வப்புலவர்
• செந்நாப்போதர்
• பெருநாவலர்
• பொய்யில் புலவர்
• பொய்யாமொழிப் புலவர்
• மாதானுபங்கி
• முதற்பாவலர்
2. கம்பர் -
• "கல்வியிற் பெரியோன் கம்பன்",
• "கவிச்சக்ரவர்த்தி".
3. பாரதியார் – இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.
• மகாகவி,
• தேசியக் கவி,
• விடுதலைக் கவி,
• முண்டாசுக் கவிஞன்,
• சக்தி தாசன்.
4. பாரதிதாசன் – இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்'
• புரட்சிக் கவிஞர்
• பாவேந்தர்
5. நாமக்கல் கவிஞர் - வெ. இராமலிங்கம் பிள்ளை
• காந்தியக் கவிஞர்
6. தேசிய விநாயகம் பிள்ளை –
• கவிமணி
7. முடியரசன் - இயற்பெயர்: துரைராசு
• வீறுகவியரசர்
8. வாணிதாசன் – இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி
• கவிஞரேறு,
• பாவலர் மணி,
• தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த்,
• தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.
9. சுரதா - இயற்பெயர் : இராசகோபாலன்
• உவமைக் கவிஞர்
• கவிஞர் திலகம்
• தன்மானக் கவிஞர்
• கலைமாமணி
• கவிமன்னர்
10. கண்ணதாசன் – இயற்பெயர் : முத்தையா
• கவியரசு
• கவிச்சக்ரவர்த்தி
• குழந்தை மனம் கொண்ட கவிஞர்.
11. உடுமலை நாராயணகவி - இயற்பெயர் : நாராயணசாமி
• பகுத்தறிவுக் கவிராயர்,
• நாராயணகவி.
12. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் –
• மக்கள் கவிஞர்
13. மருதகாசி –
• திரைக்கவித் திலகம்
14. ந.பிச்சமூர்த்தி –
• புதுக்கவிதையின் தந்தை
15. சிற்பி பாலசுப்ரமணியம் –
• சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)
• “வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை
16. மறைமலை அடிகள் - இயற்பெயர் : வேதாசலம்
(தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி)
17. பரிதிமாற் கலைஞர் – இயற்பெயர் : வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி
18. உ. வே. சாமிநாதையர் -
• தமிழ்த் தாத்தா
19. தேவநேயப் பாவாணர் –
• மொழிஞாயிறு
20. வீரமாமுனிவர் – இயற்பெயர் : கான்ஸ்டாண்சு ஜோசப் பெசுகி
• இஸ்மத் சன்னியாசி,
• தைரியநாதன்.
மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக