TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
மூன்றாம் பருவம்
அலகு 4 நமது சுற்றுசூழல்
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Question 1.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
அ) குளம் ஆ) ஏரி
இ) நதி ஈ) இவை அனைத்தும்
விடை: ஈ) இவை அனைத்தும்
Question 2.
உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) தாவரங்கள்
ஈ) பாம்புகள்
விடை: இ) தாரவங்கள்
Question 3.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
அ) நெகிழி
ஆ) சமையலறைக் கழிவுகள்
இ) கண்ணாடி
ஈ) அலுமினியம்
விடை:
ஆ) சமையலறைக் கழிவுகள்
Question 4.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
அ) மறு சுழற்சி
ஆ) மீண்டும் பயன்படுத்துதல்
இ) மாசுபாடு
ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்
விடை: இ) மாசுபாடு
Question 5.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.
அ) நில மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) இரைச்சல் மாசுபாடு
ஈ) அ மற்றும் ஆ
விடை: ஈ) அ மற்றும் ஆ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
விடை: முதல்
Question 2.
சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.
விடை:
காலநிலைக்
Question 3.
______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
விடை:
மறு சுழற்சி
Question 4.
நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.
விடை:
தீங்கு விளைவிக்கும்
Question 5.
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
விடை:
மீண்டும் பயன்படுத்துதல்
III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை :
சரி.
Question 2.
பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி.
Question 3.
மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டு
விடை: தவறு – கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Question 4.
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
விடை :
தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.
Question 5.
பள்ளியின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
விடை :
தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.
Question 1.
முயல் → கேரட் → கழுகு → பாம்பு
விடை:
கேரட் → முயல் → பாம்பு → கழுகு
Question 2.
மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்
விடை:
ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக