TNPSC CHANNEL
ஆறாம் வகுப்பு அறிவியல்
மூன்றாம் பருவம்
அலகு 5 அன்றாட வாழ்வில் தாவரங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு:
Question 1.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
அ) வாத்து ஆ) கிளி
இ) ஓசனிச்சிட்டு ஈ) புறா
விடை: இ) ஓசனிச்சிட்டு
Question 2.
இயற்கையான கொசு விரட்டி
அ) ஜாதிக்காய்
ஆ) மூங்கில்
இ) இஞ்சி
ஈ) வேம்பு
விடை: ஈ) வேம்பு
Question 3.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
அ) உருளைக்கிழங்கு
ஆ) கேரட்
இ) முள்ளங்கி
ஈ) டர்னிப்
விடை:
அ) உருளைக்கிழங்கு
Question 4.
பின்வருவனவற்றுள் எது வைட்டமின் ‘C’ குறைபாட்டைப் போக்குகிறது?
அ) நெல்லி
ஆ) துளசி
இ) மஞ்சள்
ஈ) சோற்று கற்றாழை
விடை:
அ) நெல்லி
Question 5.
இந்தியாவின் தேசிய மரம் எது?
அ) வேப்பமரம்
ஆ) பலா மரம்
இ) ஆலமரம்
ஈ) மாமரம்
விடை:
இ) ஆலமரம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக :
Question 1.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _____ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விடை:
16
Question 2.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
விடை:
பருத்தி
Question 3.
நான் தமிழ்நாட்டின் மாநில மரம் நான் யார்? _______
விடை:
பனை
Question 4.
______ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.
விடை:
துளசி
Question 5.
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ண க் கூடிய பருப்புகள் (அ) விதைகள் ______ எனப்படுகின்றன.
விடை:
பயிறு வகைகள்
III. சரியா? தவறா? தவறாக இருந்தால் சரியாக விடையை எழுதுக.
Question 1.
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
தவறு. அலங்காரத் தாவரங்கள்
Question 2.
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.
விடை:
சரி
Question 3.
அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.
விடை:
தவறு – உணவு தாவரம்.
Question 4.
கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.
விடை:
தவறு – கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.
Question 5.
கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.
விடை:
தவறு – சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது.
V. ஒப்பிடுக.
Question 1.
மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : _______
விடை:
தானியம்
Question 2.
தென்னை : நார் :: ரோஜா : _____
விடை:
அத்தர்
Question 3.
தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் :: மண்புழு : ______
விடை: மண்புழு உரம் தயாரிப்பாளர்