ஆயிரம் மணி மாடங்கள் இருந்தாலும் வெயிலுக்கு குடிசை வீடுதான் சிறப்பாக இருக்கும்...
அதுபோல...
ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும் வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல புத்தகம் சிறப்பாக இருக்கும்...
நாவல்*** (பாகம் 3)***தொடர்கிறது...
தாயின் (தாய்)
வேலைக்கு போகும் போதே சொன்னேன் கேட்டாத்தானே...
கர்ப்பிணியை தாயிடம் ஒப்படைத்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்...
லேசான காற்று அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நேரம் செல்ல செல்ல லேசான காற்று தீவிரமடைந்தது...
(மழையும் பொழிய ஆரம்பித்தது)
அதேபோல
லேசான வலி நேரம் செல்ல செல்ல வலி தீவிரமடையத் தொடங்கியது...
அப்போது மருத்துவ வசதி குறைவாக இருந்த காலகட்டம் அது...
அந்த காலகட்டத்தில் மருத்துவச்சி எனப்படும் வயதான கிழவிகள் பிரசவம் பார்ப்பது வழக்கம்...
அந்த மருத்துவச்சி வீட்டிற்கும் கர்ப்பிணி தாயின் வீட்டிற்கும் ஒரு 500 மீட்டர் தொலைவு...
கர்ப்பிணித்தாய்_ஆல் நடந்தும் செல்ல முடியவில்லை...அவரின் தாயும் உடல் நிலை சரி இல்லாதவர்... இரண்டு வயது குழந்தை வேறு பசியால் நின்று கொண்டிருக்கிறது...
(கர்ப்பிணியின் கணவர் குடித்துவிட்டு ஏதோ பிரச்சனையில் சிறையில் உள்ளார்)
"வலியின் உச்சம் அது சொல்ல வார்த்தைகள் இல்லை..."
அந்த நேரத்தில் கடவுள் போல... அந்த ஊரில் வசிக்கும் பெரியவர் ஒருவர் கர்ப்பிணித்தாயை கையில் ஏந்திக்கொண்டு அந்த மருத்துவச்சி வீட்டுக்குக் கொண்டு சேர்த்தார்...
வரும் வழியில் கனத்த மழை வேறு...
இரண்டு வயது பெண் குழந்தையோ அழுதபடி அம்மா அம்மா என்று பின்னே நடந்து வந்தது...
கால் இழுத்தபடியே தாயின் தாய் வந்து சேர்ந்தார்...
நேரம் சென்றது "பன்னீர் குடம்" முடிந்தது அடுத்து...
தொடரும்...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குThis story is very heart ❤️ tuching story,seekirama adutha pagam aplod pannunga
நீக்கு