அதே போல தான்...
இவ்வுலகில் வாழும் நமக்குள்ளும் நன்மை தரும் வழியும் உள்ளது, தீமை தரும் வழியும் உள்ளது."
நல்வழியில் நம் பயணம்....
நாவல்*** (பாகம் 2)***தொடர்கிறது...
( பாகம் 1...👈 தாயின் (தாய்) நிறை மாத கர்ப்பிணி அதனாலத வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுறன்... இந்த மாதம் உனக்கு 10 தாவது மாதம்.
எனக்கு தெரியும் மா...)
என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டால் அந்த ஓலை குடிசைக்குள் வாழும் நிறை மாத கர்ப்பிணி.
அந்தி வேலைக்கு சென்று வேலை செய்து கொண்டிருக்கிறாள் அந்த கர்ப்பிணித்தாய்.
பொழுது சாய்ந்து கொண்டிருக்கிறது வேலையும் முடிந்தபடில்லை.
இருட்டத் தொடங்குகிறது. வயிற்றுக்குள் இருக்கும் சிசு உதைக்க "வயிற்றுவலி" ஆரம்பித்துவடுகிறது.
தாயுடன் வேலை செய்யும் மற்ற தாய்மார்கள்.  அந்த கர்ப்பிணித் தாயை வீட்டுக்கு கொண்டு சேர்த்தனர்.
ஓலை குடிசைக்குள் உடம்பு சரி இல்லாத தாய் ... மற்ற தாய்மார்கள் உடன் தன் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி கொண்டாள்...
(2 வயது பெண் குழந்தையோ அழ தொடங்கியது)
அய்யோ என் பெண்ணுக்கு என்ன ஆச்சு என்ன ஆச்சு என கதறத் துடிக்க ஆரம்பித்தால் உடல் நிலை சரியில்லாத அந்தத்தாய்.
மற்ற தாய்மார்கள் உடனே...!
உங்கள் பெண்ணுக்கு "பிரசவ வலி " வந்து விட்டது போல...
தொடரும்...
ஓலை குடிச்சைக்குள் ஒரு ஒளி விளக்கு (நாவல்)
எழுத்தாளர்
ரா. சரண்ராஜ்
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக