TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
அலகு 2 மின்னியல்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்.
அ) மின் விசிறி
ஆ) சூரிய மின்கலன்
இ) மின்கலன்
ஈ) தொலைக்காட்சி
விடை:
இ) மின்கலன்
Question 2.
மின்சாரம் தயாரிக்கப்படும் இடம் _____
அ) மின்மாற்றி
ஆ) மின்உற்பத்தி நிலையம்
இ) மின்சாரக்கம்பி
ஈ) தொலைக்காட்சி
விடை:
ஆ) மின்உற்பத்தி நிலையம்
Question 3.
மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு.
விடை: ஆ)
Question 4.
கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?
விடை: ஈ)
Question 5.
கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?
அ) வெள்ளி
ஆ) மரம்
இ) அழிப்பான்
ஈ) நெகிழி
விடை:
அ) வெள்ளி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
____ பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
மின்கடத்தி
Question 2.
ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் ____ எனப்படும்.
விடை:
மின்னோட்டம்
Question 3.
_____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.
விடை:
சாவி
Question 4.
மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு _____ முனையைக் குறிக்கும்.
விடை:
நேர்
Question 5.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ஆகும் _____
விடை:
மின்கல அடுக்கு
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு.
விடை:
சரி.
Question 2.
இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
விடை:
தவறு. – இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.
Question 3.
சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப் பயன்படும் மின்சாதனம் ஆகும்.
விடை:
சரி.
Question 4.
தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.
விடை:
தவறு – தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்.
Question 5.
துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
விடை:
தவறு – துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக