TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 6 உடல் நலமும் சுகாதாரமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ……… தேவைப்படுகிறது.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) கொழுப்பு
இ) புரதம்
ஈ) நீர்
விடை: இ) புரதம்
Question 2.
ஸ்கர்வி …….. குறைபாட்டினால் உண்டாகிறது.
அ) வைட்டமின் A
ஆ) வைட்டமின் B
இ வைட்டமின் C
ஈ) வைட்டமின் D
விடை: இ) வைட்டமின் C
Question 3.
கால்சியம் _____ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.
அ) கார்போஹைட்ரேட் ஆ) கொழுப்பு
இ) புரதம் ஈ) தாது உப்புகள்
விடை:
ஈ) தாது உப்புகள்
Question 4.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில்
அ) அவற்றில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆ) அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
இ அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
ஈ) அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.
விடை:
இ) அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
Question 5.
பாக்டீரியா, ஒரு சிறிய ———– நுண்ணுயிரி
அ) புரோகேரியோட்டிக்
ஆ) யூகேரியோட்டிக்
இ) புரோட்டோசோவா
ஈ) செல்லற்ற
விடை:
அ) புரோகேரியோட்டிக்
II. சரியா? தவறா?
Question 1.
நம் உணவில் மூன்று முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
விடை:
தவறு
Question 2.
நம் உடலில் ஆற்றலை சேமித்து வைக்க கொழுப்பு உதவுகிறது.
விடை:
சரி
Question 3.
3. அனைத்து
பாக்டீரியாக்களும் கசையிழைகளைப் பெற்றுள்ளன
விடை: தவறு (அனைத்து பாக்டீரியாக்களும் செல் சவ்வுகளற்ற நுண்ணுறுப்புகளை பெற்றுள்ளன.)
Question 4.
ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து உதவுகிறது.
விடை: சரி
Question 5.
ஓம்புயிரியின் உடலுக்கு வெளியேயும் வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்
விடை: தவறு (ஓம்புயிரியின் உடலுக்குள் நுழைந்து வைரஸ்களால் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய இயலும்.)
III. கோடிட்ட இடத்தை நிரப்புக.
Question 1.
ஊட்டச்சத்து குறைபாடு _____ நோய்களுக்கு வழிவகுக்கிறது.
விடை:
குறைபாட்டு
Question 2.
பெரியவர்களில், அயோடின் சத்துக்குறைபாடு ______நோயை ஏற்படுத்துகிறது.
விடை: காய்ட்டர் (முன்கழுத்து கழலை)
Question 3.
வைட்டமின் D குறைபாடு ______ நோயை ஏற்படுத்துகிறது.
விடை: ரிக்கெட்ஸ்
Question 4.
டைபாய்டு நோய், ______ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.
விடை:
உணவு
Question 5.
குளிர்காய்ச்சல் (இன்புளுயன்சா) ______ நுண்ணுயிரியால் ஏற்படுகிறது
விடை:
வைரஸ்
விடை : ஆ, ஈ, உ, அ, இ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக