TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
I. சரியான விடையைத் தெரிவு செய்க.
Question 1.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
அ) 1827 ஆ) 1829
இ) 1826 ஈ) 1927
விடை: ஆ) 1829
Question 2.
தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ) ஆரிய சமாஜம் ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம் ஈ) ஆதி பிரம்ம சமாஜம்
விடை: அ) ஆரிய சமாஜம்
Question 3.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
Question 4.
‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?
அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை
விடை:
அ) பார்சி இயக்கம்
Question 5.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே
விடை:
ஆ) பாபா ராம்சிங்
Question 6.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி
விடை: அ) M.G. ரானடே
Question 7.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா
விடை:
அ) தயானந்த சரஸ்வதி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.
விடை:
இராமலிங்க சுவாமிகள்
Question 2.
புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………
விடை:
மகாதேவ் கோவிந்த் ரானடே
Question 3.
குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..
விடை:
ஜோதிபா பூலே
Question 4.
இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.
விடை:
சுவாமி விவேகானந்தர்
Question 5.
………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
விடை:
சிங்சபா
Question 6.
‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.
விடை:
அயோத்தி தாசர்
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக