புதன், 22 ஜூன், 2022

பா -வகை, அலகிடுதல்


 எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப் பாக்கள் உள்ளன. யாப்பின் உறுப்புகள் குறித்து கடந்த ஆண்டில் கற்றதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம். பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம். ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.

செப்பல் ஓசை

செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

அகவல் ஓசை

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

துள்ளல் ஓசை

செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

தூங்கல் ஓசை

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.

முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.

பா வகைகள்

குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.








மேற்சொன்னவற்றுள் வெண்பாவின் இலக்கணத்தையும் அலகிடும் முறையினையும் தெரிந்துகொள்வோம்.

குறள்

குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் (சிந்தடி) வரும்.

அலகிடுதல்

செய்யுளின் சீரை அசை பிரித்து நேரசை, நிரையசை என்று பகுத்துக் காண்பதை முன் வகுப்பில் அறிந்துள்ளோம்.

அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்பாடு காணுதல்.







அலகிடுதல்

(எ. கா)


உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...