TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
அலகு 4 காற்று
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
காற்றில் நைட்ரஜனின் சதவீதம்
அ) 78% ஆ) 21%
இ) 0.03% ஈ) 1%
விடை: அ) 78%
Question 2.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ____ ஆகும்.
அ) இலைத்துளை
ஆ) பச்சையம்
இ) இலைகள்
ஈ) மலர்கள்
விடை: அ) இலைத்துளை
Question 3.
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
அ) நைட்ரஜன்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்சிஜன்
ஈ) நீராவி
விடை:
இ) ஆக்சிஜன்
Question 4.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் ______
அ) உணவிற்கு நிறம் அளிக்கிறது.
ஆ) உணவிற்கு சுவை அளிக்கிறது.
இ) உணவிற்கு புரதத்தையும், தாது உப்புகளையும் அளிக்கிறது.
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
விடை:
ஈ) உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது
Question 5.
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
விடை: ஈ) i மற்றும் iv
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
Question 1.
காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)
Question 2.
ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்.
விடை:
ஆக்சிஜன் (O2)
Question 3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும்
வாயு _______
விடை:
ஆக்சிஜன்(O2)
Question 4.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் _____ காணமுடியும்.
விடை:
தூசுப் பொருட்களைக்
Question 5.
_____ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல ______ மாற்றும்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு(CO2)
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்ஸைடு உள்ளது.
விடை:
தவறு. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் உள்ளது.
Question 2.
புவி வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்.
விடை: சரி
Question 3.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
விடை: தவறு.
காற்றின் இயைபு இடத்திற்கு இடமும், காலநிலையைப் பொருத்தும் மாறுபாடு அடைகிறது.
Question 4.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
விடை: சரி
Question 5.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும், விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும் சமன் செய்யப்படுகிறது.
விடை: தவறு
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலமும், விலங்குகளின் சுவாசம் மூலமும் சமன் செய்யப்படுகிறது.
V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.
1. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
2. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
3. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
4. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில், பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலதிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
6. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
விடை:
1. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது.
2. தாவரங்கள் உணவு தயாரிக்கும் முறைக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
3. இந்த முறையில், தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
4. தாவரங்களும் விலங்குகளைப் போல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன.
5. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இந்த முறையில் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கிறது.
6. தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் பச்சையத்தின் துணையோடு, வளி மண்டலத் திலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.
VI. ஒப்புமை தருக.
Question 1.
ஒளிச்சேர்க்கை : _____ :: சுவாசம் : ஆக்சிஜன்.
விடை:
கார்பன்-டை-ஆக்ஸைடு
Question 2.
காற்றின் 78% : எரிதலுக்கு துணை புரிவதில்லை :: _____
____ : எரிதலுக்கு துணை புரிகிறது.
விடை:
காற்றின் 21%
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக