பத்தாம் வகுப்பு
தமிழ்
இலக்கணப்பகுதி
மாதிரி விளக்கம்
வினா அறுவகைப்படும்.
1. அறிவினா
2. அறிய வினா
3. ஐய வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா
1. அறிவினா:
தான் ஒரு பொருளை நன்கு அறிந்தும், பிறருக்கு தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினவப்படும் வினா
(எ.கா)
திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.
2. அறியா வினா :
தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவப்படும் வினா
(எ.கா)
எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது .
3. ஐய வினா
தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினை போக்கி கொள்வதற்காக வினவப்படும் வினா
(எ.கா) அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?
4. கொளல் வினா
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவப்படும் வினா
(எ.கா) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.
5. கொடை வினா
தான் ஒரு பொருளை கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலை பற்றி பிறரிடம் வினவப்படும் வினா
(எ.கா) மாணவர்களே! உங்களுக்கு சீருடை இல்லையோ?
6. ஏவல் வினா
ஒரு தொழிலை செய்யும் படி ஏவும் வினா ஏவல் வினா
(எ.கா) மனப்பாடச் செய்யுளை படித்தாயா?
முருகா சாப்பிட்டாயா?
(இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளை தருகின்றன)
விடை எட்டு வகைப்படும்.
சுட்டுவிடை
மறைவிடை
நேர்விடை
ஏவல்விடை
வினாஎதிர்வினாதல்விடை
உற்றதுரைத்தல்விடை
உறுவதுகூறல்விடை
இனமொழிவிடை
சுட்டுவிடைதொகு
”சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.
‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம் கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும்.
மறைவிடை ( எதிர் மறுத்துக் கூறல் விடை)தொகு
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யேன்’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.
செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.
இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.
நேர்விடை ( உடன்பட்டுக் கூறுதல்)தொகு
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.
நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.
செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.
ஏவல்விடைதொகு
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது , ஏவல்விடை.
வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வதுஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை எனப்பட்டது.
கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும்.
வினாஎதிர்வினாதல்விடைதொகு
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை.
வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.
கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை எனப்படும்.
உற்றதுரைத்தல்விடைதொகு
”இது செய்வாயா?” என்று வினவிய போது, ’உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.
வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.
நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.
உறுவதுகூறல்விடைதொகு
”இது செய்வாயா?” என்று வினவியபோது, ’கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.
வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.
நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.
இனமொழி விடைதொகு
”ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை.
ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.
‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என விடை தருதல்.
சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை(செவ்வன் இறை). மற்ற ஐந்தும் வினாக்களுக்குரிய விடையைக் குறிப்பால்(இறை பயப்பன) உணர்த்துவன.
_______________
பத்தாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :
பத்தாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல
✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
10th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)
தொகுப்பாளர்
R. சரண்ராஜ்
மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக