இயல் 1.1 எங்கள் தமிழ்
இயல் 2.5 நால்வகைக் குறுக்கங்கள்
இயல் 3.5 வழக்கு
இயல் 4.5 இலக்கியவகைச் சொற்கள்
இயல் 5.5 ஒரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
இயல் 6.5 தொழிற்பெயர்
இயல் 7.5 அணி இலக்கணம்
இயல் 8.5 அணி இலக்கணம்
இயல் 9.5ஆகுபெயர்
மாதிரி வினா விடை
Question 1.
குற்றியலுகரத்தின் வகைகள்.
அ) 3
ஆ) 5
இ) 6
ஈ) 1
Answer:
இ) 6
Question 2.
தன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.
அ) குற்றியலுகரம்
ஆ) குற்றியலிகரம்
இ) முற்றியலுகரம்
ஈ) ஐகாரக்குறுக்கம்
Answer:
ஆ) குற்றியலிகரம்
Question 3.
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
Answer:
ஆ) ஔகாரக் குறுக்கம்
Question 4.
மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்.
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது
Answer:
ஈ) பணம் கிடைத்தது
Question 5.
வழக்கு __________வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு
Question 6.
எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ……………..
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்சொல்
ஈ) வடசொல்
Answer:
அ) இயற்சொல்
Question 7.
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை …………..
அ) 40
ஆ) 42
இ) 44
ஈ) 46
Answer:
ஆ) 42
Question 8.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி
Answer:
இ) படித்தல்
Question 9.
இருபொருள்களுள் ஒன்றை உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் வருவது.
அ) உருவாக அணி
ஆ) உவமை அணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) எடுத்துக்காட்டு உவமை அணி
Answer:
இ) ஏகதேச உருவக அணி
Question 10.
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு
ஏழாம் வகுப்பு தமிழ் (இலக்கணம்) :
ஏழாம் வகுப்பு பாடத்திட்டதில் உள்ள (இலக்கணம்) அனைத்து ஒரு மதிப்பெண் வினா விடைகளும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
✅ குறிப்பு : விற்பனைக்கு அல்ல
✅ நோக்கம் :ஏழை எளிய மாணவர்களும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
7th New syllabus in tamil all topic ilakkanam (இலக்கணம்)
ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும்.
•தனி வாக்கியம்
•தொடர் வாக்கியம்
•கலவை வாக்கியம்
•கட்டளை வாக்கியம்
•வினா வாக்கியம்
•உணர்ச்சி வாக்கியம்
•செய்தி வாக்கியம்
•வியங்கோள் வாக்கியம்
•எதிர்மறை வாக்கியம்
•உடன்பாட்டு வாக்கியம்
•நேர்க்கூற்று வாக்கியம்
•அயற்கூற்று வாக்கியம்
1. தனி வாக்கியம்
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்
(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்
சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்
பாரி வந்தான்.
பாரியும் கபிலனும் வந்தனர்.
2. தொடர் வாக்கியம்
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்.
ஒரு எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடியும்.
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வந்து இடையில் ஆகையால்,அதனால் எனும் இணைப்புச் சொற்கள் வெளிப்படையாக வரும்.
பல வினையெச்சங்களைக் கொண்டு இறுதியில் வினைமுற்றைக் கொண்டு முடியும்.
(எ.கா) ராமன் திருச்சி சென்றான்; மலைக்கோட்டை ஏறினான்; கடவுளை வழிபட்டான்.
நாகம் இடியோசை கேட்டது; அதனால் நடுங்கியது.
தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி பெற்றாள்; பரிசு பெற்றாள்.
3. கலவை வாக்கியம் :
கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும்.(அல்லது)
ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருமாயின் அது கலவை வாக்கியம் எனப்படும்
‘ஓ’ ‘என்று’ ‘ஆல்’ என்ற இணைப்புச் சொற்கள் வரும்.
(எ.கா) மேகம் கருத்ததால் மழை பெருகியது.
யார் திறமையாகப் படிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவர்.
தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
நாங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்று ஆசிரியர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
4.கட்டளை வாக்கியம்
பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருமாயின் அது கட்டளை வாக்கியம்.
இதில் இறுதிச் சொல் வேர்ச்சொல்லாக வரும்.
(எ.கா) அறம் செய்.
தண்ணீர் கொண்டு வா.
இளமையில் கல்.
திருக்குறளைப் படி
5. வினா வாக்கியம்
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம்.
வினா எழுத்துக்களாவன; ஆ, எ, ஏ, ஓ, யா ஆகும்.
(எ.கா) இது சென்னைக்கு செல்லும் வழியா?
நீ மனிதனா? - ஆ
நீ தானே? - ஏ
உளரோ? - ஓ
6. உணர்ச்சி வாக்கியம்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு வாக்கியம் அமையுமாயின் அது உணர்ச்சி வாக்கியம்
(எ.கா) ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!
ஐயகோ! நேருஜி மறைந்தாரே!
7. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைவதே செய்தி வாக்கியம்
(எ.கா) உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது
மாணவர்கள் சீருடையில் வர வேண்டும்
8. வியங்கோள் வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல், ஆகியவற்றுடன் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியமே வியங்கோள் வாக்கியம்
(எ.கா) தமிழை முறையாகப் படி - கட்டளை
நீடுழி வாழ் - வாழ்த்துதல்
தீயென ஒழி - வைதல்
நல்ல கருத்தினை நாளும் கேள் - வேண்டுகோள்
9.எதிர்மறை வாக்கியம்
ஒரு செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது எதிர்மறை வாக்கியம் ஆகும்.
(எ.கா) அவன் கல்வி கற்றிலன்
உடன்பாடு-எதிர் மறை
அவன் சென்றான்-அவன் சென்றிலன்
ஆமைகள் வேகமாக ஓடும்-ஆமைகள் வேகமாக ஓடா
புலி புல்லைத் தின்னும்-புலி புல்லைத் தின்னா
மொழி இலக்கிய வளம் உடையது-மொழி இலக்கிய வளம் அற்றது
10. உடன்பாட்டு வாக்கியம்
ஒரு செயல் அல்லது தொழில நிகழ்வதைத் தெரிவிப்பது உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.
(எ.கா) வயலில் மாடுகள் மேய்ந்தன
வகுப்பில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
11.நேர்க்கூற்று வாக்கியம்
ஒருவர் சொன்ன செய்தியை பொருள் மாறாமல் அவர் சொன்னபடியே சொன்னால் அது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
அவர் இவரிடம் சொன்ன செய்தியை மேற்கோள் இட்டுக் காட்ட வேண்டும்.
(எ.கா) வளவன்,"நான் ஊருக்குச் செல்கிறேன்" என்றான்.
12.அயற்கூற்று வாக்கியம்
ஒருவர் சொன்ன செய்தியை கேட்டு அவன் இப்படியாகச் சொன்னான் என்று மற்றொருவரிடம் கூறுவது அயற்கூற்று வாக்கியம் ஆகும்.
(எ.கா) வளவன் தான் மதுரை செல்கிறேன் என்று சொன்னான்.
*******
சில சொற்களும் அதனோடு வேர்ச்சொற்களும் பின்வருமாறு:
சொற்கள்வேர்ச்சொற்கள்
பற்றினால்பற்று
ஒடாதேஒடு
அகன்றுஅகல்
பார்த்தான்பார்
அறுவடைஅறு
கெடுத்தாள்கெடு
இயக்கிடுஇயக்கு
பாடியபாடு
கேட்ககேள்
உற்றஉறு
உருக்கும்உருக்கு
எஞ்சியஎஞ்சு
ஒட்டுவிப்புஒட்டு
கண்டனன்காண்
நினைத்தேன்நினை
கொடுதீர்கொடு
ஓடாதுஓடு
கற்றேன்கல்
காத்தவன்கா
காட்சியில்காண்
கொடாமைகொள்
தட்பம்தண்மை
மலைந்துமலை
*******
.
வினை முற்று
வினை முற்று என்றால் என்ன ?
வினைமுற்று என்பது,
தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,
காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.
திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,
பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)
{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)
வினையெச்சம்
வினையெச்சம் என்றால் என்ன ?
முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.
உதாரணம் :
நடந்து, கண்டு, படித்து.
வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?
இலக்கண விளக்கம் :
"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."
வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
உதாரணம் :
"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?
அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்
விடை : ஈ.கொடுத்தவள்
(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)
ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்
தொழிற்பெயர்
தொழிற்பெயர் என்றால் என்ன ?
ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்.. பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.
உதாரணம் :
'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?
அ.வாழ்க
ஆ.வாழ்வீர்
இ.வாழ்ந்தார்
ஈ.வாழ்தல்
விடை :
ஈ. வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)
*******
தன்வினை வாக்கியம்
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
எ.கா :
•முருகன் திருந்தினான்.
•பாடம் கற்றேன்.
•நான் நேற்று வந்தேன்.
•கவிதா பொம்மை செய்தாள்.
•நண்பர் வீட்டில் விருந்து உண்டான்.
•மன்னர் நாட்டை ஆண்டார்.
•கலையரசி பாடம் கற்றான்.
•கண்ணன் இலக்கணம் பயின்றாள்.
•செல்வி பாடம் கற்றாள்.
பிறவினை
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
எ.கா :
•ஆசிரியை பாடம் கற்பித்தார்.
•அவன் திருத்தினான்.
•ராமன் பாடம் படிப்பித்தான்.
•கோதை நடனம் ஆட்டுவித்தாள்.
•ஆசிரியர் பாடம் பயிற்றுவித்தார்.
•கலையரசி பாடம் கற்பித்தான்.
•நண்பனை விருந்து உண்பித்தேன்.
•கவிதா பொம்மை செய்வித்தாள்.
•தாய் குழந்தைக்கு உணவை உண்பித்தாள்.
செய்வினை:
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும்.
எ.கா: அம்மு வேலை(ல்+ஐ) செய்தாள்
‘ஐ’ உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும்.
செயப்பாட்டு வினை:
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ‘ஆல்’ என் மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு ‘படு’, ‘பட்டது’ என்னும் சொற்களைச் சேர்க்க வேண்டும். (படு துணை வினை)