சனி, 9 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 4)

 TNPSC CHANNEL


குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட வினா விடை

து தமிழ்   (இலக்கியம்)







151.சேரமன்னன் சேரலாதனைப் பாடி அவனை மணந்தவர் யார்? நச்செள்ளையார்


152. நச்செள்ளையாரின் மற்றொரு பெயர் என்ன?

காக்கைப் பாடினியார் 


153.பத்துப்பாட்டு நூல்களில் மிகப்பெரிய நூல் எது?

மதுரைக்காஞ்சி


 154.பத்துப்பாட்டு நூல்களில் மிகச்சிறிய நூல் எது? 

முல்லைப்பாட்டு


155.நெடுஞ்சாற்றுப்படை எனப்படும் பத்துப்பாட்டு நூல் எது?

முல்லைப்பாட்டு


156.காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகச் சிறப்பைக் கூறும் 

நூல் எது?

பட்டினப்பாலை


157. திருப்புகழ் பாடியவர் யார்? 

அருணகிரிநாதர்


158.கடையேழு வள்ளல்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

சிறுபாணாற்றுப்படை


159. திருப்பாவையில் எத்தனை பாடல்கள் உள்ளன?

முப்பது


160.கரிகால் சோழனின் மகள் யார்? 

ஆதிமந்தியார்


161. இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண் புலவர் யார்? 

காக்கைப் பாடினியார் 


162.காக்கைப் பாடினியார் இயற்றிய இலக்கண நூல் எது?

காக்கைப் பாடினியம்


163.திருக்குறள் தவிர ஏனைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

எந்தக் காலத்தியவை? 

சங்கம் மருவிய காலத்தவை


164.திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?

வாசுகி


165.அறத்துப்பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது? 

            38


166 பொருட்பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது? 

70


167. இன்பத்துப் பால் எத்தனை அதிகாரங்கள் கொண்டது?

25



168.திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 

133


169. திருப்பாவை பொதுவாக எந்த மாதத்தில் பாடப்படுகின்றது? 

மார்கழி மாதம்


170.ஒளவையார் எழுதிய நீதிநூல்கள் எவை? 

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி


171.காப்பிய காலம் எனப்படுவது யாருடைய ஆட்சிக்காலம்?

சோழர்கள்


172.ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படுபவை எவை?

 நாககுமார காவியம், யசோதர காவியம், உதயண குமார காவியம்,சூளாமணி, நீலகேசி


173,கம்ப ராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

ஆறு


174 திருத்தொண்டர் புராணத்தின் வேறு பெயர் என்ன?

பெரிய புராணம்



175.பெரிய புராணத்தின் கதைத்தலைவர் யார்? 

சுந்தரர்


176. திருவருட்பா பாடியவர் யார்?

வள்ளலார்


177 இந்திர விழா பற்றிய செய்தி வருவது எந்த நூலில்? 

சிலப்பதிகாரம், மணிமேகலை


178,சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவைகள் எத்தனை காதைகள் கொண்டவை?

தலா 30 காதைகள்


179. இந்திர விழா எத்தனை நாட்களுக்கு நடக்கும்? 

28 நாட்கள்


180. கண்ணகியின் தந்தை பெயர் என்ன?

மாநாயகன் 


181.கண்ணகியின் கணவன் பெயர் என்ன?

கோவலன்


182 கண்ணகியின் தோழியின் பெயர் என்ன? 

தேவந்தி




183 தமிழில் முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்


184.சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள் என்ன? 

நாடகக் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்.


185.சிலப்பதிகாரத்தில் வரும் மூன்று நகரங்கள் எவை?

புகார், மதுரை, வஞ்சி 


186.தமிழில் தோன்றிய முதல் பெளத்த காப்பியம் எது?

மணிமேகலை


187 சைவ சமய இலக்கியங்கள் எத்தனை திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன? 

12


188 திருவாசகத்தின் முதல் பகுதி எது?

சிவபுராணம்


189 திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?

நம்பியாண்டார் நம்பி


 190 முதல் ஏழு திருமுறைகள் எனவ?.

 தேவாரம்




191. எட்டாவது திருமுறை எவை?

 திருவாசகம், திருக்கோவையார்


192. ஒன்பதாம் திருமுறை எவை? 

காரைக்கால் அம்மையார் உட்பட ஒன்பது பேர் பாடியவை.

 திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.


193.பத்தாம் திருமுறை எது?

திருமந்திரம்


194.சிற்றிலக்கிய காலம் எனப்படுவது யாருடைய ஆட்சி?

 நாயக்கர் காலத்தில்


195.பனிரெண்டாம் திருமுறை எது? 

பெரிய புராணம்


196. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

 நாதமுனிகள்


197.பெரியாழ்வார் பாடிய நூல் எது ?

திருப்பல்லாண்டு


198.பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளின் பெயர் என்ன? 

ஆண்டாள்


199. நம்மாழ்வாரின் சீடர் பெயர் என்ன?

 மதுரகவியாழ்வார் 


200.பராபரக்கண்ணியைப் பாடியவர் யார்?

தாயுமானவர்



பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


மேலும் அறிய





  


வெள்ளி, 8 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3)

 TNPSC CHANNEL

ரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)





101. முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் நூல் எது?

சிலப்பதிகாரம் 


102.திருக்குறளின் வேறு பெயர்கள் எவை?

தமிழ்மறை, பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி, உத்தர வேதம்


103. ஐந்தாவது வேதம் என்றழைக்கப்படும் நூல் எது? 

 மகாபாரதம்


104. திராவிட வேதம், தமிழ் வேதம் என்றழைக்கப்படும் நூல்

எது?

நாலாயிர திவ்விய பிரபந்தம்


105.வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல் எது?

நாலடியார்


106. இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுபவை எவை? " சிலப்பதிகாரம், மணிமேகலை


107.ராமகாதை எனப்படும் நூல் எது?

கம்ப ராமாயணம்


108.கவிச்சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?

கம்பர்


109.உவமைக்கவிஞர் எனப்படுபவர் யார்?

சுரதா


110.தேசியக்கவி, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு

புலவன் எனப்படுபவர் யார்?

பாரதியார்


 111.புரட்சிக்கவிஞர். பாவேந்தர், புதுவைக்குயில் எனப்படுபவர்

யார்?

பாரதிதாசன்


112.வைக்கம் வீரர். பகுத்தறிவுப் பகலவன் எனப்படுபவர் யார்?

பெரியார்


113.தெய்வப்புலவர், செந்நாப் போதார். மானானுபங்கி

எனப்படுபவர் யார்? 

திருவள்ளுவர்


114.சிலம்புச் செல்வர் எனப்படுபவர் யார்?

 ம.பொ.சிவஞானம்


115. நாவலர் எனப்படுபவர் யார்?

 சோமசுந்தர பாரதியார்


116. கிறிஸ்தவக் கம்பன் எனப்படுபவர் யார்? 

ஹெச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை


117.வள்ளலார் எனப்படுபவர் யார்?

ராமலிங்க அடிகள்


118.முத்தமிழ்க் காவலர் எனப்படுபவர் யார்? 

கி.ஆ.பெ.விசுவநாதம்


119. சொல்லின் செல்வர் எனப்படுபவர் யார்?

 ரா.பி.சேதுப்பிள்ளை


120. தமிழ்த் தென்றல் எனப்படுபவர் யார்?

 திரு.வி.க


121.படிக்காத மேதை எனப்படுபவர் யார்?

காமராஜர்


122. தமிழ் நாடகப் பேராசிரியர் எனப்படுபவர் யார்?

 சங்கரதாஸ் சுவாமிகள்


123.ஆசிய ஜோதி எனப்படுபவர் யார்? 

 நேரு


124.கவி யோகி எனப்படுபவர் யார்?

 சுத்தானந்த பாரதியார்


125.அப்பர் எனப்படுபவர் யார்?

திருநாவுக்கரசர்


126. ஆளுடைய பிள்ளை எனப்படுபவர் யார்?

திருஞானசம்பந்தர்


127. தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?

 பம்மல் சம்பந்த முதலியார்


128.மொழிஞாயிறு எனப்படுபவர் யார்? 

தேவநேயப் பாவாணர்


129 தனித்தமிழ் இயக்கத் தந்தை எனப்படுபவர் யார்?

 மறைமலை அடிகள்


130.ரசிகமணி எனப்படுபவர் யார்?

டி.கே.சிதம்பரநாதன்


131.நாமக்கல் கவிஞர் எனப்படுபவர் யார்? 

ராமலிங்கம் பிள்ளை


132.பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் என்ன?

 சூரிய நாராயண சாஸ்திரி


133.அகிலனின் இயற்பெயர் என்ன?

அகிலாண்டம்


134.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

முத்தையா


135. நம்மாழ்வாரின் இயற்பெயர் என்ன? 

மாறன்


136.ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?

ஜெகதீசன்


137.கவிஞர் வாலியின் இயற்பெயர் என்ன?

ரங்கராஜன்


138.பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

 கனகசுப்பு ரத்தினம்


139.புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

விருத்தாசலம்


140.கல்கியின் இயற்பெயர் என்ன?

ரா.கிருஷ்ணமூர்த்தி


141.சுஜாதாவின் இயற்பெயர் என்ன?

ரங்கராஜன்


142.வீரமா முனிவரின் இயற்பெயர் என்ன?

ஜோசப் பெஸ்கி 


143.ஆண்டாளின் இயற்பெயர் என்ன?

கோதை


144.மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன?

வேதாசலம்


145.தமிழ் நூல்களின் பழமையானது எது?

தொல்காப்பியம்


146.முதல் சங்கம் இருந்த இடம் எது?

தென் மதுரை


147 இடைச்சங்கம் இருந்த இடம் எது ?

கபாடபுரம்


148.கடைச்சங்கம் இருந்த இடம் எது ?

மதுரை


149.சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

பதிற்றுப்பத்து


150. சங்க இலக்கியங்களில் எத்தனை பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன?

31




பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 3) PDF Download Link கிளிக் செய்யுங்கள்



மேலும் அறிய




                


வியாழன், 7 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2)

 

TNPSC CHANNEL

  குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட 

வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)






51.மனோன்மணியம் எழுதியவர் யார்?

 சுந்தரம் பிள்ளை


52.இளைஞர் இலக்கியம் எழுதியவர் யார்?

பாரதிதாசன்


53. ராவண காவியம் எழுதியவர் யார்? 

புலவர் குழந்தை


54.குடும்ப விளக்கு எழுதியவர் யார்? 

பாரதிதாசன்


55.கலிங்கத்துப் பரணி எழுதியவர் யார்?

ஜெயங்கொண்டார்


56.அழகின் சிரிப்பு எழுதியவர் யார்?

பாரதிதாசன்


57.திருச்சிற்றம்பலக் கோவை எழுதியவர் யார்? 

மாணிக்கவாசகர்


58.பாண்டியன் பரிசு எழுதியவர் யார்?

பாரதிதாசன்


59.திருவந்தாதி எழுதியவர் யார்?

 நம்பியாண்டார் நம்பி


60.குறிஞ்சித் திட்டு எழுதியவர் யார்?

பாரதிதாசன்



61. பாஞ்சாலி சபதம் எழுதியவர் யார்?

பாரதியார்


62.மண் குடிசை எழுதியவர் யார்?

 மு.வரதராசனார்


63. குயில் பாட்டு எழுதியவர் யார்?

பாரதியார்


64.அகல் விளக்கு எழுதியவர் யார்?

மு.வரதராசனார் 




65.சீட்டுக்கவி எழுதியவர் யார்?

பாரதியார்


66.கள்ளோ காவியமோ எழுதியவர் யார்?

மு.வரதராசனார்


67. பெண்ணின் பெருமை எழுதியவர் யார்?

திரு.வி.க


68.ஊரும் பேரும் எழுதியவர் யார்?

 ரா.பி.சேதுப்பிள்ளை


69. குறட்டை ஒலி எழுதியவர் யார்?

 

மு.வரதராசனார்


70. தேம்பாவணி எழுதியவர் யார்?

வீரமா முனிவர்


71.பரமார்த்த குரு கதைகள் எழுதியவர் யார்?

வீரமா முனிவர்


72.சேரமான் காதலி எழுதியவர் யார்?

கண்ணதாசன்


73.ஆசிய ஜோதி எழுதியவர் யார்?

கவிமணி


74.மாங்கனி எழுதியவர் யார்?

கண்ணதாசன்




75.சித்திரப்பாவை எழுதியவர் யார்? 

அகிலன்


76.எழிலோவியம் எழுதியவர் யார்?

வாணிதாசன்


77.குறிஞ்சிமலர் எழுதியவர் யார்?

நா.பார்த்தசாரதி


78.வேங்கையின் மைந்தன் எழுதியவர் யார்?

அகிலன்


79.பாவை விளக்கு எழுதியவர் யார்?

அகிலன்


80.ஓர் இரவு எழுதியவர் யார்?

அறிஞர் அண்ணா


81.தேன் மழை எழுதியவர் யார்?

கவிஞர் சுரதா 


82.கண்ணீர்ப் பூக்கள் எழுதியவர் யார்?

மு.மேத்தா


83.வேலைக்காரி எழுதியவர் யார்?

அறிஞர் அண்ணா


84. கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதியவர் யார்?

கவிஞர் வைரமுத்து


85 அகல்யை எழுதியவர் யார்?

புதுமைப்பித்தன்


86 அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவர் யார்? 

கண்ணதாசன்


87. பொன்னியின் செல்வன் எழுதியவர் யார்?

கல்கி


88. தொல்காப்பியப் பூங்கா எழுதியவர் யார்?

 கருணாநிதி


89. சில நேரங்களில் சில மனிதர்கள் எழுதியவர் யார்? 

ஜெயகாந்தன்


90. பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் யார்? 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை


91.கடல் புறா எழுதியவர் யார்? 

சாண்டில்யன்


92.மணிபல்லவம் எழுதியவர் யார்?

நா.பார்த்தசாரதி


93.சிவகாமியின் சபதம் எழுதியவர் யார்?

கல்கி


94.சக்கரவர்த்தித் திருமகன் எழுதியவர் யார்?

ராஜாஜி


95.வியாசர் விருந்து எழுதியவர் யார்?

ராஜாஜி


96.ராஜாஜி ராமாயணத்தை என்ன பெயரில் எழுதினார்?

சக்கரவர்த்தித் திருமகன்


97.ராஜாஜி மகாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்? 

வியாசர் விருந்து


98.குறளோவியம் எழுதியவர் யார்?

கருணாநிதி


99.விருத்தப்பாவில் வல்லவர் என்றழைக்கப்பட்டவர் யார்? 

கம்பர்


100.மண நூல் என்றழைக்கப்பட்ட நூல் எது?

சீவக சிந்தாமணி

             



பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


பொது தமிழ் இலக்கியம் (பகுதி 2) PDF Download Link கிளிக் செய்யுங்கள்


மேலும் அறிய





புதன், 6 ஏப்ரல், 2022

பொது தமிழ் இலக்கியம் (பகுதி 1)

 

TNPSC CHANNEL

  குரூப் 4 தேர்வு சம்பந்தப்பட்ட 

வினா விடை

பொது தமிழ்   (இலக்கியம்)




1.இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார்? 

வால்மீகி



2.இராமாயணத்தை தமிழில் எழுதியவர் யார்?

கம்பர்


3.மகாபாரதத்தை வியாசர் வடமொழியில் எழுதியவர் யார்?

வியாசர்


4. மகாபாரதத்தை தமிழில் எழுதியவர் யார்?

வில்லிபுத்தூரார் 


5.மணிமேகலையை எழுதியவர் யார்?

 சீத்தலைச் சாத்தனார்.


6.சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்? 

 இளங்கோவடிகள்


7.சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்?

 திருத்தக்கத் தேவர்


8.குண்டலகேசியை எழுதியவர் யார்?

நாதகுத்தனார்


 9.நெடுநல்வாடையை எழுதியவர் யார்? 

நக்கீரர்


10. சிறுபாணாற்றுப்படையை எழுதியவர் யார்?

நத்தத்தனார்


11.பெரும்பாணாற்றுப்படையை எழுதியவர் யார்?

உருத்திரங்கண்ணனார்


12.குறிஞ்சிப்பாட்டை எழுதியவர் யார்?

 கபிலர்


13.முல்லைப்பாட்டை எழுதியவர் யார்?

நப்பூதனார்


14.திருமுருகாற்றுப்படையை எழுதியவர் யார்? 

நக்கீரர்


15.பொருநராற்றுப்படையை எழுதியவர் யார்?

முடத்தாமக்கண்ணியார்



16.பட்டினப்பாலையை எழுதியவர் யார்? 

உருத்திரங்கண்ணனார்


17.மதுரைக்காஞ்சியை எழுதியவர் யார்?

மாங்குடி மருதனார்


18.மலை மலைபடுகடாம் எழுதியன் யார்?

 பெருங்கவுசிகனார்


19.நாலடியாரை எழுதியவர் யார்?

சமண முனிவர்கள்


20.முதுமொழிக் காஞ்சியை எழுதியவர் யார்?

 கூடலூர் கிழார்


21.இனியவை நாற்பதை எழுதியவர் யார்? 

பூதஞ்சேந்தனார்


22.இன்னா நாற்பதை எழுதியவர் யார்?

கபிலர்


23.திரிகடுகத்தை எழுதியவர் யார்?

நல்லாதனார்




24.ஆசாரக் கோவையை எழுதியவர் யார்?

பெருவாயின் முள்ளியார் 



25.திருக்குறளை எழுதியவர் யார்?

திருவள்ளுவர்


26.ஏலாதியை எழுதியவர் யார்?

 கணிமேதாவியார்


27.களவழி நாற்பதை எழுதியவர் யார்? 

பொய்கையார்


28.நான்மணிக் கடிகையை எழுதியவர் யார்?

விளம்பிநாகனார் 


29.சிறுபஞ்ச மூலத்தை எழுதியவர் யார்?

காரியாசான் 


30.பழமொழியை எழுதியவர் யார் ?

முன்றுரையனார்






31.ஐந்திணை ஐம்பதை எழுதியவர் யார்?

     பொறையனார்


32.ஐந்திணை எழுபதை எழுதியவர் யார்? 

மூவாதியார்


33.கைந்நிலையை எழுதியவர் யார்?

     புல்லங்காடனார்


 34.திணைமொழி ஐம்பதை எழுதியவர் யார்?

    கண்ணஞ்சேந்தனார்


35.திணைமாலை நூற்றைம்பதை எழுதியவர் யார்? 

கணிமேதாவியார்


36.பெரிய புராணத்தை எழுதியவர் யார்?

      சேக்கிழார்


37.திருவாய்மொழியை எழுதியவர் யார்? 

நம்மாழ்வார்


38.திருமந்திரத்தை எழுதியவர் யார்? 

திருமூலர்


39.திருவிளையாடல் புராணத்தை எழுதியவர் யார்? 

பரஞ்சோதி முனிவர்


40.ரட்சணிய யாத்ரீகத்தை எழுதியவர் யார்?

ஹெச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை


41.தேம்பாவணியை எழுதியவர் யார்? 

வீரமா முனிவர்


42.திருப்பாவையை எழுதியவர் யார்? 

ஆண்டாள்


43.திருவெம்பாவையை எழுதியவர் யார்?

 மாணிக்கவாசகர்


44.சீறாப்புராணத்தை எழுதியவர் யார்? 

உமறுப்புலவர்


    45.திருவாசகத்தை எழுதியவர் யார்? 

        மாணிக்கவாசகர்


46 இயேசு காவியம் எழுதியவர் யார்? 

கண்ணதாசன்


47 நளவெண்பா எழுதியவர் யார்? 

புகழேந்தி



48.திருத்தொண்டர் திருவந்தாதி எழுதியவர் யார்? 

நம்பியாண்டார் நம்பி



49திருவெங்கை உலா எழுதியவர் யார்? 

சிவப்பிரகாச சுவாமிகள்



50.சஸ்வதி அந்தாதி எழுதியவர் யார்?

கம்பர்



PDF LINK கிளிக் செய்யுங்கள்



    *******


திங்கள், 4 ஏப்ரல், 2022

தாய்மைக்கு வறட்சி இல்லை!

 தாய்மைக்கு வறட்சி இல்லை!




கர்நாடக மாநிலத்தின் வடமாவட்டத் தலைநகரான குல்பர்கா நகரைத் தாண்டிய அந்த தேசிய நெடுஞ்சாலை, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் காடுகளுக்கு மத்தியில் மலைப்பாம்புபோல் நெளிந்து கொண்டிருந்தது... நகரச் சந்தடியில்லாமல் நிசப்தம் நிலவிய அந்தக் காட்டின் மவுனம். உள்மனதிற்குப் பேரிரைச்சலாய் ஒளித்துக் கொண்டிருந்த மத்தியான வேளையில்...


இந்தச் சாலையின் வலதுபக்கம் முள்வேலி போட்ட ஒரு தோட்டம்.

மண்ணவதாரம் எடுத்தது போன்ற பாதை அந்தத் தோட்டத்திற்கு மத்தியில் அரைகிலோ மீட்டர்வரை ஓடிக் கொண்டிருந்தது. இந்தத் தோட்டத்திற்கு முன்பகுதியிலேயே ஒரு கல்மாளிகை. இதையொட்டி, முன்னாலும் பின்னாலும் இரண்டு கம்புகள் தூக்கி நிற்க முக்கோண வாசல் கொண்ட குடிசை. குடிசைக்குக் கதவு கிடையாது. அது தேவையும் இல்லை. அதைப் பார்த்தால், உள்ளே இருப்பது வெளியே போவதற்கு முகாந்திரம் இல்லை. வெளியே இருப்பது உள்ளே போகாமல் இருப்பதற்குத்தான் கதவு தேவை, அந்தக் குடிசைக்கு முன்னால் அந்தக் குடும்பமே சுருண்டு கிடந்தது.


அவன் குப்புறக் கிடந்தான். தார்ப்பாய்த்த நாலு முழவேட்டி, முருங்கைக் கொம்பாய்த் தோன்றிய அவன் பின் கால்களைக் காட்டியபடியே இடுப்பைப் பற்றி இருந்தது. இரண்டு கரங்களையும் குறுக்காய் மடித்து மூச்சிழுத்துக் கொண்டிருந்தான். அவன் அருகே அவள் படுத்திருந்த விதத்தைப் பார்த்தால், அவள் மூக்கில் கை வைத்தால்தான் எந்த நிலையில் இருக்கிறாள் என்று சொல்ல முடியும். கரி கரியாய். கருப்புக் கருப்பாய். சாலைபோடப் பயன்படுத்தப்படும் தாரையே நெய்தது போன்றிருந்தது அவள் புடவை. இவள் தலைமாட்டில் இரண்டு சாம்பல் நிற நாய்க்குட்டிகள். இரண்டும் சடை நாய்கள்.


கால்மாட்டில் மூன்று வயதுப்


பெண்குழந்தை ஒருச்சாய்த்துக் கிடந்தாள். வயிற்றைக் கைகளால் அணைமுறித்துத் தூக்கத்தில் துக்கத்தைக் கலைத்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஒருவயதுக் குழந்தை ஒன்றுதான், ஈரத் தடயங்கள் ஏதும் இல்லாத ஈயத்தட்டை எடுத்து. 'ஏம்மா என்னைப் பெத்தே' என்பது மாதிரி அம்மாவின் வயிற்றில் அடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பேரிரைச்சலைக் கேட்டு அவள்கூடக் கண்விழித்தாள். கண் முன்னால் தன்னையும், தன்னவர்களையும் நோக்கி மோதிக் கொல்லப்போவதுபோலப் பாய்ந்து வந்த அந்த ஜீப்பிற்குப் பயந்து, கோயிலில் அங்கப்பிரதட்சிணம் செய்வதுபோல் அனிச்சையாக உருண்டு உருண்டு உடம்பைச் சுழற்றினாள். கணவனின் கையையும் பிடித்து அவனையும் அவள் உருட்டிப் போட்டாள். இதற்குள் அவன் துடித்தெழுந்தான். அந்தச் சடை நாய்க்குட்டிகள் பாய்ந்து வந்த ஜீப்பை வழி மறிப்பதுபோல் முன்னால் போய் நின்றபடி பயமில்லாமல் குலைத்தன. 'எம்பி எம்பிக்' குதித்தன.


இதற்குள். ஜீப் புழுதி பறக்க நின்றது. புழுதி மண் பட்ட கண்களைத் துடைத்தபடியே அவள் கீழேயே கிடந்தாள். பிறகு கணவன் கைதூக்கிவிட எழுந்த அவள் ஜீப்காரர்களைக் கோபமாகப் பார்த்தாள்.


அவள் தனது செல்லாக் கோபத்தைப் பொறுமையாக்கியபோது. ஜீப்பின் முன் இருக்கையில் இருந்து குதித்த ஒருவரை. பின்னால் இருந்து குதித்தவர்கள் பயபக்தியுடன் சூழ்ந்திருந்தார்கள். அந்த அதிகாரிக்கு நாற்பத்து ஐந்து வயதிருக்கலாம். அவரை மற்றவர்கள் பயத்துடன் பார்ப்பதைப் பார்த்த அவனுக்குப் பயம் பிடித்தது. மனைவியை ஆணையிடும் பாவனையில் நோக்கி, அப்புறம் அடிபணியும் தொனியில் கண்களைக் கீழே போட்டு. குடிசையை நோக்கி நடந்தான். எங்கிருந்தோ கஷ்டப்பட்டுப் பிடித்து வைத்திருந்த மண்பானைத் தண்ணீரைக் கொண்டு வந்தான்.

அந்த மாளிகைப் படிக்கட்டுகளில்


அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்ப உட்கார்ந்தார்கள். பியூன், ஒவ்வொருவருக்கும் அந்தஸ்துபடியே வாழையிலையைக் கொடுத்தார். அவர் போட்ட உணவுப் பண்டங்களும் அந்தஸ்து கனத்தைக் காட்டியது. அப்போது, மண்பானையை அங்கே கொண்டு வந்த தோட்டக்காரன், அதைத் தரையில் இறக்கி வைத்துவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்த போது, அந்த அதிகாரி அடைக்கோழி மாதிரி கத்தினார். அவன் திரும்பிப் பார்த்தபோது, அவனைத் தன்னருகே வரும்படி சைகை செய்தார். உடனே பியூன் பாதிப் பிரியாணியோடு அந்தத் தட்டை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் அதைத் தயங்கித் தயங்கி வாங்கி மற்றவர்கள் தட்டில் பரிமாறப் போனபோது அந்த அதிகாரி அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். இலையில் இருந்த ஒரு முட்டையை எடுத்து அந்த சைவப் பிரியாணிக்கு வெள்ளை மகுடம் சூட்டி, இதர வகையறாக்களையும் அதில் அள்ளிப்போட்டு, அவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளினார்.



அவனோ அவரிடம் ஏதோ சொல்லப் போனான். பிறகு தன்மானத்தை வயிற்றுக்குள் தின்றபடியே மனைவியை நோக்கி நடந்தான். அவள் அவனைக் கண்களால் கண்டித்தாள். பிறகு தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டித்தாள். ஏதோ கோபம் கோபமாய்ப் பேசினாள். என்ன பேசியிருப்பாள்?


அந்த அதிகாரி யோசித்தார். திடீரென்று எழுந்தார். அவர் எழுந்ததும் கூடவே எழப்போன மற்றவர்களைக் கையமர்த்திவிட்டு. சாப்பாட்டுத் தட்டுடன் அந்தக் குடும்பத்தை நோக்கி நடந்துவர பாதிவழியில் நின்று கவனித்தார். கணவனுடன் இதுவரை வாதாடியவள். சுற்றும் முற்றும் பார்த்தாள். மூன்று வயது மகள் அப்பா பக்கம் நின்றபடி அம்மாவைக் கோபம் கோயமாய்ப் பார்த்தாள். ஒருவயதுக் குழந்தை அந்த வட்டத்தட்டை நோக்கி, 'நிலவே நிலவே வா' என்பது போல் கையாட்டியது. அந்த நாய்க்குட்டிகள் அவனைப் பார்த்து வாலாட்டின. அவளைப் பார்த்து வேசாய்க் குரைத்தன.


அவள் புரிந்துகொண்டாள். அவர்களைப் பற்றி மட்டுமல்ல தன்னைப் பற்றியும். அவள் வயிற்றிலும் பசி முள் குத்தி வலியெடுத்தது. தானே எழுந்து கணவன் கையில் இருந்ததை, தன் கையில் கொண்டு வந்தாள். குழந்தைகள் வாயாட்டின. நாய்கள் வாலாட்டின. அப்பளம் மாதிரி -அதேசமயம் அதைப்போல் மூன்று பங்கு கனம் கொண்ட வட்ட சப்பாத்திகளைக் கொண்டு வந்தாள். அவற்றில் ஆளுக்கு இரண்டைக் கொடுத்தாள். அவற்றின் மேல் வெஜிடபிள் பிரியாணியையும், உருளைக்கிழங்குப் பொரியலையும் எடுத்து வைத்தாள்.


காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அவர்கள், அதை, தீர்ந்துவிடக்கூடாதே என்று மெல்ல மெல்லச் சுவைத்தார்கள். செல்லமாகக் குரைத்த அந்த நாய்களுக்கு மட்டும் அவ்வப்போது கவளங்களைப் போட்டபடி அவனும் குழந்தைகளும் வாயசைத்தபோது அவள் மனம் அசைத்தாள். அவர்களை அனுதாபத்துடன் பார்த்தாள்.'இப்போ இப்படிச் சாப்பிடுகிறீர்களே... ராத்திரி என்ன செய்வீர்கள்?' என்ற பார்வை. இனிமேல் இதைக் காண முடியாது என்பதால்தான். இப்படிக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுகிறீர்களோ என்பது போன்ற கவலைப்பார்வை... அவர்களைப் பார்த்துத் தனக்குள் ஏற்பட்ட பசிப்பார்வை...


அவள் அந்த ஈயத்தட்டை எடுத்து ஒரு கவளத்தை உருட்டி வாய்க்குள் திணித்தாள். உலர்ந்துபோய் இருந்த அவள் தொண்டை அதை உள்வாங்க மறுத்தது. அவள் தொண்டைக்குழி அதனால் அவறுவதுபோல் சத்தமிட்டது. அந்த சப்தம் நிற்பதற்கு முன்னால், பாதிவழியில் நின்ற அதிகாரி அங்கே வந்தார். கையில் வைத்திருந்த ஒரு தம்ளர் தண்ணீரை அவளிடம் நீட்டினார். உடனே அவள் அவரைப் பார்த்து லேசாய்க் கூசினாள். அந்த அதிகாரி தான் பேசுவது தமிழ் - அவளுக்குப் புரியாத மொழி என்பதைப் புரியாமலே தழுதழுக்கப் பேசினார்.


உன்னை மாதிரியே கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத்தான் அம்மா பிறந்தேன். உன்னை என் தாயாய் நினைத்துத்தான் கொடுக்கேன்".


அவளுக்கு, அவர் வார்த்தைகள் புரியவில்லை. ஆனால், அதன் ஆன்மா தெரிந்தது. அந்தச் சக்கைச் சொற்களுக்குள் உள்ளாடிய மனிதநேயம் அவளுக்குப் புரிந்தது. லேசாய்ச் சிரித்தாள். பிறகு சசுஜமாக சாப்பிடப் போனாள். இதற்குள் அந்த அதிகாரி அவள் கணவனிடம், அரைகுறை இந்தியில் கேட்டார்.


"என்னப்பா இது? எங்கே பார்த்தாலும் ஒரே சுடுகாடாய்க் கிடக்குது... இதோ இந்த திராட்சைக் கொடிகூட இரும்புக் கம்பிகளில் கருகிக் கிடக்குதே... பச்சை இலைகள் பழுப்பேறிப் போயிருக்குதே..."


"அதை ஏன் கேட்கறீங்க? இந்த மாதிரி பஞ்சத்தை நான் பிறந்த இந்த முப்பது வருஷத்திலே பார்த்ததில்லை. மழை இப்போ மாதிரி எப்பவும் ஏமாற்றுனது இல்லை. இந்த நிலத்தை ஆண்டாண்டு காலமா நான்தான் கவனித்து வரேன். என்னுடைய எஜமானர். 'தோட்டத்திலே பிரயோசனமில்லேடா சென்னப்பா... இனிமேல் உனக்குச் சம்பளம் கிடையாது. இங்கே இருந்தால் இரு. இல்லன்னா உன் ஆட்களை மாதிரி பஞ்சம் பிழைக்க நாடோடியாய்ப் போயிடு' என்றார். இது என்ன சாமி நியாயம்? என் வேர்வையில் பழுத்த திராட்சையை விற்ற, எஜமானரு லட்சம் லட்சமாய் சம்பாதித்தபோது, சம்பளத்துக்கு மேலே கூட்டிக் கொடுக்கவில்லை. லாபம் வந்தப்போ கூலியைக் காட்டாதவர், நஷ்டம் வரும்போது கழிக்கப்படாது பாருங்கோ.. ஆனா, இவரு சம்பளத்திலே கழிச்சு தந்தாக்கூடப் பரவாயில்லை. என்னையே கழிக்கப் பார்க்காரு. இது எந்த நியாயத்திலே சேர்த்தி சாமி?"


அந்தக் கிராமத்துக் கூலியாளின் எதார்த்தமான பேச்சைக் கேட்டு மலைத்துப்போன அதிகாரியின் காலுக்குள் அந்த இரண்டு சடை நாய்க்குட்டிகளும். நுழைந்து நுழைந்து சுற்றி வந்தன.

அவர் இலையில் கை வைக்கும்போது அந்த கையையும், அந்தக் கை வாய்க்குப் போகும்போது அந்த வாயையும், அந்தக் கைபோன போக்கிலேயே உயரப் பார்த்தன. உடனே அவர் இலையில் இருப்பதைத் தரையில் இறக்குவார். இப்படி அவர் எடுத்தெடுத்துப் போடுவதும். அதை நாய்க்குட்டிகள் குலைத்துக் குலைத்துத் தின்பதுமாய் இருந்தன. ஒரு கட்டத்தில் அவர் இலையில் பார்த்தார். பகீரென்றது. அதில் கொஞ்சம்தான் இருந்தது. நாய்கள் மீண்டும் குலைத்தன. வாலாட்டின. அவருக்கு இது அதிகபட்சமாகத் தெரிந்தது. அவரை விடவில்லை. இடுப்பிலே எகிறின. காலில் இடறின.


திடீரென்று ஒரு சின்னக் கல் ஒரு நாய்க்குட்டி மீது விழுந்தது. ஒரு மண்கட்டி இன்னொரு குட்டிமீது விழுந்தது. மண்பட்ட நாய்க்குட்டி புத்திசாலி. எறிந்தவளை ஓரங்கட்டிப் பார்த்தது. அவளோ கோபம் கோபமாய்க் குரவிட்டபடியே கையைத் தூக்கியபோது, அது சிறிது ஓடிப்போய், ஓர் இடத்தில் மண்ணாங்கட்டியாய்ப் படுத்தது. திடீரென்று அவள் அங்கே ஓடிவந்தாள். அந்த நாயின் கழுத்தைப் பிடித்துச் சற்றுத் தொலைவில் மெதுவாகத்தான் தூக்கிப் போட்டாள். கீழே விழுந்த அந்தச் சின்ன குட்டியோ சுரணையற்றுக் கிடந்தது. உடனே அவள் அலறியடித்து நெருங்கினாள். அதுவோ அவள் தன்னை மீண்டும் தாக்க வருவதாய் அனுமானித்து, ஒரு காலைத் தூக்கியபடியே திராட்சைத் தோட்டத்திற்குள் ஓடியது. அப்புறம் அதன் ஓல ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

அவள் வயிற்றுக்கும் சூடு பிடித்தது. பட்டினியால் பழக்கப்பட்ட மரத்துப்போன அவள் வயிறு இப்போது வாயை வம்புக்கிழுத்தது. இரண்டு கவளம் மட்டுமே எடுக்கப்பட்ட அந்தத் தட்டை அவள் ஆசையோடு பார்த்தாள். பிறகு அதைக் குழந்தை மாதிரி மடியில் வைத்துக்கொண்டு ஒரு கவளத்தை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. தட்டில் இன்னும் முக்கால்வாசிக்கு மேலேயே இருந்தது. உண்டு... உண்டு... சுவையில் சொக்கிச் சொக்கி அவள் லயித்தபோது அந்த நாயின் ஓல் ஒலி, அவளைச் சுண்டி இழுத்தது. 'எம்மா நீயா இப்படிச் செய்துட்டே...?' என்பதுபோல் அது ஒலித்தது. அவள் தட்டைக் கீழே வைத்துவிட்டு, எச்சில் கையைத் தரையில் ஊன்றியபடியே எழுந்தாள். சுற்றும் முற்றும் கண்களைச் சுற்றவிட்டாள். காய்ந்துபோன திராட்சைக் கொடிகள் படர்ந்த கம்பிப் பந்தலைத் தாங்கிய ஒரு கல்தூணின் கீழே அந்த நாய்க்குட்டி ஈனமுனகவாய்க் கிடந்தது. அவளைப் பார்த்து அப்போதும் வாலாட்டியது.


அவள் அந்த நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவி விட்டாள். அந்தக் குட்டியைத் தன் மடியில் சம்மணக் கால்களை அங்குமிங்குமாய் ஆட்டி அதைத் தாலாட்டினாள். பிறகு அந்தத் தட்டைத் தன் பக்கமாய் இழுத்து, அதில் இருந்ததைக் கவளம் கவளமாய் உருட்டி, அந்தச் சின்னக் குட்டிக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அந்தச் செல்லக்குட்டியோ பிகு செய்தபடியே அவள் கையை வாவகமாய் விட்டுவிட்டு, கவளத்தை மட்டும் கவ்விக் கொண்டே இருந்தது.


அந்தத் தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவள் தாய்மை கூடிக்கொண்டே இருந்தது.



கிளிக் செய்யுங்கள்











வியாழன், 31 மார்ச், 2022

நா.முத்துக்குமார்

மகனுக்கு எழுதிய கடிதம்

நா. முத்துக்குமார்



அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது.

இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டு இருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும்.

என் பிரியத்துக்குரிய பூங்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை, குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை, கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

உலகிலேயே மிகப்பெரிய இன்பம் எது?.... "தம் மக்கள் மெய் தீண்டல் உயிர்க்கு இன்பம்" என்கிறார் வள்ளுவர். நீ எம் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்து போனேன். உன் பொக்கை வாய்ப் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டு இருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச்சாகசத்தைக் கொண்டாடினாய். தரை எல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் விரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லாத் தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய்.



என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். சிணுங்க வேண்டும். குப்புறக் கவிழ்ந்து, பின் தலை நிமிர்ந்து, அந்தச்சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரை எல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும். எழ வேண்டும். விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ்சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள், அதே நேரம், அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதைவிட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும்வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான். சுற்றுப்பார். உடலைவிட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார்.

எங்கும் எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. உடன் பேரன்பால் இந்தப் பிரயஞ்சத்தை நனைத்துக்கொண்டே இரு.

உன் தாத்தா, ஆகாய விமானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது 57ஆவது வயதில்தான் அதில் அமர்ந்து பார்த்தார். உன் தகப்பனுக்கு 27ஆவது வயதில் விமானத்தின் கதவுகள் திறந்தன. ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலேயே நீ ஆகாயத்தில் மிதந்தாய், நாளை உன் மகன் ராக்கெட்டில் பறக்கலாம்.



இந்த மாற்றம் ஒரு தலைமுறையில் வந்தது அல்ல. இதற்குப் பின்னால் நெடியதொரு உழைப்பு இருக்கிறது. என் முப்பாட்டன் காடு திருத்தினான். என் பாட்டன் கழனி அமைத்தான். என் தகப்பன் விதை விதைத்தான். உன் தகப்பன் நீர் ஊற்றினான். நீ அறுவடை செய்துகொண்டு. இருக்கிறாய். என் தங்கமே! உன் பிள்ளைக்கான விதையையும் உன் உள்ளங்கையில் வைத்திரு. உழைக்கத் தயங்காதே. உழைக்கும்வரை உயர்ந்து கொண்டு இருப்பாய்.

இதை எழுதிக்கொண்டு இருக்கையில் என் பால்ய காலம் நினைவுக்கு வருகிறது. கிராமத்தில் கூரை வீட்டிலும், பின்பு ஓட்டு வீட்டிலும் வளர்ந்தவன் நான். கோடைக் காலங்களில் வெப்பம் தாங்காமல் ஓட்டுக்கூரையில் இருந்து கொடிய தேள்கள் கீழே விழுந்துகொண்டேஇருக்கும். அதற்குப் பயந்து என் தகப்பன் என் அருகே அமர்ந்து இரவு முழுவதும் பனை ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். இன்று அந்த விசிறியும் இல்லை. கைகளும் இல்லை. மாதகரத்தில் வாழும் நீ. வாழ்க்கை முழுக்கக் கோடைக்காலங்களையும் வெவ்வேறு வடிவங்களில் கொடிய தேள்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். எத்தனை காலம்தான் உன் தகப்பன் உன் அருகில் அமர்ந்து விசிறிக்கொண்டு இருப்பான்? உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

வயதின் பேராற்றங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீர்வதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். உன் உடல் உனக்கே எதிராகும். என் தகப்பன் என்னிடம் ஒளித்துவைத்த ரகசியங்கள். அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய தருணம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள்.

நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களைத் திறந்து வைக்கின்றன. புத்தகங்களை நேசி. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது
நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள், உன் உதிரத்திலும் அந்தச் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

கிடைத்த வேலையைவிட பிடித்த வேலையைச் செய். இனிய இல்லறும் தொடங்கு. யாராவது கேட்டால், இல்லை எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். அதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

உறவுகளிடம் நெருங்கியும் இரு. விலகியும் இரு. இந்த மண்ணில் எல்லா உறவுகளையும்விட மேன்மையானது நட்பு மட்டுமே. நல்ல நண்பர்களைச் சேர்த்துக்கொள், உன் வாழ்க்கை நேராகும்.

இவை எல்லாம் என் தகப்பன் எனக்குச்
சொல்லாமல் சொன்னவை. நான் உனக்குச் சொல்ல நினைத்துச் சொல்பவை.

என் சந்தோஷமே! ந பிறந்த பிறகுதான் என் தகப்பனின் அன்பையும் அருமையையும் நான் அடிக்கடி உணர்கிறேன். நாளை உனக்கொரு மகன் பிறக்கையில், என் அன்பையும் அருமையையும் நீ உணர்வாய்.

நாளைக்கும் நாளை நீ உன் பேரன், பேத்திகளுடன் ஏதோ ஒரு ஊரில் கொஞ்சிப் பேசி விளையாடிக்கொண்டு இருக்கையில் என் ஞாபகம் வந்தால், இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில் வாழ்ந்து கொண்டு இருப்பேன் நான்.

இப்படிக்கு உடன் அன்பு அப்பா.



நா.முத்துக்குமார் 
பிறப்பு (12 .07. 1975) 
இறப்பு14.08.2016 (அகவை 41)
 தமிழகத்தைச் சார்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில.  தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருதுவாங்கினார்.







புதன், 30 மார்ச், 2022

group 4 exam notification 2022 Full details

 TNPSC CHANNEL


Group 4 exam notification 2022 Full details :


1. TNPSC GROUP 4 SYLLABUS Click here


2.TNPSC GROUP 4 NOTIFICATION TAMIL Click here


3. TNPSC GROUP 4 NOTIFICATION ENGLISH Click here


4. TNPSC GROUP 4 EXAM Apply


5. PSTM CERTIFICATE Click here


6. TNPSC CHANNEL Click here







TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...