செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

tnusrb pc notification 2022 | new syllabus | | apply online | pdf download | tnusrb pc apply online 2022 | tnusrb pc apply online 2022 tamil | tnusrb pc syllabus 2022 pdf in tamil | tnusrb pc age limit 2022 | tnusrb pc exam syllabus in tamil | police exam book tamil 2022


 தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை - 08.


இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2022






NOTIFICATION : PDF DOWNLOAD

SYLLABUS : PDF DOWNLOAD

ONLINE APPLY : CLICK HERE




மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்





ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

10th New syllabus in tamil all topic ilakkanam

                 பத்தாம் வகுப்பு

தமிழ்

இலக்கணப்பகுதி



மாதிரி விளக்கம்


வினா அறுவகைப்படும்.

1. அறிவினா

2. அறிய வினா

3. ஐய வினா

4. கொளல் வினா

5. கொடை வினா

6. ஏவல் வினா

1. அறிவினா:

தான் ஒரு பொருளை நன்கு அறிந்தும், பிறருக்கு தெரியுமா என்பதனை அறியும் பொருட்டு வினவப்படும் வினா

(எ.கா)     

திருக்குறளை இயற்றியவர் யார்?   என ஆசிரியர் மாணவனிடம் வினவுவது.

2. அறியா வினா :

தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காக பிறரிடம் வினவப்படும் வினா

(எ.கா)

எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றியன எவை? என மாணவன் ஆசிரியரிடம் வினவுவது .

3. ஐய வினா

தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒரு பொருள் குறித்து, ஐயத்தினை போக்கி கொள்வதற்காக வினவப்படும் வினா

(எ.கா) அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?

4. கொளல் வினா

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவப்படும் வினா

(எ.கா) பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா.

5. கொடை வினா

தான் ஒரு பொருளை கொடுப்பதற்காக அப்பொருள் இருத்தலை பற்றி பிறரிடம் வினவப்படும் வினா

(எ.கா) மாணவர்களே! உங்களுக்கு சீருடை இல்லையோ?

6. ஏவல் வினா

ஒரு தொழிலை செய்யும் படி ஏவும் வினா ஏவல் வினா

(எ.கா)   மனப்பாடச் செய்யுளை படித்தாயா?

               முருகா சாப்பிட்டாயா?

(இவை படி, சாப்பிடு என்று ஏவல் பொருளை தருகின்றன)



விடை எட்டு வகைப்படும்.

சுட்டுவிடை

மறைவிடை

நேர்விடை

ஏவல்விடை

வினாஎதிர்வினாதல்விடை

உற்றதுரைத்தல்விடை

உறுவதுகூறல்விடை

இனமொழிவிடை

சுட்டுவிடைதொகு

சென்னைக்கு வழி யாது?” என்று வினவினால் ‘இது’ என்பது போலச் சுட்டிக் கூறும் விடை, சுட்டுவிடை.

‘மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது?’ என்பதற்கு ‘வண்டு விரும்பித் தேன் உண்ணும் நொச்சிப் பூ’ என்று விளக்கம்  கருதிக் கூறும் விடை முதலியன சுட்டுவிடை ஆகும். 

மறைவிடை ( எதிர் மறுத்துக் கூறல் விடை)தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யேன்’ என்பதுபோல எதிர்மறுத்துக் கூறும் விடை, எதிர்மறைவிடை.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாட வில்லை’ எனக் கூறுவது மறைவிடை எனப்படும்.

இங்கு மறை என்பது எதிர்மறை எனப் பொருள்படும்.

நேர்விடை ( உடன்பட்டுக் கூறுதல்)தொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்வேன்’ என்பதுபோல உடன்பட்டுக் கூறும் விடை, நேர்விடை.

நேர்விடை என்பது வினாவிற்கு உடன்பட்டுக் கூறும் விடையாகும்.

செழியா, விளையாடினாயா? என்னும் வினாவிற்கு ‘விளையாடினேன்’ எனக் கூறுவது நேர்விடை எனப்படும்.

ஏவல்விடைதொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’நீயே செய்’ என்று ஏவிக் கூறுவது , ஏவல்விடை.

வினாவில் உள்ள செயலை வினவியவரைச் செய்யச் சொல்வதுஏவல்விடை எனப்படும். வினவியவரையே ஏவுவதால் ஏவல்விடை  எனப்பட்டது.

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நீயே பாடு’ என்பது ஏவல்விடை எனப்படும். 

வினாஎதிர்வினாதல்விடைதொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’செய்யாமலிருப்பேனோ?’ என்று வினாவையே விடையாகக் கூறுவது, வினாஎதிர்வினாதல்விடை.

வினவப்பட்ட வினாவிற்கு விடையாக வினாவாகவே விடை அளிப்பது வினா எதிர் வினாதல் விடை எனப்படும். 

கபிலா, நீ பாடுவாயா? என்னும் வினாவிற்கு, ‘நான் பாடாமல் இருப்பேனா’ என விடையளித்துத் தான் அச்செயலைச் செய்யவிருப்பதை உறுதி செய்வது, வினா எதிர் வினாதல் விடை  எனப்படும். 

உற்றதுரைத்தல்விடைதொகு

இது செய்வாயா?” என்று வினவிய போது, ’உடம்பு நொந்தது’ என்று தனக்கு உற்றதனை விடையாகக் கூறுவது, உற்றதுரைத்தல்விடை.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ படித்தாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலித்தது’ எனத் தனக்கு நேர்ந்ததைக் கூறுவதால் இஃது, உற்றது உரைத்தல் விடை எனப்பட்டது. இஃது இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விடையளிப்பதாகும்.

உறுவதுகூறல்விடைதொகு

இது செய்வாயா?” என்று வினவியபோது, ’கை வலிக்கும்’ எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது, உறுவதுகூறல்விடை.

வினவப்பட்ட வினாவிற்குத் தனக்கு நிகழ உள்ளதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை எனப்படும்.

நீ படிப்பாயா? என்னும் வினாவிற்குத் ‘தலைவலிக்கும்’ எனத் தனக்கு நிகழ உள்ளதைக் கூறுவதால் இதனை, உறுவது கூறல் விடை எனப்பட்டது. இஃது எதிர்கால வினை கொண்டு முடியும்.

இனமொழி விடைதொகு

”ஆடுவாயா?” என்று வினவிய போது, ’பாடுவேன்’ என்று ஆடுவதற்கு இனமான பாடுவதனை விடையாகக் கூறுவது, இனமொழிவிடை.

ஒன்றை வினவ அதற்கு இனமான வேறு ஒன்றைக் கூறுவது இனமொழி விடை எனப்படும்.

‘கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?’ என்ற கேள்விக்கு, ‘துவரம்பருப்பு இருக்கு’ என விடை தருதல்.

சுட்டு, மறை, நேர் ஆகிய மூன்றும் வெளிப்படை(செவ்வன் இறை). மற்ற ஐந்தும் வினாக்களுக்குரிய விடையைக் குறிப்பால்(இறை பயப்பன) உணர்த்துவன.

_______________


பத்தாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :


பத்தாம் வகுப்பு  பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.






10th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)

PDF DOWNLOAD







தொகுப்பாளர்

R. சரண்ராஜ்









மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்














திங்கள், 1 ஆகஸ்ட், 2022

9th new syllabus in tamil All topic ilakkanam

  ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இலக்கணப்பகுதி





மாதிரி வினா விடை (Answer key)

Question 1.

‘அவன் திருந்தினான்’ எவ்வகைத் தொடர்?

அ) செவினைத் தொடர்

ஆ) வினாத்தொடர்

இ) தன்வினைத் தொடர்

ஈ) பிறவினைத் தொடர்

Answer:

இ) தன்வினைத் தொடர்



Question 2.

மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குவது ……………… ஆகும்.

அ) உரிச்சொற்கள்

ஆ) பெயர்ச்சொற்கள்

இ) வினைச்சொற்கள்

ஈ) இடைச்சொற்கள்

Answer:

ஈ) இடைச்சொற்கள்


Question 3.

சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவுப் பொருளில் வரும் இடைச்சொல் ……..

அ) இல்லை

ஆ) அம்இ

இ) ஆம்

ஈ) இல்

Answer:

இ) ஆம்



Question 4.

உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறியவர் யார்?

அ) நன்னூலார்

ஆ) தொல்காப்பியர்

இ) இறையனார்

ஈ) வீரமா முனிவர்

Answer:

அ) நன்னூலார்



Question 5.

எழுத்து வகையால் சொற்கள் ………… வகைப்படும்.

அ) 2

ஆ) 3

இ) 4

ஈ) 5

Answer:

இ) 4

Question 6.

நிலை மொழி ஈற்றில் இ, ஈ, ஐ வரும் போது இடம்பெறும் உடம்படுமெய் …………..

அ) யகர உடம்படுமெய்

ஆ)வகர உடம்படுமெய்

இ) இரண்டும் வரும்

ஈ) இரண்டும் வராது

Answer:

யகர உடம்படுமெய்




Question 7.

காது, பேசு – இது எவ்வகைக் குற்றியலுகரம்.

அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்

இ) வன்தொடர்க் குற்றியலுகரம்

ஈ) மென்தொடர்க் குற்றியலுகரம்

Answer:

ஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்


Question 8..

கார் அறுத்தான் – எவ்வகை ஆகுபெயர்?

அ) பொருளாகு பெயர்

இ) காலவாகு பெயர்

ஆ) சினையாகு பெயர்

ஈ) கருவியாகு பெயர்

Answer:

இ) காலவாகு பெயர்


Question 9.

மரபுக் கவிதை இயற்றும் முறைகளைக்

 கூறும் இலக்கணம் எது?

அ) சொல்

ஆ) பொருள்

இ) யாப்பு

ஈ) அணி

Answer:

இ) யாப்பு



Question 10.

பின்வருநிலையின் வகை…………..

அ) 3

ஆ) 4

இ) 5

ஈ) 6

Asnwer:

அ) 3



ஒன்பதாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :


ஒன்பதாம் வகுப்பு  பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.






9th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)

PDF DOWNLOAD








தொகுப்பாளர்

R. சரண்ராஜ்









மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்














8th new syllabus tamil ilakkanam pdf

  

எட்டாம் வகுப்பு

தமிழ்

இலக்கணப்பகுதி



மாதிரி வினா விடை (Answer Key)

Question 1.

எழுத்துகள் ………………….. இடங்களில் பிறக்கின்றன.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு


Question 2.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………………..

அ) படித்தான்

ஆ) நடக்கிறான்

இ) உண்பான்

ஈ) ஓடாது

Answer:

அ) படித்தான்


Question 3.

எச்சம் ………………………… வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு



Question 4.

வேற்றுமை வகை ……………….

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) மூன்று

Answer:

இ) எட்டு


Question 5.

தொகாநிலைத் தொடர் வகைகள்

அ) 6

ஆ) 8

இ) 9

ஈ) 3

Answer:

இ) 9



Question 6.

திருவாசகம் படித்தாள் – இதில் மறைந்து வரும் வேற்றுமை உருபு 

அ) இரண்டாம் வேற்றுமை உருபு

ஆ) மூன்றாம் வேற்றுமை உருபு

இ) நான்காம் வேற்றுமை உருபு

ஈ) ஐந்தாம் வேற்றுமை உருபு

Answer:

அ) இரண்டாம் வேற்றுமை உருபு



Question 7.

விகாரப் புணர்ச்சி …………….. வகைப்படும்.

அ) ஐந்து

ஆ) நான்கு

இ) மூன்று

ஈ) இரண்டு

Answer:

இ) மூன்று



Question 8.

சிலை அழகு என்பது …………………. புணர்ச்சிக்குச் சான்றாகும்.

அ) உயிரீற்று

ஆ) மெய்யீற்று

இ) உயிர்முதல்

ஈ) மெய் முதல்

Answer:

அ) உயிரீற்று



Question 9.

அசை ………………. வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு


Question 10.

பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும்.

அ) உவமை

ஆ) உவமேயம்

இ) தொடை

ஈ) சந்தம்

Answer:

அ) உவமை


10 = க0





எட்டாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :


எட்டாம் வகுப்பு  பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.






8th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)


PDF DOWNLOAD






தொகுப்பாளர்

R. சரண்ராஜ்









மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்














ஞாயிறு, 31 ஜூலை, 2022

7th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)

 

ஏழாம் வகுப்பு

தமிழ்

இலக்கணம்











இயல் 1.1 எங்கள் தமிழ்
இயல் 2.5 நால்வகைக் குறுக்கங்கள்
இயல் 3.5 வழக்கு
இயல் 4.5  இலக்கியவகைச் சொற்கள்
இயல் 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
இயல் 6.5 தொழிற்பெயர்
இயல் 7.5 அணி இலக்கணம்
இயல் 8.5 அணி இலக்கணம்
இயல் 9.5ஆகுபெயர்


மாதிரி வினா விடை

Question 1.

குற்றியலுகரத்தின் வகைகள்.

அ) 3

ஆ) 5

இ) 6

ஈ) 1

Answer:

இ) 6

Question 2.

தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.

அ) குற்றியலுகரம்

ஆ) குற்றியலிகரம்

இ) முற்றியலுகரம்

ஈ) ஐகாரக்குறுக்கம்

Answer:

ஆ) குற்றியலிகரம்


Question 3.

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..

அ) ஐகாரக் குறுக்கம்

ஆ) ஔகாரக் குறுக்கம்

இ) மகரக் குறுக்கம்

ஈ) ஆய்தக் குறுக்கம்

Answer:

ஆ) ஔகாரக் குறுக்கம்


Question 4.

மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்.

அ) போன்ம்

ஆ) மருண்ம்

இ) பழம் விழுந்தது

ஈ) பணம் கிடைத்தது

Answer:

ஈ) பணம் கிடைத்தது



Question 5.

வழக்கு __________வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

அ) இரண்டு



Question 6.

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ……………..

அ) இயற்சொல்

ஆ) திரிசொல்

இ) திசைச்சொல்

ஈ) வடசொல்

Answer:

அ) இயற்சொல்


Question 7.

நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..

அ) 40

ஆ) 42

இ) 44

ஈ) 46

Answer:

ஆ) 42


Question 8.

பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

அ) எழுது

ஆ) பாடு

இ) படித்தல்

ஈ) நடி

Answer:

இ) படித்தல்


Question 9.

இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது.

அ) உருவாக அணி

ஆ) உவமை அணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி

Answer:

இ) ஏகதேச உருவக அணி




Question 10.

அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

Answer:

இ) நான்கு



ஏழாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :


ஏழாம் வகுப்பு  பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.






7th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)


PDF DOWNLOAD







தொகுப்பாளர்

R. சரண்ராஜ்









மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்














சனி, 30 ஜூலை, 2022

6th std tamil all topics illakkanam

 






ஆறாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :


ஆறாம் வகுப்பு  பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.





✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல

✅ நோக்கம் : ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.









PDF DOWNLOAD






தொகுப்பாளர்

R. சரண்ராஜ்









மேலும் அறிய...க்ளிக் செய்யுங்கள்



வெள்ளி, 29 ஜூலை, 2022

TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை

    




TNPSC CHANNEL

பொதுத்தமிழ் வினா விடை


TNPSC GROUP 1 | GROUP 2/2A | GROUP 3 | GROUP 4/VAO | PC EXAM | பொதுத்தமிழ் வினா விடை



Question 1.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஜெயகாந்தனின்

புதினம்..........

அ) கங்கை எங்கே போகிறாள்

ஆ) யாருக்காக அழுதாள் 

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்

ஈ) இமயத்துக்கு அப்பால்

Answer:

இ) சில நேரங்களில் சில மனிதர்கள்


Question 2.

தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதியவர்.

அ) வியாசர்

ஆ) கம்பர்

இ) வில்லிபுத்தூரார்

 ஈ) பாரதியார்

Answer:

அ) வியாசர்







Question 3.

"தர்க்கத்திற்கு அப்பால்" சிறுகதை அமைந்த தொகுப்பு.

அ) ரிஷிமூலம்

ஆ) யுகசந்தி 

இ) குருபீடம் 

ஈ) ஒரு பிடி சோறு

Answer:

ஆ) யுகசந்தி


Question 4.

தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும்

பழக்கம் உடையவர் 

அ) மேத்தா

ஆ) சுஜாதா

இ) ஜெயமோகன் 

ஈ) ஜெயகாந்தன்

Answer: ஈ) ஜெயகாந்தன்


Question 5.

ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்?

அ) கண்ண தாசன்

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இ) புலமைப்பித்தன்

ஈ) வாலி

Answer:

ஆ) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


Question 6.

உன்னைப்போல் ஒருவன் - திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது

அ) சாகித்ய அகாதெமி விருது

ஆ) குடியரசுத்தலைவர் விருது

இ) ஞானபீட விருது 

ஈ) தாமரைத் திரு விருது

Answer:

ஆ) குடியரசுத்தலைவர் விருது


Question 7.

சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக்கூடியவர். 

அ) அகிலன்

ஆ) ஜெயகாந்தன்

இ) புதுமைப்பித்தன்

ஈ) கல்கி

 Answer: ஆ) ஜெயகாந்தன்


Question 8.

படிக்காத மேதை என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர் 

அ) அகிலன்

ஆ) ஜெயகாந்தன் 

இ) புதுமைப்பித்தன்

ஈ) 

Answer:

ஆ) ஜெயகாந்தன்



Question 9.

ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு.

அ) 1972

ஆ) 1971

இ) 1975

ஈ) 1978

Answer:

அ) 1972


Question 10.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்......

அ) ஜுன் 5

 ஆ) மார்ச் 20

இ) அக்டோபர் 5

ஈ) பிப்ரவரி 2

Answer: அ) ஜுன் 5



Question 11.

நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும்

நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.

அ) மிளைகிழான் நல்வேட்டனார்

ஆ) கணிமேதாவியார்

இ) மாங்குடி மருதனார்

ஈ) நல்லந்துவனார்.

Answer: இ) மாங்குடி மருதனார்


Question 12.

'இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை' என்று போற்றப்படுபவர் ....

 அ) பென்னி குயிக் 

ஆ) விஸ்வேஸ்வரய்யா 

ஈ) சர். ஆர்தர் காட்டன்

இ) சர்.பக்கிள்

Answer: ஈ) சர். ஆர்தர் காட்டன்


Question 13.

‘கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது .

அ) பக்ரா நங்கல்

ஆ) ஹிராகுட்

இ) சர்தார் சரோவர்

ஈ) கல்லணை

Answer: ஈ) கல்லணை



Question 14. 

பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ" என இடி

முழக்கம் செய்தவர் யார்? 

அ பாரதியார்.

ஆ) பாரதிநாசன்

இ) கவிமணி

ஈ) நாமக்கல் கவிஞர்

Answer:

ஆ) பாரதிதாசன்


Question 15.

"பட்டினத்தார் பாராட்டிய மூவர்" என்ற நூலை இயற்றியவர்

அ) இராஜேஸ்வரி அம்மையார் 

ஆ) காரைக்கால் அம்மையார்

இ) நீலாம்பிகை அம்மையார்

ஈ) சிவகாமி அம்மையார்

Answer;

இ) நீலாம்பிகை அம்மையார்


Question 16.

தெற்காசியாவின் சாக்ரடீசு என்று புகழப்பட்டவர் யார்? 

அ) அறிஞர் அண்ணா

ஆ) காமரசார் 

இ) ராஜாஜி

ஈ) தந்தை பெரியார்.

Answer:

ஈ) தந்தை பெரியார்



Question 17.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர் யார்?

அ) கபிலர்

ஆ)வள்ளுவர் 

இ) கணியன் பூங்குன்றனார்

ஈ) ஒளவையார்

Answer:

இ) கணியன் பூங்குன்றனார்


Question 18.

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப் பிண்டம் என்று கூறிய புலவர் யார்?

அ) கூடலூர் கிழார்

ஆ) ஆலந்தூர் கிழார் 

இ) ஆலந்தூர் மோகனரங்கள்

ஈ) கபிலர்

Answer: ஆ) ஆலந்தூர் கிழார்


Question 19.

கங்கையையும், இமயத்தில் பெய்யும் மழையையும்

உவமைகளாக எடுத்துக் கூறும் நூல் எது?

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை 

ஈ) பரிபாடல்

Answer: ஆ) புறநானூறு

Question 20.

உலகத்தமிழாய்வு மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?

அ) அமுதன் அடிகள்

ஆ) குன்றக்குடிகள் அடிகள்

இ) தனிநாயக அடிகள்

ஈ) ஞானியாரடிகள்

Answer: இ) தனிநாயக அடிகள்












 

PDF DOWNLOAD





















மேலும் அறிய...✅ க்ளிக் செய்யுங்கள்



*******





TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION

TNPSC GROUP 2,2A 2024 NOTIFICATION PDF download link 👇👇👇👇👇👇👇👇👇👇 ✅✅✅ Click here ✅ ✅✅ ----------------------------------------------...