யுகத்தின் பாடல்
1. என் அம்மை, ஒற்றியெடுத்த நெற்றிமண் அழகே! வழிவழி நினதடி தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே!
உனக்குப்
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
2. பாடத்தான் வேண்டும்! காற்றிலேறிக்
கனைகடலை, நெருப்பாற்றை,
செல் எனச் செல்லுமோர் பாடலை
மலைமுகடுகளைக் கடந்து கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்களின்
உரமெலாம் சேரப் பாடத்தான் வேண்டும்!
* ஏடு தொடக்கி வைத்து என்னம்மை
மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த விரல்முனையைத் தீயிலே தோய்த்து திசைகளின் சுவரெலாம் எழுகின்ற யுகத்தினோர் பாடலை.*
எழுதத்தான் வேண்டும்
சு. வில்வரத்தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக