புதன், 18 அக்டோபர், 2023

Grade-I included in Group-VII-A Services

 

                          TNPSC CHANNEL





Notification : click here

Apply :   click here        



TNPSC Jobs; தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு; இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை-1 (Executive Officer, Grade-Iபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

செயல் அலுவலர் நிலை-1

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் அல்லது வணிகவியலில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,38,500

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 30 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மூன்று தாள்களாக நடைபெறும். முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாளில் இந்துமதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

மூன்றாம் தாளில் சட்டம் சம்பந்தமான வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 06.01.2024, 07.01.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...