TNPSC CHANNEL
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல் (வரலாறு)
4 . இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
I. சரியான விடையைத் தெரிவு செய்க.
Question 1.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
அ) உட்ரோ வில்சன்
ஆ) ட்ரூமென்
இ) தியோடர் ரூஸ்வேல்ட்
ஈ) பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
விடை:
ஆ) ட்ரூமென்
Question 2.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ) செப்டம்பர் 1959
ஆ) செப்டம்பர் 1949
இ) செப்டம்பர் 1954
ஈ) செப்டம்பர் 1944
விடை:
ஆ) செப்டம்பர் 1949
Question 3.
அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ………………… ஆகும்.
அ) சீட்டோ
ஆ) நேட்டோ
இ) சென்டோ
ஈ) வார்சா ஒப்பந்தம்
விடை:
ஆ) நேட்டோ
Question 4.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
அ) ஹபீஸ் அல் – ஆஸாத்
ஆ) யாசர் அராபத்
இ) நாசர்
ஈ) சதாம் உசேன்
விடை:
ஆ) யாசர் அராபத்
Question 5.
வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
அ) 1975
ஆ) 1976
இ) 1973
ஈ) 1974
விடை:
ஆ) 1976
Question 6.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ) 1979
ஆ) 1989
இ) 1990
ஈ) 1991
விடை:
ஈ) 1991
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ………………. ஆவார்.
விடை:
டாக்டர் சன்-யாட்-சென்
Question 2.
1918இல் ………….. பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைவு நிறுவப்பட்டது.
விடை:
பீகிங்
Question 3.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் …………….. ஆவார்.
விடை:
சியாங்-கை-ஷேக்
Question 4.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ……………… ஆகும்.
விடை:
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்
Question 5.
துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ……………
விடை:
வெர்செய்ல்ஸ்
Question 6.
ஜெர்மனி நேட்டோவில் …………….ஆம் ஆண்டு இணைந்தது.
விடை:
1955
Question 7.
ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ……………… நகரில் அமைந்துள்ளது.
விடை:
ஸ்ட்ராஸ்பர்க்
Question 8.
ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் ……………….. ஆகும்.
விடை:
மாஸ்டிரிக்ட்
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக