புதன், 30 மார்ச், 2022

group 4 exam notification 2022 Full details

 TNPSC CHANNEL


Group 4 exam notification 2022 Full details :


1. TNPSC GROUP 4 SYLLABUS Click here


2.TNPSC GROUP 4 NOTIFICATION TAMIL Click here


3. TNPSC GROUP 4 NOTIFICATION ENGLISH Click here


4. TNPSC GROUP 4 EXAM Apply


5. PSTM CERTIFICATE Click here


6. TNPSC CHANNEL Click here







திங்கள், 28 மார்ச், 2022

சந்தை

 சந்தை




பூஞ்சோலை கிராமத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள தம்முடைய மகள் வீட்டிற்கு வந்திருக்கிறார் பெரியவர் தணிகாசளம். இவர், தம் ஊழில் மரபுவழி வேளாண்மை செய்பவர், ஊராட்சித்

தலைவராகவும் தொண்டாற்றிய அனுபவம் மிக்கவர். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பெயரன் மூர்த்தியும் நான்காம் வகுப்பில் படிக்கும் பெயர்த்தி கீர்த்தனாவும் அவருடன் நடத்திய உணரயாடலின் சிறு பகுதி.


கீர்த்தனா: தாத்தா! எங்க ஊர்ல புதுசா 'மால்' திறந்திருக்காங்க, வர்றீங்களா போய்ப் பார்த்துட்டு வரலாம்?


தாத்தா: 'மால்'னா, என்ன கண்ணு பொருள்?

மூர்த்தி: ஒரே இடத்துவ எல்லாக்

கடைகளும் இருக்கும் தாத்தா. குண்டூசியிலிருந்து கணினி வரைக்கும் வாங்கலாம். பல்லங்காடியகம்னு சொல்லலாம்.

தாத்தா: பழங்காலத் தமிழ் இலக்கியத்தில்

''நாளங்காடி', 'அவ்லங்காடி' என்பார்களே அது மாதிரியா? 

மூர்த்தி: நாளங்காடி, அல்லங்காடியா?

ஒன்னும் புரியலியே?

தாத்தா: பகலில் செயல்படும்

கடைவீதிகளை 'நாளங்காடி' என்றும் இரவில் செயல்படும் கடைவீதிகளை 'அல்லங்காடி' என்றும் சொல்வாங்க. நாள் என்றால் பகல்; அல் என்றால் இரவு.

மூர்த்தி: நீங்க கடைவீதியைப் பத்தி

சொல்றீங்க. அது இல்ல தாத்தா இது. இந்த ஒரே கட்டடத்துல கடைகள் திரைப்பட அரங்கு. உணவகம், கேளிக்கை அரங்குகள் ன்னு எல்லாமே இருக்கும் தாத்தா.

கீர்த்தனா: தாத்தா, அவன் ஏதாவது

பேசிகிட்டே இருப்பான். நீங்க கிளம்புங்க போயிட்டு வரலாம்.

தாத்தா: சரி கண்ணு. நீதான் கிளம்பணும். நான் தயாராகத்தான் இருக்கேன். எங்க காலத்துச் 'சந்தை' தான் இப்ப வளர்ந்து, நீங்க சொல்ற 'மால்' ஆயிடுச்சா மூர்த்தி?

மூர்த்தி: சந்தையா? அது எப்படி இருக்கும்? நான் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் எடுத்துப் படிக்கலாம்னு இருக்கேன். அதனால அதைப்பற்றித் தெளிவாச் சொல்லுங்க தத்தா.

தாத்தா: மனுசங்க நாடோடியா வேட்டையாடி வாழ்ந்த காலத்துல அவங்களுக்குக் கிடைச்ச உணவை அவங்களுக்குள்ளாவே பகிர்ந்துகிட்டாங்க. அதனால் அந்தக் காலத்துல பொதுச் சந்தைன்னு ஒன்னு தேவைப்படலை. பின்னாடி காலம் மாறி உற்பத்திப்பெருக்கம் ஏற்பட்டபோது தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களோட தேவை. பயன்பாடு, உற்பத்தி ஆகியவை பெருகின. ஒன்றைக் கொடுத்து இன்னொன்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விற்று வாங்குவதும். வாங்கி விற்பதுமான பண்டமாற்று முறை உண்டாச்சு.

கீர்த்தனா: தாத்தா கிளம்புங்க. இங்க இருந்து பக்கம்தான் நடந்தேகூட போயிடலாம்.

மூர்த்தி: எதுக்கு கீர்த்தனா தாத்தாவ நச்சரிக்கிற? தாத்தா சந்தையைப் பற்றிச் சொல்லி முடிக்கட்டும், அப்புறம் போகலாம்.

தாத்தா: பரவாயில்ல மூர்த்தி, நடந்துகிட்டே சொல்றேன் வா.

(மூவரும் தெருவில் இறங்கி நடந்து செல்கின்றனர்.)




மூர்த்தி:பண்டமாற்றுமுறை என்றால் காசு பணம் இல்லாம செய்கிற சிறு வணிகம் தானே. அது எப்படி தாத்தா சந்தை முறையா மாறிச்சு?

தாத்தா: கிராமத்து மக்கள் தங்களோட நிலத்தில் விளையும் காய்கறி, கீரை, தானியம் போன்ற பொருள்களை விற்கவும் தேவையான மாற்றுப் பொருள்களை வாங்கவும் விரும்பி முச்சந்தி, நாற்சந்தின்னு மக்கள் கூடும் இடங்களில் சுடை விரிச்சாங்க. இதுதான் சந்தைங்கிற பொது வணிக இடமாகப் பின்னால் மாறியது.

கீர்த்தனா: தாத்தார் அங்க பாருங்க எவ்வளவு பெரிய விளம்பரம் வச்சிருக்காங்க.

தாத்தா: இப்பல்லாம் விளம்பரம் இல்லன்னா வியாபாரமே இல்லன்னு ஆயிடுச்சு. ஆளுக்கு ஒப்பனை செய்தது பத்தாதுன்னு இப்ப ஆப்பிளுக்கே ஒப்பனை செய்கிறார்கள். பிரபவங்களை வைத்து விளம்பரம் கொடுத்துச் செய்வதுதான் கல்லா
கட்டும் தந்திரம்னு ஆயிடுச்சு! ஆனா, சமூகம் சார்ந்து உண்டான கிராமச்சந்தையில் அப்படி இல்ல. கலப்படம் இல்லாத நேர்மைதான் கிராமச்சந்தையோட அடிப்படை. ஒரு குறிப்பிட்ட ஊரை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இப்படி நேர்மையா தங்களோட பொருள்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க.

மூர்த்தி: முதல்ல 'சந்தை'ன்னு சொல்லிட்டு. அப்புறம் ஏன் அத கிராமச்சந்தைன்னு மாத்திச் சொல்றீங்க தாத்தா.

தாத்தா: உள்ளூர்த் தேவைக்கு ஏற்ற மாதிரி, அங்க விளைகிற உணவுப் பொருள்களையும் விவசாயம், சமையல், வீடு ஆகியவற்றுக்குத் தேவையான பொருள்களையும் சிறிய அளவில் விற்கிற சிறு வணிகச் செயல்பாடுதான் கிராமச்சந்தை. மக்களோட அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யறதுதான் அதோட நோக்கம். நம்ம மனசை மயக்கிற மாதிரி வெறும் மிகைவரவு சார்ந்து இயங்குவது புதிய சந்தை. அதிலிருந்து வேறுபடுத்தத்தான் அப்படிச் சொன்னேன்.

மூர்த்தி: சந்தையில் என்னவெல்லாம் வாங்கலாம் தாத்தா?

தாத்தா: கிராமச்சந்தையில் கிடைக்காத பொருள்களே இவ்லை.கடுகு, சீரகத்தில் இருந்து உணவுத் தானியங்கள், காய்கறிகள்: கோழி,ஆடு,மாடு, குதிரைன்னு கால்நடைகள்: சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல்கள் போன்ற அலங்காரப் பொருள்கள்: இரும்புப் பொருள்கள்.பாத்திரங்கள். துணிமணிகள்னு ஒரு குடும்பத்துக்கு. தொழிலுக்குத் தேவையான எல்லாத்தையும் வாங்கலாம்.

ஆயிடுச்சு.  இப்ப ஆப்பிளுக்கே ஒப்பனை செய்கிறார்கள். பிரபலங்களை வைத்து விளம்பரம் கொடுத்துச் செய்வதுதான் கல்லா

அது மட்டுமல்லாம பல பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்தது கிராமச்சந்தை.

மூர்த்தி: காய்கறி, தானியம் சந்தையில்

விற்பார்கள் என்று சொன்னீங்க. ஆடு

மாடுங்கள ஏன் தாத்தா சந்தையில் விற்கிறாங்க?

தாத்தா: மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்துல வேரூன்றி, முல்லை நிலத்துவ வளர்ந்து, மருகத்துல முழுமையும் வளமையும் அடைஞ்சுது. எல்லா நிலங்களிலும் மக்களுக்கு ஆடு, மாடுகளோடு தொடர்பு இருந்துகிட்டே இருக்கு. உழவுத் தொழில்ல மனுசனுக்குப் பக்கபலமா மட்டுமில்ல. இணையாகவும் துணையாகவும் கால்நடைங்க இருந்திருக்கு. அந்த வகையிலதான் அவற்றோட தேவை அதிகமாகி வாங்க வேண்டிய. விற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு. கால்நடைச் சந்தை தமிழ்நாடு முழுவதும் இருக்கு. மதுரைப்பக்கம் மாட்டுச் சந்தைய 'மாட்டுத்தாவணி' ன்னு சொல்லுவாங்க. தாவணின்னா சந்தைன்னு பொருளாம். இப்ப மதுரைப் பேருந்து நிலையம் இருக்கிற இடம் அது.

கீர்த்தனா: கிராமச்சந்தை பத்திக் கேக்கவே ஆர்வமா இருக்கு. மேல சொல்லுங்க தாத்தா,

தாத்தா: கழைக்கூத்தும் பொம்மலாட்டமும் கிராமச்சந்தையில் உண்டு. சந்தைக்குப் போறது எங்க காலத்துவ திருவிழாவிற்குப் போகிற மாதிரி; அக்கம் பக்கத்து ஊர் உறவுகளைச் சந்தித்துப் பேசலாம் சாதி மதத்தைத் தாண்டி எல்வோருடனும் பழக முடியும்: ஆண்-பெண் பேதமில்லாம ரெண்டு பேரும் சந்தைச் செயல்பாடுகள்ல

கலந்துக்குவாங்க: மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தலைமுறை தலைமுறையா தொடர்பும் நட்பும் இருக்கும்; வாரம் ஒருமுறை உறவுக்காரர்களைப் பார்த்துட்டு வர்ற மாதிரி ஒரு மகிழ்ச்சி இருக்கும்.

மூர்த்தி: பூஞ்சோலை வீட்டுல அத்தனை ஆடுமாடு இருக்கே எல்லாமே சந்தையில் வாங்கியதுதானா?

தாத்தா: சந்தையில் வாங்கியதும் உண்டு. வீட்டிலேயே பிறந்து வளர்ந்ததும் உண்டு. சந்தையில ஆடு. மாடு வாங்குவதை இப்ப நினைச்சா வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டுக் கைகளை மறைச்சுக்கிட்டு விலை பேசுவது ஒரு உத்தி. கொம்பு, பல், வாவ், திமிலைப் பார்த்து மாட்டோட வயசு, வலிமையைக் கண்டுபிடிக்கிறது ஒரு தனித்திறமை. நான் தஞ்சாவூர்ச் சந்தையில் மாட்டை வாங்கி, அதைக் கொள்ளிடம் வழியா நடந்தே ஒரு வாரம் ஓட்டி வந்திருக்கேன்.

மூர்த்தி: ஆடு மாடுகளை மட்டுந்தான்

சந்தையில் விற்பனை செய்வாங்களா தாத்தா?

தாத்தா: யார் சொன்னது? ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு சந்தைக்குப் பேர் போனது. மணப்பாறைன்னு சொன்னா மாட்டுச்சந்தை, அய்யலூர்னா ஆட்டுச் சந்தை, ஒட்டன்சத்திரம்னா காய்கறிச் சந்தை, நாகர்கோவில் தோவாளைன்னா பூச்சந்தை. ஈரோடுன்னா ஜவுளிச் சந்தை, கடலூருக்குப் பக்கமா இருக்கிற காராமணி குப்பம்னா கருவாட்டுச் சந்தை, நாகப்பட்டினம்னா மீன் சந்தை இப்படித் தமிழ்நாடு முழுதும் பல சந்தைகள் இருக்கு. இவை தவிர ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராமச் சந்தைகள் ஏராளம். கிழமையைக் கணக்கு வைத்து ஒவ்வொரு ஊர்ச் சந்தைக்கும் சென்று வரும் வியாபாரிகள் உண்டு. எந்தச் சந்தையில் எது சிறப்பு, எது விலை மலிவு என அனுபவத்தில் அறிந்து வாங்கிவர ஊர் ஊராகச் செல்லும் மக்களும் உண்டு.

கீர்த்தனா: அங்கே அதோ தெரியுது பாருங்க தாத்தா பெரிய கட்டடம். அதுதான்

'மால்',

மூர்த்தி: இந்த மாதிரி பன்னாட்டு அறிவியல் தொழில் நுட்பத்தோட இயங்குற வணிக வளாகங்களுக்கும் கிராமச்சந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? தாத்தா!

தாத்தா: நவீன சந்தையில் உற்பத்தி செய்கிறவன் ஒருத்தன்; மொத்தமாக வாங்குகிறவன் வேறு ஒருத்தன். சில்லறையாக விற்கிறவன் இன்னொருத்தன்னு இருப்பாங்கன்னு நினைக்கிறேன். கிராமச்சந்தையில் உற்பத்தியாளன்தான் விற்பனையாளன். பெரும்பாலும் இடைத்தரகர்களுக்கு வேலை இல்ல. குளிரூட்டப்பட்ட அறை இல்லை. வாடகை இல்லை. விற்கிறவனும் வாங்குகிறவனும் ஓர் உடன்பாட்டுக்கு வந்தால் அதுதான் பொருளோட விலை.

கீர்த்தனா: இதோ வந்தாச்சு. வாங்க அந்தத் தானியங்கிப் படிக்கட்டில் ஏறி மேலே போகலாம்.

தாத்தா: நீ என்ன வாங்கணும் மூர்த்தி?

மூர்த்தி: எனக்கு ஒன்னும் வேணாம் தாந்தா.கீர்த்திதான் பாக்கறதெல்லாம் கேப்பா.
(நடக்கிறவர்கள் பேசிக்கொள்வதும்

இயந்திரங்களின் ஓசைகளும் பேரிரைச்சலை ஏற்படுத்தின.)

மூர்த்தி: 'சந்தைக்கடைச் சத்தம்' அப்படின்னு சொல்வாங்களே அதுவும் இந்தச் சத்தமும் ஒண்ணா தாத்தா?

தாத்தா: சந்தைக்கடை சத்தமாத்தான் இருக்கும். ஆனா இந்த மாதிரி இரைச்சலா இருக்காது. சந்தை வெறும் உதட்டு வியாபாரம் மட்டும் பேசும் களம் இல்லை. வாங்க வாங்க என ஏதோ கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பிறகுதான் ஒவ்வொரு கடையிலும் வியாபாரம் நடக்கும். விசாரிப்புகளுக்கு மத்தியில் ஓர் உறவுக் கம்பி இழையோடும். இதனால், உரிய வயகல் பேச்சு வராத குழந்தைங்களைச் சந்தைக்குக் கூட்டிக்கிட்டுப் போவோம். சந்தையில் கேக்குற சொற்களையும் பலவித குரல் ஏற்ற இறக்கங்களையும் உள்வாங்கிக்கிற குழந்தைங்களுக்குப் பேச்சு வந்துவிடும்.

(கீர்த்தனா ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பெரிய குரங்கு பொம்மை ஒன்றைத் தொட முயன்றாள். கடையின் வேலையான் தொடக்கூடாதெனக் கீர்த்தனாவிற்குச் சைகை காட்டினார்.)




தாத்தா: பார்த்தியா? பொம்மையைத் தொடக்கூடாதுன்னு சொல்கிறார். குழந்தைகளை நாட்டுச்சந்தைக்குக் கூட்டிக்கொண்டு போனால், கடையில் இருக்கும் தக்காளி, கேரட் எனக் குழந்தை எதை எடுத்தாலும் அதற்குக் காக இல்லை. குழந்தையின் ஆசையில் வணிகம் குறுக்கிடாது.

மூர்த்தி: வியாபாரத்துல கருணைக்கு இடம் கொடுத்தா. முதல் தேறாதே தாத்தா.

தாத்தா: நாட்டுச் சந்தையில்

வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்குவதோடு முடிந்துபோவதில்லை. சந்தையில் பார்த்துப் பழகியவர்கள்
சம்பத்திகளாகி உறவினர்கள்

ஆகிவிடுவதுமுண்டு! சந்தையின் சாதாரண

விசாரிப்புகளிலும் நேசம் உண்டு, நேர்மை உண்டு.

கீர்த்தனா தாத்தா அங்கே பாருங்க

அந்தக் குழந்தை பொம்மை எவ்ளோ பெருசா

இருக்கு? விலை அதிகமா இருக்குமோ தாத்தா?

தாத்தா: விலையைப் பத்தி என்ன இருக்கு. உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு.

கீர்த்தனா: 'எம்மா, இவ்வளவு பெரிய பொம்மைய வாங்கியாந்தே?'ன்னு அம்மா சத்தம் போடும் தத்தா,

தாத்தா: அதை நான் பார்த்துக் கொள்கிறேன். (பொம்மை வாங்குகிறார்கள்)

உனக்கு ஏதும் வேணுமா மூர்த்தி?

மூர்த்தி: வேணாம் தாத்தா. பழக்கூழ்

வேணும்னா குடிக்கலாம் தாத்தா.

தாத்தா:சரி. குடிக்கலாம். எனக்குப் பனிக்

கட்டி போடாமல் வாங்கு.

(மூவரும் பழக்கூழ் அருந்தியவாறே

உரையாடுகின்றனர்) 


மூர்த்தி: இவ்வளவு பிரம்மாண்டமான கடையில் பல அடுக்குகளில் பொருள்களைக்

குவிச்சு வெச்சிருக்காங்க.

தாத்தா: ஆமா. யார்யாருக்கு எது

வேணுமோ அததுக்குத் தனித்தனியான பகுதிகள் இருக்கு. தேவைக்கும் அளவுக்கும் ஏற்பப் பொருள்களை நாமே தேர்ந்தெடுக்கலாம் போல.

கீர்த்தனா: ஆமா, தாத்தா பெரும்பாலும் பல அளவுள்ள பொட்டலங்கள் போட்டு வைத்திருக்காங்க. கெடுநாளும் குறிச்சிருப்பாங்க. நாமதான் பாத்து வாங்கணும். சரி வீட்டுக்குப் போலாம் தாத்தா.

தாத்தா: சரி, வாங்க போகலாம்:

மூர்த்தி: இந்தமாதிரி அங்காடிகள் பலபேருக்கு நிரந்தர வேலை கொடுக்குது தாத்தா.

தாத்தா: அப்படிச் சொல்ல முடியாது. நிரந்தரப் பணியாளர் குறைச்சலாத்தான் இருப்பாங்க. தற்காலிகப் பணியாளர்தான் அதிகம். பலபேர் வந்து கொஞ்சநாள் வேலை பார்த்துட்டுப் போயிடுவாங்க.

கீர்த்தனா: பொருள்களை விற்கணும். தீர்ந்தவுடனே வாங்கிவைக்கணும். பெரிய வேலைதான் தாத்தா.

தாத்தா: இதுபோன்ற கடைகளைத் திட்டமிட்டாத்தான் நிருவகிக்க முடியும். அதற்கேற்ப மேலாண்மை, கண்காணிப்பு, கட்டமைப்பு வசதி, தொடர் பராமரிப்புன்னு இதன்பின்னால் ஏகப்பட்ட தொடர் செயல்பாடுகள் இருக்கு. கிராமச்சந்தைல் இருக்கறமாதிரி இங்க யார்வேண்ணாலும் கடை வைத்துவிட முடியாது. பெரிய அளவுல முதலீடு தேவைப்படும். (மூவரும் வீட்டை அடைந்தார்கள்)

கீர்த்தனா அம்மா: எதுக்குமா இவ்வளவு பெரிய பொம்மை? ஏற்கனவே நிறைய பொம்மைங்க இருக்கே!

தாத்தா: விடும்மா. குழந்தை ஆசையா கேட்டா. நான்தான் வாங்கித்தந்தேன்.

அம்மா:  மூர்த்தி ஒன்னும் வாங்கலையாப்பா?

மூர்த்தி: கீர்த்தனா, அவ ஆசைப்பட்ட பொம்மையை வாங்கிக்கிட்டா. நானும் என் படிப்புக்குத் தேவையான சந்தை பற்றிய விவரங்களைத் தாத்தாவிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்தக் காலத்துச் சந்தையில் மக்கள் பணத்தைவிட மனித மாண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாங்க என்பதை நினைத்தாலே பெருமையா இருக்கு.

அம்மா: ஆமா. நானும் சந்தைக்குப் போயிருக்கேன். சந்தைன்னாலே சந்தோசம் தானா வரும். சரி வாங்க. தாத்தா ஊர்ச் சந்தையிலிருந்து வாங்கி வந்த காய்கறியில் குழம்பு வெச்சுருக்கேன். சாப்பிடுங்க.



நம்ம YOUTUBE CHANNEL NAME : 

திங்கள், 7 மார்ச், 2022

தண்ணீர்

 தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

Answer:


தண்ணீர் – கந்தர்வன்

முன்னுரை :
“நாகலிங்கம்” என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்’ முதலிய வரிசையில் “தண்ணீர்” சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :

தனிமனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீருக்கே அல்லாடும் ஒரு சிற்றூர் அது. அவ்ஊருக்கும் இயற்கைக்கும் நிரந்தரப்பகை, புயல் வந்தால் 3 நாட்கள் வெள்ளக்காடாய் இருக்கும் நான்காவது நாள் தண்ணீரற்ற நிலமாய் மாறி விடும். பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.


பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இடம் பிடிக்க இயலாத பெண்கள் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எகத்தாளம் பேசுவர். ஸ்டேஷன் மாஸ்டர் மிரட்டியும் கூட்டம் அடங்காது. இந்த இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்குத்தான் ஓட வேண்டும் என்பதால் முண்டியடித்து இரயில் பெட்டிக்குள் ஏறினர்.


இந்திராவின் கனவு :
அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள், சனியன், பீடை பிடித்த குடம் நிறைகிறதா என்று சலித்துக் கொண்டே குழாயை மேலும் அழுத்தினாள். இன்னும் குடம் நிறையவில்லை.

இன்ஜினின் ஊதல் ஒலி வந்தது அம்மா, சொட்டுத் தண்ணியில்லை என்று முனகியதே ஞாபகம் வந்தது. இன்னும் பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
சினை ஆட்டைப் பார்த்தபடி கணக்குப் போட்டுக் கொண்டிருந்த இந்திராவின் தந்தையிடம் இந்திரா வரவில்லை இரயில் போயிருச்சு என்று சொல்லப்பட்டது.
எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.


தாயின் துயரம் :
“எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோ” என அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள்.

தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! தந்தை கேட்டார். பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த. இந்திரா சொன்னாள் பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய.

கதை உணர்த்தும் கருப்பொருள் :
இச்சிறுகதை “நீரின்றி அமையாது உலகு” என்னும் கருத்தை வலியுறுத்துகிறது. 21-ஆம் நூற்றாண்டை எட்டிப்பிடித்துள்ள இன்றைய நிலையில், குடிநீர் நெருக்கடி உச்சத்தில் இருப்பதையும், சிற்றூர்களின் மக்களின் வாழ்க்கை ஒரு வாய் தண்ணீருக்குக் கூட வழியற்றதாய், சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதை படிப்போர் நெஞ்சில் உணர்த்தும் வகையில் ‘கந்தர்வன்’ எழுதியுள்ளார்.


“சிற்றூரின் தேவைகள் இன்றளவும்
நிறைவு செய்யப்படுவதில்லை.”

முடிவுரை :
“உயிர் நீர்” எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,
“நீர் மேலாண்மையை கட்டமைப்போம்
மழைநீர் சேகரிப்போம்.”

ஞாயிறு, 6 மார்ச், 2022

tnpsc question answer

Tnpsc previous questions :

✅ Click here



Tnpsc Gk questions :

✅ Click here



Tnpsc வினா விடை :

✅ Click here



Tnpsc group 4 exam details :

✅ Click here



Tnpsc பொது தமிழ் :

✅ Click here



TNPSC 6th New Syllabus in tamil :

✅ Click here



TNPSC 7th New Syllabus in tamil :

✅ Click here



TNPSC 8th New Syllabus in tamil :

✅ Click here



TNPSC 9th New Syllabus in tamil :

✅ Click here



TNPSC 10th New Syllabus in tamil :

✅ Click here



TNPSC 12th New Syllabus in tamil :

✅ Click here




More...






சனி, 5 மார்ச், 2022

Tnpsc group 4 exam apply online

                         

                          TNPSC CHANNEL 


Tnpsc group 4 exam Apply :


TNPSC குரூப் 4 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் 2022: TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவம் 2022 மார்ச் 21, 2022 முதல் கிடைக்கும். TNPSC குரூப் 4 தேர்வு 2022க்கு கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நல்லது. TNPSC குரூப் 4 ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 21, 2022 ஆகும். இருப்பினும், ஏப்ரல் 23, 2022 வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். TNPSC குரூப் 4 விண்ணப்பப் படிவம் 2022 இன் முக்கியமான தேதிகளைப் பார்க்கவும்.


Tnpsc group 4 exam apply online  Link :

                            ✅ Click here



தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...💐💐💐


வியாழன், 3 மார்ச், 2022

TNPSC EXAM REGISTRATION

 


TNPSC CHANNEL


*GROUP 4 EXAM QUESTIONS DETAILS*

*Group 4 Exam kku Education Qualification 10th pass...*

General Studies
(75) questions

+ Aptitude and Mental Ability Test (25) questions

General Tamil
(100) questions

(Total = 200) questions


(6th to 10th)Books important... Additionala 12th tamil Book padikkurathu usefula irukkum...

நம்ம *TNPSC CHANNEL* All Video's Group 4 related...

TNPSC EXAM PREPARATION  Click here

TNPSC EXAM REGISTRATION Click here




TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...