TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
அலகு 1 வெப்பம்
I சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்
அ) வேகமாக நகரத் தொடங்கும்
ஆ) ஆற்றலை இழக்கும்
இ) கடினமாக மாறும்
ஈ) லேசாக மாறும்
விடை: அ) வேகமாக நகரத் தொடங்கும்
Question 2.
வெப்பத்தின் அலகு …………
அ) நியூட்டன் ஆ) ஜூல்
இ) வோல்ட். ஈ) செல்சியஸ்
விடை: ஆ) ஜூல்
Question 3.
30° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50° C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை.
அ) 80° C
ஆ) 50° Cக்கு மேல் 80Cக்குள்
இ) 20° C
ஈ) ஏறக்குறைய 40° C
விடை:
ஈ) ஏறக்குறைய 40° C
Question 4.
50° C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக்குண்டினை, 50° C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது.
அ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
இ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
ஈ) இரண்டின் வெப்பநிலையும் உயரும்
விடை:
ஆ) இரும்புக்குண்டிலிருந்து நீருக்கோ (அ) நீரிலிருந்து இரும்புக்குண்டிற்கோ மாறாது.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
வெப்பம் பொருளிலிருந்து ……. பொருளுக்கு பரவும்.
விடை:
வெப்பநிலை அதிகமான, குறைவான
Question 2.
பொருளின் சூடான நிலையானது ……… கொண்டு கணக்கிடப்படுகிறது.
விடை:
வெப்பநிலை
Question 3.
வெப்பநிலையின் SI அலகு ………..
விடை:
கெல்வின்
Question 4.
வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ………… மற்றும் குளிர்விக்கும் பொழுது ………..
விடை:
விரிவடையும், சுருங்கும்
Question 5.
இரண்டு பொருட்களுக்குக்கிடையே வெப்பப்பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ………. நிலையில் உள்ளன.
விடை: வெப்பச் சமநிலையில்
III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
விடை: சரி.
Question 2.
நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.
விடை : தவறு.
சரியான விடை : வெப்பம் உட்கவரும் போது நீராவி உருவாகும்.
Question 3.
வெப்பவிரிவு என்பது. பொதுவாக தீங்கானது.
விடை: தவறு.
சரியான விடை : வெப்ப விரிவு என்பது பொதுவாக தீங்கானது அல்ல.
Question 4.
போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிகம் விரிவடையாது.
விடை:
சரி.
Question 5.
வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.
விடை: தவறு.
சரியான விடை : இரண்டும் வெவ்வேறு அலகினைப் பெற்றுள்ளன.
IV. ஒப்புமை தருக.
Question 1.
வெப்பம் : ஜூல் :: வெப்பநிலை : ______
விடை:
கெல்வின்
Question 2.
பனிக்கட்டி : 0° C :: கொதி நீர் : _____
விடை:
100° C
Question 3.
மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் : வெப்பம் :: சராசரி இயக்க ஆற்றல் : _____
விடை:
வெப்பநிலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக