"கருமேகம் வானில் சூழ்ந்தால் தான் மழை பொழியும்... அதுபோல
"கஷ்டமான சூழ்நிலையில் தான் நல்வழி பிறக்கும்....
நாவல்*** (பாகம் 5)***தொடர்கிறது...
(பாகம் 4...ஒளி விளக்கின் கதை இனிதே தொடங்குகிறது...
பிறந்த பச்சிளம் குழந்தையின் தந்தை சிறைக்குள் இருக்கிறார். குழந்தையின் தாயோ வலியில் துடிக்கிறாள்.
குழந்தையின் பாட்டி கடவுளை வேண்டுகிறார்.
மழை, காற்று மெல்ல குறைந்தது, காலை விடியல் துவங்கியது...
சில மாதங்கள் கடந்தன...
சிறைக்குள் இருக்கும் தந்தை தாய்க்கு கடிதம் எழுதுகிறார். என் பிள்ளையை நான் பார்க்க வேண்டும் என்று... தாய்க்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. தாயின் தாயோ(பாட்டி) கால் நடக்க முடியாதவர்.
துணைக்கு யாரும் இல்லை கிராமத்தில் இருந்து பட்டணத்தில் உள்ள சிறைக்கு செல்ல வேண்டும். வேறு வழி இன்றி கையில் இருந்த பணத்துடன் வீட்டில் இருந்த பழைய துணியில் குழந்தையை
பாதுகாப்பாக தூக்கிக்கொண்டு பட்டணம் புறப்பட்டாள் ஒளிவிலக்கின் தாய்!
இலக்கை அடைய பலவழிகள்!
அதில்
நமக்கான நல்வழியில் பயணிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக