TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
அலகு 7 கணினியின் பாகங்கள்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
உள்ளீட்டுக்கருவி அல்லாது எது?
அ) சுட்டி
ஆ) விசைப்பலகை
இ) ஒலிபெருக்கி
ஈ) விரலி
விடை:
இ) ஒலிபெருக்கி
Question 2.
மையச் செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?
அ) ஈதர்நெட் (Ethernet)
ஆ) வி.ஜி.ஏ. (VGA)
இ) எச்.டி.எம்.ஐ (HDMI)
ஈ) யு.எஸ்.பி (USB)
விடை: ஆ) வி.ஜி.ஏ. (VGA)
Question 3.
கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?
அ) ஒலிபெருக்கி
ஆ) சுட்டி
இ) திரையகம்
ஈ) அச்சுப்பொறி
விடை:
ஆ) சுட்டி
Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
அ) ஊடலை
ஆ) மின்னலை
இ) வி.ஜி.ஏ. (VGA)
ஈ) யு.எஸ்.பி. (USB)
விடை:
அ) ஊடலை
Question 5.
விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
அ) வெளியீட்டுக்கருவி
ஆ) உள்ளீட்டுக்கருவி
இ) சேமிப்புக்கருவி
ஈ) இணைப்புக்கருவி
விடை:
இ) சேமிப்புக்கருவி
I. கூடுதல் வினாக்கள்
Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடு:1. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
அ) உள்ளீட்டகம்
ஆ) வெளியீட்டகம்
இ) சுட்டி
ஈ) மையச் செயலகம்
விடை:
இ) சுட்டி
Question 2.
கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.
அ) நகர்த்தும் உருளை
ஆ) இடது பொத்தான்
இ) வலது பொத்தான்
விடை: அ) நகர்த்தும் உருளை
Question 3.
ஒலிவடம் ______ ஐ இணைக்க பயன்படுகிறது.
அ) மையச் செயலகத்துடன் கைப்பேசி
ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
இ) கணினி திரையை மையச் செயலகத்துடன்
ஈ) கணினியுடன் ஈதர்நெட்டை
விடை: ஆ) கணினியுடன் ஒலிப்பெருக்கியை
Question 4.
கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
அ) யு.எஸ்.பி.
ஆ) மின் இணைப்பு வடம்
இ) எச்.டி.எம்.ஐ
ஈ) அருகலை
விடை:
ஈ) அருகலை
Question 5.
நுண்கணினியை _____ என அழைக்கிறோம்.
அ) மேசைக்கணினி
ஆ) தனியாள் கணினி
இ) மடிக்கணினி
ஈ) பலகைக் கணினி
விடை:
ஆ) தனியாள் கணினி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
____, _____, கணினியில் உள்ளீடு செய்வதற்கு விசைப்பலகையே ஆதாரமாகும்.
விடை:
எண்ணையும், எழுத்தையும்
Question 2.
கணினியின் எல்லாப்பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப் படுத்துவது _____ ஆகும்.
விடை:
கட்டுப்பாட்டகம்
Question 3.
கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்.
விடை: இரண்டாக
Question 4.
தரவுகளை ______ என்ற அலகால் அளக்கலாம்.
விடை: பிட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக