TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
6.ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வேலுநாச்சியார்
ஈ) வீரபாண்டிய கட்டபொம்மன்
விடை:
ஆ) பூலித்தேவர்
Question 2.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ) வேலுநாச்சியார்
ஆ) கட்டபொம்மன்
இ) பூலித்தேவர்
ஈ) ஊமைத்துரை
விடை:
இ) பூலித்தேவர்
Question 3.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ) கயத்தாறு
ஆ) நாகலாபுரம்
இ) விருப்பாட்சி
ஈ) பாஞ்சாலங்குறிச்சி
விடை: ஆ) நாகலாபுரம்
Question 4.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ) மருது சகோதரர்கள்
ஆ) பூலித்தேவர்
இ) வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ) கோபால நாயக்கர்
விடை: அ) மருது சகோதரர்கள்
Question 5.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ) 1805 மே 24
ஆ) 1805 ஜூலை 10
இ) 1806 ஜூலை 10
ஈ) 1806 செப்டம்பர் 10
விடை: இ 1806 ஜூலை 10
Question 6.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ) கர்னல் பேன்கோர்ட்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) சர் ஜான் கிரடாக்
ஈ) கர்னல் அக்னியூ
விடை:
இ சர் ஜான் கிரடாக்
Question 7.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) டெல்லி
ஈ) மைசூர்
விடை:
அ) கல்கத்தா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் ……………… என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
விஸ்வநாத நாயக்கர்
Question 2.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக ………………. பாதுகாப்பில் இருந்தனர்.
விடை:
கோபால நாயக்கர்
Question 3.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென்_______ என்பவரை அனுப்பிவைத்தார்.
விடை:
இராமலிங்கனார்
Question 4.
கட்டபொம்மன் ………………. என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
விடை:
கயத்தார்
Question 5.
மருது சகோதரர்களின் புரட்சிபிரிட்டிஷ்குறிப்புகளில் …………….. என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
விடை:
2ம் பாளையக்காரர் போர்
Question 6.
…………….. என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
விடை:
ஃபதேக் ஹைதர்
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக