TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
இரண்டாம் பருவம்
அலகு 3 அன்றாட வாழ்வில் வேதியியல்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
அ) புரதங்கள்
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ) மண்
ஈ) நுரை உருவாக்கி
விடை:
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
Question 2.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.
அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) சோடியம் குளோரைடு
விடை:
ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு
Question 3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
அ) விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ) கடினமாக்க
ஈ) கலவையை உருவாக்க
விடை:
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
Question 4.
பீனால் என்பது ______
அ) கார்பாலிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோயிக் அமிலம்
ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை:
அ) கார்பாலிக் அமிலம்
Question 5.
இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
அ) புரதங்க ளில்
ஆ) கொழுப்புகளில்
இ) ஸ்டார்ச்சில்
ஈ) வைட்டமின்களில்
விடை:
இ) ஸ்டார்ச்சில்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
விடை:
ஆக்சைடு
Question 2.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.
விடை:
NaOH
Question 3.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்
விடை:
மண்புழு
Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.
விடை:
இயற்கை
Question 5.
இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.
விடை:
ஸ்டார்ச்
III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை : தவறு
குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.
Question 2.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.
விடை:
தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.
Question 3.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
விடை: சரி
Question 4.
ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.
விடை:தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.
Question 5.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை:
சரி
V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.
1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
விடை:
1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
VI. ஒப்புமை தருக.
Question 1.
யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____
விடை:
இயற்கை உரம்
Question 2.
______ : இயற்கை ஒட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்
விடை:
ஸ்டார்ச்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக