TNPSC CHANNEL
ஏழாம் வகுப்பு அறிவியல்
முதல் பருவம்
அலகு 2 விசையும் இயக்கமும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி.
அ) சுழி ஆ) r
இ) 2r ஈ) r/2
விடை: இ) 2r
Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது
அ) சீரான இயக்கத்தில் உள்ளது.
ஆ) ஓய்வு நிலையில் உள்ளது.
இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது.
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
விடை:
ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.
Question 3.
கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.
விடை:
Question 4.
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது
அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்.
ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்.
இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்.
ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
விடை: ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்.
Question 5.
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்?
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்.
ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்.
இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்.
ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்.
விடை:
அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை குறைத்தல்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ___________ எனப்படும்.
விடை:
இடப்பெயர்ச்சி
Question 2.
திசைவேகம் மாறுபடும் வீதம் ___________ ஆகும்.
விடை:
முடுக்கம்
Question 3.
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
விடை:
நேர் முடுக்கம்
Question 4.
வேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு ____________ மதிப்பனைத் தருகிறது.
விடை:
முடுக்கம்
Question 5.
ஒரு பொருள் நகர்த்தப்படும்போது ______________ சமநிலையில் அதன் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.
விடை:
நடுநிலை
III.பொருத்துக
IV. ஒப்புமை தருக
Question 1.
திசைவேகம் : மீட்டர்/விநாடி :: முடுக்கம் : ____________
விடை: மீ / வி2
Question 2.
அளவுகோலின் நீளம் : மீட்டர் :: வானூர்தியின் வேகம் : ___________
விடை:
நாட்
Question 3.
இடப்பெயர்ச்சி/காலம் : திசைவேகம் :: தொலைவு/காலம் : ___________
விடை:
வேகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக